Tuesday, July 13, 2010
ஒப்பீடு செய்தல் - ஒரு பார்வை !!!
சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்த ஒப்பீடு செய்து பார்க்கும் மனிதர்கள் பிடிக்கவே பிடிக்காது. நிறைய அப்பாக்கள், அம்மாக்கள் மற்றும் இன்ன பிறர்கள் ஏதாவதொரு தருணத்தில் கண்டிப்பா இதை பயன்படுத்தி இருப்பாங்க.
"மேல்வீட்டு பொண்ணு பாரு, 450 மார்க் எடுத்து இருக்க....நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க்க???"
"எதிர்வீட்டு பையன் Software Engineer ஆக இருக்கான்..நீயுந்தான் இருக்கியே !!!"
"அவரு மனைவிக்கு துணி துவைச்சி குடுக்கறாரு, காய்கறி நறுக்கி தறாரு...ஆனா நீங்க??"
இன்னும் சில பேர் ரொம்ப கேவலமா பேசுவாங்க...."அவன்/அவள் மூத்திரம் வாங்கி குடி, அப்பத்தான் உனக்கு புத்தி வரும்." (என்னாங்கடா, அது என்ன காபியா, டீயா இல்ல பீரா???)
நாடோடிகள் படத்தில் ஒரு நல்ல வசனம் வரும். "எனக்கு தெரிந்த வரலாறு, Comp engineerக்கு தெரியாது, அவனுக்கு தெரிந்த Software எனக்கு தெரியாது, மொத்தத்தில எல்லாம் ஒன்னுதான்". யாரையும் ஒப்பீடு செய்து கொல்ல கூடாது. அவங்க அவங்களுக்கு என்ன வருமோ, அதுல சிறப்பா வளர உதவி செய்யணும். இல்லையென்றால் யதார்த்தம் என்னவோ, அதை புரிய வைக்கணும். அதை விட்டுபோட்டு, ச்சும்மா "அவன் அப்படி பண்ணிட்டான், இவ இப்படி பண்ணிட்டா, நீ எப்படித்தான் பண்ணுவியோ"னு மண்டையடி, வசையடி கொடுக்கக்கூடாது.
நிற்க, தலைப்புக்கு வருவோம். ஏன் நாம எல்லோரும் கூட, நடைமுறை வாழ்க்கைல ஒப்பீடாம இருக்கறதே இல்ல.
"அவனுக்கு ஊதிய உயர்வு நிறைய கொடுத்து இருக்காங்க "
"நீ என்னப்பா, பெரிய ஆளு, சும்மா சல்லுனு "கார்"ல வருவே, நான் கஷ்டப்பட்டு "பைக்"ல தான் வரணும்"
என்னோட எண்ணம் என்னவென்றால், ஒப்பீடு கொஞ்சம் கொஞ்சமாக பொறாமை என்னும் கொடுமையில் தள்ளி விடும். நமக்கு என்ன விதிக்கப்படுகிறதோ, கிடைக்கப்பெறுவதோ, எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம். நம்மில் உள்ள குறைகள் களையனும், அதை தவிர்த்து பிறர் நிறை கண்டு புழுங்குவது முட்டாள்த்தனம். நம் வளர்ச்சியை நாமே கெடுப்பதிற்கு நிகர்.
அடுத்து, நம்மை தவிர்த்த மற்ற விஷயங்களில் ஒப்பீடு செய்வதை பார்ப்போம்.
சிவாஜியா? கமலா?
பீட் சாம்ப்ராஸ்? ரோஜர் பெடரர்?
பிராட்மன்? சச்சின்?
இந்த ஒப்பீடுகள் எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்?. ஏனென்றால் அவங்க வாழ்ந்த காலகட்டங்கள் வேறு வேறு. வாழும் தரம், தொழில்நுட்பம், இன்னும் எவ்வளவோ விஷயங்கள் மாறிகிட்டே வரும் நிலையில், வேறு வேறு காலங்களில் தாம் சார்ந்த துறையில் சிறந்து விளங்கியவர்களை / விளங்குபவர்களை ஒப்பீடு செய்தல் முற்றிலும் தவறு என்பதே என் கருத்து. இது தவிர, எம்.ஜி.ஆர். - சிவாஜி, கமல்-ரஜினி, சச்சின்-லாரா, ரோஜர்-நடால் என நிறைய ஒப்பீடு செய்யலாம். எல்லாவற்றையும் திறந்த மனதோடு ஒப்பிட்டால், அதே நாடோடிகள் வசனம் தான் வரும்."அவனுக்கு தெரிஞ்சுது இவனுக்கு தெரியல, இவனுக்கு தெரிஞ்சுது அவனுக்கு தெரியல, மொத்தத்தில எல்லாம் ஒன்னுதான். ரஜினி கூட விஜய் டிவில நடந்த கமல்-50 விழாவில் சொல்லி இருப்பார், " அவர் தொட்டதை நான் தொடலை, நான் கொஞ்சம் ரூட்ட மாத்தினேன்". இது கமலுக்கும் பொருந்தும். கற்பனை பண்ணி பாருங்கோ...கமல் பஞ்ச் டையலாக் பேசறது, ரஜினி திரைக்கதை வசனம் எழுதி நடிக்கறது, விஜய் கெட்-அப் மாத்தறது(Friends படம்-என்ன கொடுமை டாக்டர், இளைய தளபதி), அஜித் நல்லா நடனம் ஆடறது.....முடியல ....இத்தோடு நிறுத்திக்கலாம்.
என்னதான்பா சொல்ல வரேன்னு நீங்க கேக்கறது தெரியுது? ஒப்பீடு மிக அவசியம் தான். எங்கு என்றால், உதாரணமாக ஒரு பொருள் வாங்கும் முன் ஒப்பீடு மிக அவசியம். நமக்கு எது பயன் தருமோ அதை வாங்க, இரு மற்றும் பல பொருட்களிடையே ஒப்பீடு தேவை தான்.ஒப்பீடு எங்கு தேவையோ, அங்கு மட்டும் பயன்படுத்தலாம்.
டிஸ்கி:- தனி மனித வாழக்கையில் ஒப்பீடு(compare) பண்றவங்க எனக்கு சுத்தமா பிடிக்காது. அதை பத்தி எழுதியே ஆகணும்னு தோணிச்சி....எழுதிட்டேன்...என்ன, கொஞ்சம் மொக்கையா போச்சு...கண்டுக்காம, ப்ரீயா விடுங்க ப்ளீஸ்.
முதல்ல இருக்கற படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க..... ஒரு விளம்பரம் தான்.
.
Labels:
ஒப்பீடு
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
மொக்கை எல்லாம் இல்லை, நன்றாக தான் எழுதி உள்ளீர்கள்.
ஒப்பீடுதலில் பல குறைன்கள் இருக்கிட்றன. ஆனால் அதில் உள்ள ஒரு நன்மை, அது தான் நம்மை தொடர் முன்னேற்றத்திற்கு, இயக்கத்திற்கு ஊன்று கோலாய் இருக்கிறது.
உதாரணமாக- உங்களுக்கு வேலை கிடைக்கிறது மாதம் ஒரு லட்சம் சம்பளம் என்று இருக்கிறீர்கள்.
சக ஊழியருக்கு அல்லது அடுத்த வீடு காரரின் சம்பளம் ஒரு லட்சத்து இருபதாயிரம் என்ற உடன், உங்கள் மனதில் ஒரு வேகம் வருகிறது, நானும் அவர் அளவிற்கு அல்லது அவரை விட கூடுதல் சம்பளம் வாங்க முயற்சி செய்கிறேன் என்று.
ஒப்பிடுதல், போட்டி , ஊக்க தொகை (staff incentive, business awards schemes) போன்றவை தோன்றிய காரணங்களை நாம் என்ன வேண்டும். ஒப்பெடுதல் இல்லாவிடில் போடும் (podhum) என்ற மனப்பான்மை வந்து நம் வாழ்வில் இயக்கங்களை, ஆசைகளை குறைத்து கொள்வோம்.
நன்றி ராம்ஜி...நீங்கள் சொல்வது சரிதான். ஒப்பீடுதல் ஊன்றுகோலாய் இருக்கும் பட்சத்தில் நல்லது தான். நிறைய இடத்தில அது நடவாது தான் பிரச்சினையே...
உங்கள் ஒப்பிடுதலை படித்தேன், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் புரிந்து செயல்பட வேண்டிய ஒரு கருத்து சிறப்பாக இருந்தது, உங்கள் எழுத்து பணி தொடர என் இனிய வாழ்த்துக்கள்.
உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பதை தாண்டி ஒப்பிட்டவரை (உங்களை) உள்ளவரை நீனைவிருக்க வைப்பதாக உள்ளது,-- இது கொஞ்சம் அதிகம்னு நினைக்கிறேன் இருப்பினும் இளம் தலைமுறை எழுத்தாளர்கலுக்கு இது தேவை....
நன்றி சீனி....
நல்ல கருத்துக்கள்!
ஒப்பிடுதல் போட்டியை வளாக்கும் என்பதை விட பொறாமையையில் முடியும் என்பதே சரி.
@ Ezhil...
நன்றி !!!
Good one Seenu.
- Karthik
@ கார்த்திக்,
நன்றி !!!
Post a Comment