Thursday, July 22, 2010

சீனு டைம்ஸ்....

நேத்து, எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை எல்லாருக்கும் அனுப்பி வச்சேன். அதோடு தலைப்பு, "வாழுகிறேன் கணிப்பொறியோடு". கொஞ்ச நேரத்தில ரெண்டு நண்பர்கள்ட்ட இருந்து தொலைபேசி அழைப்பு.... இருவரும் கேட்ட கேள்வி ஒன்னுதான். "யாருடா அது கனிமொழி", அவ கூட எப்பத்திலிருந்து வாழுற??. ங்கொய்யால, ஒழுங்கா படிங்கடா, அது கணிப்பொறி. என்ன பார்த்தா மட்டும் தான் இப்படியா, இல்ல..., என்ன கொடுமை சீனு இது???

*****************************************************************************************

Knight and Day படம் ஒரு மூணு வாரம் முன்னாடி, இங்க ரிலீஸ் ஆனப்ப போய்ப்பார்த்தேன். JAMES BOND படங்களின் சாயல் இருந்தது....Tom Cruise பறந்துகிட்டே இருக்கார்.....எல்லாரயும் பொளந்துகிட்டே இருக்கார் படம் முழுக்க...இந்த மாதிரி ஹாலிவுட் ஆக்க்ஷன் படங்கள்லாம் (Transporter, Terminator, MI Series..etc) நம்ம கைதட்டி பாக்கிறோம்...ஆஹா..ஓஹோனு பாராட்டி தள்ளுவோம், லாஜிக்லாம் பார்க்கவே மாட்டோம். ஆனா இதையே, இளையதளபதி டாக்டர் விஜய்யோ, தல அஜித்தோ பண்ணும் போது மட்டும், உலக கேள்விகள் கேப்போம், பதிவெழுதி கிழி கிழின்னு கிழிப்போம். என்னங்க நியாயம் இது??? TOM CRUISE கார்ல பறந்து பறந்து ஓட்டினா OK, ஆனா இளையதளபதி டாக்டர் விஜய் மட்டும் accelerator வயர வாய்லயே இழுத்துகிட்டு கார் ஓட்டினா, நம்ம எல்லாம் சேர்ந்து அவர ஓட்றது... என்னங்க நியாயம் இது??? எல்லாரயும் சமமா பாருங்க.....(இது சத்தியமா பகடி இல்ல, உயர்வு நவிற்சி இல்ல, வஞ்ச புகழ்ச்சியும் இல்லீங்கோ...)
*****************************************************************************************
சில படங்கள் பார்ர்கும்போது, ஒரு சிலர் கேக்கிற கேள்விக்கு விடைகளே தெரிவதில்லை.... நீங்களாவது முயற்சி பண்ணுங்களேன்.

1. உன்னை போல் ஒருவன் - ராணிபேட்டை ராஜேஸ்வரி தியேட்டர்ல, படம் இடைவேளைல ஒருத்தர் என் பின்னாடி இருந்து இப்படி வருத்தப்பட்டார், "அதுக்குள்ள இடைவேளையா, என்னாங்கடா, ஒரு டூயட் கூட போடல??" (மோகன்லால் - லக்ஷ்மி, கமல்-அனுஜா, பரத் ரெட்டி- பூனம்...யாருக்குடா இந்த கதையில டூயட் வைக்கறது... ...முடியல..)

2. Delhi-6 -"கடைசி வரைக்கும், அந்த குரங்கை காட்டவே இல்லையேப்பா"?

3. ஹேராம் படம் முடிச்சிட்டு வெளில வரும்போது, ஆற்காடு ஜோதி தியேட்டர் வாசல்ல ஒருத்தன் கேட்டான், "ஏன் படத்துல, காந்தி ரெண்டு முறை செத்து போறாரு ??"
*****************************************************************************************

என் கிளைகளை
நறுக்கும் தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில் நழுவும் என்
வேர்களை என்ன செய்வாய்?”

இதை யார் எழுதியது என்று தெரியவில்லை....
எனக்கு படிச்சவுடனே பிடிச்சது !!....
***************************************************************************************** நேத்து, எனக்கு பிடிச்ச ரெண்டு ஹிந்தி படம் UTV சேனல்ல தொடர்ந்து போட்டாங்க. Delhi-6 & Dil Chahtha Hai. Delhi-6 படத்தில, "தில் மேரா" னு ஒரு பாட்டு ரொம்ப அழகா எடுத்திருப்பாங்க. அந்த பாட்டு எடுத்த விதம், வாத்தியார் சுஜாதா கதை எழுதும் நடை மாதிரியே இருந்தது. Nostalgic Memories of the great Sujatha...சுஜாதா இன்னும் கொஞ்ச நாள் (atleast ஒரு இருபது வருஷம்) இருந்து இருக்கலாம். We miss you, வாத்தியாரே.
*****************************************************************************************

Thursday, July 15, 2010

நகைச்சுவை !!!








Tuesday, July 13, 2010

ஒப்பீடு செய்தல் - ஒரு பார்வை !!!



சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த ஒப்பீடு செய்து பார்க்கும் மனிதர்கள் பிடிக்கவே பிடிக்காது. நிறைய அப்பாக்கள், அம்மாக்கள் மற்றும் இன்ன பிறர்கள் ஏதாவதொரு தருணத்தில் கண்டிப்பா இதை பயன்படுத்தி இருப்பாங்க.


"மேல்வீட்டு பொண்ணு பாரு, 450 மார்க் எடுத்து இருக்க....நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க்க???"


"எதிர்வீட்டு பையன் Software Engineer ஆக இருக்கான்..நீயுந்தான் இருக்கியே !!!"


"அவரு மனைவிக்கு துணி துவைச்சி குடுக்கறாரு, காய்கறி நறுக்கி தறாரு...ஆனா நீங்க??"


இன்னும் சில பேர் ரொம்ப கேவலமா பேசுவாங்க...."அவன்/அவள் மூத்திரம் வாங்கி குடி, அப்பத்தான் உனக்கு புத்தி வரும்." (என்னாங்கடா, அது என்ன காபியா, டீயா இல்ல பீரா???)


நாடோடிகள் படத்தில் ஒரு நல்ல வசனம் வரும். "எனக்கு தெரிந்த வரலாறு, Comp engineerக்கு தெரியாது, அவனுக்கு தெரிந்த Software எனக்கு தெரியாது, மொத்தத்தில எல்லாம் ஒன்னுதான்". யாரையும் ஒப்பீடு செய்து கொல்ல கூடாது. அவங்க அவங்களுக்கு என்ன வருமோ, அதுல சிறப்பா வளர உதவி செய்யணும். இல்லையென்றால் யதார்த்தம் என்னவோ, அதை புரிய வைக்கணும். அதை விட்டுபோட்டு, ச்சும்மா "அவன் அப்படி பண்ணிட்டான், இவ இப்படி பண்ணிட்டா, நீ எப்படித்தான் பண்ணுவியோ"னு மண்டையடி, வசையடி கொடுக்கக்கூடாது.




நிற்க, தலைப்புக்கு வருவோம். ஏன் நாம எல்லோரும் கூட, நடைமுறை வாழ்க்கைல ஒப்பீடாம இருக்கறதே இல்ல.


"அவனுக்கு ஊதிய உயர்வு நிறைய கொடுத்து இருக்காங்க "


"நீ என்னப்பா, பெரிய ஆளு, சும்மா சல்லுனு "கார்"ல வருவே, நான் கஷ்டப்பட்டு "பைக்"ல தான் வரணும்"


என்னோட எண்ணம் என்னவென்றால், ஒப்பீடு கொஞ்சம் கொஞ்சமாக பொறாமை என்னும் கொடுமையில் தள்ளி விடும். நமக்கு என்ன விதிக்கப்படுகிறதோ, கிடைக்கப்பெறுவதோ, எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம். நம்மில் உள்ள குறைகள் களையனும், அதை தவிர்த்து பிறர் நிறை கண்டு புழுங்குவது முட்டாள்த்தனம். நம் வளர்ச்சியை நாமே கெடுப்பதிற்கு நிகர்.


அடுத்து, நம்மை தவிர்த்த மற்ற விஷயங்களில் ஒப்பீடு செய்வதை பார்ப்போம்.


சிவாஜியா? கமலா?


பீட் சாம்ப்ராஸ்? ரோஜர் பெடரர்?


பிராட்மன்? சச்சின்?


இந்த ஒப்பீடுகள் எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்?. ஏனென்றால் அவங்க வாழ்ந்த காலகட்டங்கள் வேறு வேறு. வாழும் தரம், தொழில்நுட்பம், இன்னும் எவ்வளவோ விஷயங்கள் மாறிகிட்டே வரும் நிலையில், வேறு வேறு காலங்களில் தாம் சார்ந்த துறையில் சிறந்து விளங்கியவர்களை / விளங்குபவர்களை ஒப்பீடு செய்தல் முற்றிலும் தவறு என்பதே என் கருத்து. இது தவிர, எம்.ஜி.ஆர். - சிவாஜி, கமல்-ரஜினி, சச்சின்-லாரா, ரோஜர்-நடால் என நிறைய ஒப்பீடு செய்யலாம். எல்லாவற்றையும் திறந்த மனதோடு ஒப்பிட்டால், அதே நாடோடிகள் வசனம் தான் வரும்."அவனுக்கு தெரிஞ்சுது இவனுக்கு தெரியல, இவனுக்கு தெரிஞ்சுது அவனுக்கு தெரியல, மொத்தத்தில எல்லாம் ஒன்னுதான். ரஜினி கூட விஜய் டிவில நடந்த கமல்-50 விழாவில் சொல்லி இருப்பார், " அவர் தொட்டதை நான் தொடலை, நான் கொஞ்சம் ரூட்ட மாத்தினேன்". இது கமலுக்கும் பொருந்தும். கற்பனை பண்ணி பாருங்கோ...கமல் பஞ்ச் டையலாக்  பேசறது, ரஜினி திரைக்கதை வசனம் எழுதி நடிக்கறது, விஜய் கெட்-அப் மாத்தறது(Friends படம்-என்ன கொடுமை டாக்டர், இளைய தளபதி), அஜித் நல்லா நடனம் ஆடறது.....முடியல ....இத்தோடு நிறுத்திக்கலாம்.




என்னதான்பா சொல்ல வரேன்னு நீங்க கேக்கறது தெரியுது? ஒப்பீடு மிக அவசியம் தான். எங்கு என்றால், உதாரணமாக ஒரு பொருள் வாங்கும் முன் ஒப்பீடு மிக அவசியம். நமக்கு எது பயன் தருமோ அதை வாங்க, இரு மற்றும் பல பொருட்களிடையே ஒப்பீடு தேவை தான்.ஒப்பீடு எங்கு தேவையோ, அங்கு மட்டும் பயன்படுத்தலாம்.


டிஸ்கி:- தனி மனித வாழக்கையில் ஒப்பீடு(compare) பண்றவங்க எனக்கு சுத்தமா பிடிக்காது. அதை பத்தி எழுதியே ஆகணும்னு தோணிச்சி....எழுதிட்டேன்...என்ன, கொஞ்சம் மொக்கையா போச்சு...கண்டுக்காம, ப்ரீயா விடுங்க ப்ளீஸ்.
முதல்ல இருக்கற படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க..... ஒரு விளம்பரம் தான்.


.

Saturday, July 3, 2010

I Hate Luv Storys


 
போன தடவை கரண் ஜோகர் தயாரிப்பில் "Wake Up Sid" படம் பார்த்தேன். படம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு இந்த மாதிரி "Feel Good" & "Soft Movies" ரொம்பவே பிடிக்கும். மறுபடியும் KJ தயாரிப்பு தான் "I Hate Luv Storys", அதுவும் இல்லாம சோனம் கபூர் சமீப காலங்களில் என்னை கவர்ந்த நடிகை மற்றும் அழகு பிசாசு. படத்தின் promos நல்லா இருந்ததால இந்த வாரக்கடைசியில படம் பார்த்தாச்சு. 
 பக்கம் பக்கமா படத்த பத்தி சொல்றத விட சுருக்கமா சொல்லிடறேன்.

  •  சோனம் கபூர்க்காகவே கண்டிப்பா படத்தை பார்க்கலாம். அம்மணி அம்புட்டு அழகு. சில பேர் இந்த பொண்ணு கிட்ட ஏதோ missingனு சொல்றாங்க. எனக்கு அப்படி எதுவுமே தெரியல. ஓவ்வொரு காலகட்டத்தில நமக்கு சில பெண்களை ரொம்ப பிடிக்கும். இப்போதைக்கு சோனம் செம HOT மச்சி !!! படத்தில அவ்ளோ அழகா இருக்குது....நல்லாவும் நடிக்குது அம்மணி. 

  • இம்ரான்கான் "ஜானே து" படத்திற்கு அப்புறம் ஒரு சூப்பரான ரோல். ரொம்ப நிறைவா நடிச்சி இருக்கார். சில இடங்களில் அவர் காட்டும் சின்ன சின்ன முகபாவனைகள் cute. ரன்பீர் கபூற்கு அப்புறம் ஒரு நல்ல யூத் ஹீரோ ரெடி.

  • ஒளிப்பதிவாளர் அசத்தி இருக்கார். நல்ல bright lightல படத்தை அனுபவச்சி எடுத்து இருக்கார்.

  •  வசனங்கள் நல்லா இருக்கு. சின்ன சின்ன one-liners சூபர்ப்.

  •  சின்ன சின்ன கதாபாத்திரங்கள் எல்லாம் அருமை. அந்த இயக்குனர், ஹீரோ, இம்ரான் நண்பன்(sprite ad la வர குண்டு ஆளு), அந்த ஹாட் பிரேசில் model, இம்ரான் அம்மா, சோனம் அம்மா எல்லாரும் அவங்க பாத்திரத்தை நிறைவா செஞ்சி இருக்காங்க.

  • இசை ok. Not Good, Not Bad.

  •  திரைக்கதை தான் பெரிய சொதப்பல், முக்கியமா இரண்டாம் பகுதியில் தொய்வு நல்லாவே தெரியுது.

  • சோனம் childhood friend மற்றும் fiance யா வரும் அந்த ஆள் கதாபாத்திரம் சொதப்பல்...ரொம்ப பரிதாபமா இருக்கு....
 இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் படா ஹிட் ஆகி இருக்கும். ஆனாலும் சோனம் & இம்ரானுக்காக கண்டிப்பா படம் பார்க்கலாம். They just light up the screen by thier presence.

Thursday, July 1, 2010

வெறுமை !!!



வெறுமை !!! வெறுமை !!! வெறுமை !!!

எங்கு நோக்கினும்
வெறுமையடா நாராயணா !!!

வெறுமை எனை
கொல்லுதடா நாராயணா !!!
வேற்றுலகக்கு
கொஞ்ச நாள்
எனை கூட்டி
செல்லடா நாராயணா !!!


என்ன இல்லை
இந்நாட்டில்?
எண்ணெய் உண்டு !!!
இயற்கை வாயு உண்டு !!!
அதன் பொருட்டு
வேலையும் உண்டு !!!
கை நிறைய
காசும் உண்டு !!!


யார் இல்லை
இந்நாட்டில்?
அரவணைக்க,
நலம் காக்க
நண்பர்கள் உண்டு !!!
அன்பர்கள் உண்டு !!!

பின்

ஏன் இந்த வெறுமை?
இன்னும்
எத்தனை நாள் இந்த கொடுமை?


நல்வழிப்படுத்து
நாராயணா !!!
நலம் காத்திடு
நாராயணா !!!