Tuesday, June 12, 2012

எண்ணச்சிதறல்கள்-3 !!!


தென்றலிலே மிதந்து வரும் தேவதை
எனக்கூற கேட்டிருக்கிறேன்
ஆனால் இங்கே...
தேவதையே தென்றலாக வருகிறது
என் முன்னே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

கண்மூடி எனை நினைத்து
உறங்கடி தோழி
கனவில் என்னை காண.....
நானும் கண்மூடி
எனை மட்டும் நினைத்து
உறங்குகிறேன் கனவில்
உன்னை மட்டும் காண !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

நான் வார்த்தை வர
திண்டாட்டத்தில் இருந்தால்
எனக்கான வார்த்தைகள் கூறி
நீ முடிப்பாய்,
அது பிடித்து இருக்கு !!!

இம் என்ற ஒற்றைச்சொல்லில்
ஓராயிரம் அர்த்தங்களை
புரியவைக்கிறாய்,
அது பிடித்து இருக்கு !!!

தொடரும் நமது உறவு
பந்தத்தில் எனக்கான
உரிமைகள் நீ தருவது
பிடித்து இருக்கு !!!

காதல் பேசுகையில்
தொடர்ந்து நீ பேசும்
அர்த்தங்கள் புரியாமல் விழிக்க
"ஐ லவ் யு" என்பதை
வேறுவிதமாக சொன்னேன் என
நீ சொல்வது பிடித்து இருக்கு !!!

உனக்கான மாலை
சூடும் வேலையில் எனக்கான
வெட்கத்தையும் சேர்த்து
நீயே எடுத்து கொள்கிறாய்
அதுவும் பிடித்து இருக்கு !!!

என் காதல் உன் காதல்
என பிரித்து சொல்லாது
நம் காதல் என நீ சொல்வது
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
.

Sunday, June 3, 2012

எண்ணச்சிதறல்கள்-2 !!!

விடிகின்ற பொழுது உன்னோடு
விடிய வேண்டும்...
நினைக்கின்ற பொழுது
நீ என்னுடன் வேண்டும்...

நாளை நடப்பவை
நமக்கே ஆனாலும்
நிந்தன் அருகாமை
இல்லாத பொழுதுகள்
என்னுடன் இருந்தால் என்ன?
இல்லாமல் என் இளமைதான்
சுட்டால் என்ன?

நீ பார்த்த பார்வைகளும்
உன் கண்கள் பேசிய
மொழிகளும் சிறிது
நேரம்தான் என்றாலும்
உந்தன் காதல்
பூத்த கணம்
என்னுள்ளே இன்றும்
இன்னும் இனிக்குதடி

இரு தோளிலும்
பூமாலைகள் சேரும்
காலம் வரும் வரை
உனக்கான என் காத்திருப்பும்
எனக்கான உன் காத்திருப்பும்
சிறிதே கசந்தாலும்
இனிக்கவே செய்கிறதடி
நான் உன்னை அடையும்
அந்நாளை எண்ணி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

தென்றல் வீசினாலே
தாங்காத என் மனசு
தமிழே தென்றலாய்
வீசினால் என் செய்வேன்???

அழகிய வண்ணம் கண்டாலே
சொக்கும் மனதை
வானவில் வண்ணமாய் நீ
வந்தால் என் செய்வேன்???

நல்லிசை கேட்டாலே
மயங்கும் மனதை
உன் குரல் ஒலிக்கும் நேரம்
மட்டும் எவ்வாறு
கட்டுக்குள் வைப்பேன்???

நீ பார்த்த பார்வைகள்
நீ பேசிய பொழுதுகள்
நீ கூறிய வார்த்தைகள்
எங்கும் நீயாய் இருக்கையில்
என்னுள் மட்டும் நீ அல்லாது
வேறொருவர் இருக்க
வாய்ப்புகளும் உளவோ?

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

.

Friday, May 25, 2012

எண்ணச்சிதறல்கள்-1 !!!


தமிழே இனி நீ
என் வாழ்வானால்
நானும் சிறப்பேன்
தமிழும் சிறக்கும்...

உனைக்கண்ட அந்நாள்
முதல் இந்நாள் வரை
என்னுள் இருக்கும் நான்
நானாக மட்டும் இல்லை...
நீயுமாகத்தான் நான்....

உலகம் மிக எளிமையாக
சொல்லி விட முடியும்
இது பைத்தியமென்று...
எனக்கு மட்டும் தானே தெரியும்
இது காதல் பைத்தியம்
மட்டும் அல்ல....

அதற்கும் மேலே
உன் மூளைக்குள்
நானும் ஓர் மூலை
என்றாலும்
நீயே நானே
நானே நீயே என !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

அன்று என்னுள் பூத்தது
நீ மட்டும் அல்ல...
உனக்கானா நானும்
எனக்கான நீயும்தான் !!!!

உன் புன்சிரிப்பில்
மலர்ந்தது நான் மட்டும் அல்ல....
உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும் தான் !!!

உனக்கான என் காத்திருத்தல்
ஓரிரு மாதங்கள் எனினும்
உனை மட்டும் பார்த்திருந்தேன்
உன் கண் அசைவிற்காக மட்டும்
காத்திருந்தேன்.....

ஓரிரு மாதங்கள் மட்டும் அல்ல...
நீதான் என் வாழ்வென்றால்
வாழ்நாள் வரை உனக்காக
காத்திருக்க நான்
என்றுமே தயார் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

ஒவ்வொரு முறையும்
நீ சொன்னது தான்
எனைச்சுற்றி ஒலிக்கின்றதடி !!!

என் வாழ்வில்
சோகம் மீட்டிய
சுகம் நீயடி !!!

வறண்டிருந்த என்
நெஞ்சினில் வைகையாய்
நீ நுழைந்தாயடி !!!

சுற்றம் எனும் மாயை
சூழ் உலகில்
நீயே என் சுடர் விளக்கடி !!!

இத்துணை நாளாய்
பிற உலகு சூழ் நான்
இன்று முதல்
உன் மற்றும் என்
எண்ணச்சுயற்சியில்
நீயும் நானும்
மற்றும்
நம் எண்ணங்களும் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

.

Friday, April 20, 2012

எண்ணச்சிதறல்கள் !!!

 

உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும்
இரயில் தண்டவாளம் போல்
சேர்ந்தே பயணிக்கிறது...
கடைசிவரை
ஒன்றை ஒன்று
தொடாமலே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 
போ போ என்கிற
உன் உதட்டின்
வார்த்தைக்கும்
வா வா என்கிற
உன் கண்ணின்
மொழிக்கும்
வித்தியாச அர்த்தங்கள்
தேடியே என் நாட்கள்  
நீளுதடி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உலகில் மொழிகள் பல...
முயற்சிகள் செய்து அதில்
நான் கற்றது சில...
எல்லாவித முயற்சிகள்
செய்தும் ஒன்றில் மட்டும்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
அது உன் கண்கள் 
பேசும் மொழியன்றி 
வேறென்ன தோழியே ??? 

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கான ஒவ்வொரு
காத்திருத்தல் முடிவிலும்
நீ என்னிடம்
மன்னிப்பு கேட்கும் முன்
நான் உன்னிடம்
நன்றி சொல்லுவேன்.....
ஏனெனில் உனக்கான
என் காத்திருத்தல்
முழுதும் உன் எண்ணங்களே
நிறைந்திருப்பதால் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
டிஸ்கி : கவிதை எழுதணும்னா, காதலிச்சாதான் முடியும்னா  அப்ப சரித்திரம், த்ரில்லர், க்ரைம் எழுதுறவங்க எல்லாம் அதெல்லாம் செஞ்சிப்பார்த்தா எழுதுறாங்க ??
சும்மா தகவலுக்கு....!!!
.

Thursday, April 12, 2012

நீ...நான் !!!


தேவதையாய் யாராவது  
பார்த்ததுண்டோ?
தினமும் நான்
உன்னுருவில் பார்க்கின்றேன்....

மின்னலை யாராவது
அருகில் கண்டதுண்டோ?
தினமும் நான்
உன் கண்களில் காண்கின்றேன்...

முழுமதியோடு யாராவது
பேசியதுண்டோ?
தினமும் நான்
உன்னுடன் பேசுகின்றேன்....

மலர்கள்  சிரிப்பதை யாராவது
கண்டதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு சிரித்து மலர்கின்றேன்...

தென்றல் காற்றோடு யாராவது
வாழ்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு வாழ்ந்து மகிழ்கின்றேன்...

ஓவியங்கள் என்றாவது
காதல் செய்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு காதலில் திளைக்கின்றேன்...

ஆம்..நீ எனக்கு

தேவதை
மின்னல்
முழுமதி
மலர்கள்
தென்றல்
ஓவியம்
இன்னும் பல...

நான் மட்டும்
உனக்கு என்றுமே
நான்தான்.....உன்னனைத்துமே
நான் மட்டும்தான் !!!
.

Sunday, April 8, 2012

உன் எண்ணத்தீண்டாமை !!!

நண்பனே,

குருதியைப்போலத்தான்....
உனது எண்ணங்கள்
என்னுள் பாய்கின்றது....
மூச்சின் கடைசி சுவாசம்
எனைவிட்டு பிரிந்தாலும்
உனது நினைவுகள்
எனைவிட்டு பிரியாது...

உயிரின் கடைசி
நொடி வரை உன்
நினைவுகள் என்றும்
எந்தன் உள்ளத்தின்
உள்ளுக்குள் ஓர்
அழியாச்சுடர் விளக்கே...
அழிக்க உனக்கோ
எனக்கோ யாதும்
துர் நிகழ்வில்லை...

சிறுசிறு இன்பங்கள்
எதிர்பார்க்கும் இப்பூவலகில்
உன் சிரிப்பைத்தவிர
நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை...
உன் மகிழ்ச்சியில்
பல பொழுதுகளை
தொலைத்தவன் நான்...

இன்று
எனக்கும் அறியாது
என்மேல் உனக்கு ஏன்
இத்தனை வன்மம்...
நான் உனக்கு
நினைத்தது யாவும்
நன்மையன்றே தவிரே
யாதும் தீதில்லை....

உன் கோபங்களை
எனக்கும் விளக்காது...
ஊருக்கும் சொல்லாது...
இன்று எனை மட்டும்
தனியாய் விடுத்து
சென்றது ஏனோ ???

உன்னுள் இருக்கும்
எண்ணங்கள் எனை
தீண்டாமல் செல்வது
நியாயமோ???
தீண்டாமை ஒரு பாவச்செயல்
என உனக்கு தெரியாதா???
உன் எண்ணத்தீண்டாமை
எனைக்கொல்லுதடா....

வேற்றுருவில் வந்தாலும்
வேறு பல சென்மம் எடுத்தாலும்
எனக்கு ஒரு பதில்
கூறி செல்லடா !!!
நான் செய்த பிழை
என்னதான் என எனக்கு
விளக்கிச்செல்லடா !!!
.

Sunday, March 25, 2012

நானும் பறவையே !!!



நான் பறவை....
நாடு கடத்தப்பட்ட பறவை....
கண்ணைக்கட்டி கூட்டுக்குள்
அடைக்கப்பட்ட பறவை...
சுதந்திரமாய் பறக்க
மறந்து போன பறவை...
சிற்றின்ப உலகத்தில்
சிதைந்து போன பறவை...
நல்லார் தீயார்
பேதம் அறியா பறவை...


பறவைக்கும் மனம் உண்டு...
ஆம்...எனக்கும் மனம் உண்டு....
அதில், என்றும் நீ உண்டு...
எனது இறக்கைகள் ஒவ்வொன்றாக
வெட்டப்பட்டாலும்
உனக்காக நான்
மேன்மேலும் பறப்பேன்...
உலகம் சுயநலத்திற்காக
என்மீது சவாரி செய்தாலும்
என் பயணம் உனை  
நோக்கித்தான் என்றும்....
கண்காணா ஜோடிப்பறவையே
உனைநோக்கித்தான்
என் பயணம் என்றும் !!!
எங்கு நீயோ....
அங்கு நீயே
நானாக விழைகிறேன்...
என் மனத்தீயை
உன் அருகாமை எனும்
குளிர்த்தீயில் இழக்க விழைகிறேன்...
எனக்காக காத்திருப்பாய் என
உனை நோக்கி பறக்கும்
பறவை நான்...
ஆம்....நானும் பறவையே !!!
.