நிற்க, ( உட்கார்ந்து இருக்கறவங்க தயவு செய்து எழுந்துடாதிங்க ப்ளீஸ்...)
அது என்ன இப்ப எல்லாரும் இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்துகிறார்கள்? இந்த அளவுக்கு ஆடம்பரமான விளம்பரம் உண்மையாகவே தேவைதானா?? எவ்வளவு பணம் செலவு ஆகும், அந்த காசுக்கு குறைந்த பட்ஜெட்ல ஒரு படமே தயார் செய்து விடலாம் போல. அதுவும் மன்மதன் அம்பு படத்தின் பட்ஜெட்டில், மூன்றில் ஒரு பங்கு படத்தின் விளம்பர செலவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஒதுக்கி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது சரி...பல்லு உள்ளவன் பட்டாணி சாப்பிடறான். நமக்கு தலைவர் படமும் பாடல்களும் வெற்றி பெற்றால் சரிதான்.
****************************************************************************************************
கத்தாரில் WTA சாம்பியன்ஷிப் 2010 டென்னிஸ் போட்டிகள் இந்த வாரம் அக்டோபர் 26ல் துவங்கி 31ல் முடிவடைகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், மகளிர் தரவரிசையில் உள்ள முதல் எட்டு பேர் மட்டும்தான் ஆடுவார்கள். எனவே, நல்ல சிறப்பான போட்டித்தொடர் இருக்கும். வில்லியம்ஸ் சகோதரிகள் விலகி கொண்டதால், இன்னும் ரெண்டு பேர் 9, 10ல இருந்தவங்க வந்துட்டாங்க. ஜெயிச்சா ஏழு கோடி பரிசு...!!! இங்க கீழ இருக்கற 8 அம்மணிகள் தான் விளையாடறாங்க...(ஒரு அம்மணி மட்டும் புகைப்படம் எடுக்க வரலை, விமானம் தாமதமோ !!!)
பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா?
ஊருக்கு போற ஜோர்ல இந்த போட்டிக்கு நுழைவுச்சீட்டு வாங்க மறுந்துட்டேன். நம்மளுக்கு ரொம்ப புடிச்ச கிம் கிளிஜ்ச்டேர்ஸ் வேற ஆடுவதால் என்னடா பண்றது... டிக்கெட் எதுவம் இல்லையே என முழிச்சிகிட்டு இருக்கும் போது அபத்பாந்தவனா என்னோட இந்தோனேசியா நண்பர் அவர் அரை இறுதி ஆட்டத்துக்கு வாங்கிய நுழைவுச்சீட்டை எனக்கு கொடுத்துட்டார். நான் ஏன் முக்கியமா கிம் கிளிஜ்ச்டேர்ஸ் விளையாடறத பாக்க போறேன்னா, அந்த அம்மணி கல்யாணம் பண்ணி அவருக்கு குழந்தை பிறந்த பிறகு மறுபடியும் விளையாட வந்து இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் வென்று இருக்காங்கா... எவ்வளவு கடினமான விஷயம்....?? ஸ்டெபிக்கு அப்புறம் கிம்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச டென்னிஸ் வீராங்கனை. எப்படியாவது கிம் அரை இறுதிக்கு வந்துடுவாங்க என்ற நம்பிக்கையில் சனிக்கிழமை வரை காத்திருக்கிறேன். போன வருஷம், எனக்கு மிகவும் பிடித்த ரோஜர் பெடரரை இங்கு நேரில், அவர் விளையாட பார்த்ததே பெரிய சந்தோஷம். எப்படியும் கிம்மையும் நேரில் பார்த்துட்டு வந்து அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.
****************************************************************************************************
பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா?
சின்ன அய்யா அன்புமணி சவால்! சவால்! சவால்!
ஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போடத்தெரியாது . உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி. - போன வாரத்திய செய்தி இது.
உண்மைதான், மருத்துவர் அய்யா ராமதாஸ் தான் தமிழகத்தின் உண்மையான கதாநாயகன், ஏன்னா அவர்தான் ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு கழக கட்சிகளோடு முட்டி மோதி பார்த்து சண்டை போடறாரே. அப்புறம் சின்ன அய்யாகிட்ட யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன், ஆறு மட்டும் எட்டு பேக் வச்சி இருக்கிற நடிகர்களான சல்மான் கான், ஆமிர் கான் எல்லாம் கூட டூப் போட்டுத்தான் சண்டை காட்சியில நடிக்கறாங்க, அவங்க கிட்டயும் இதே பஞ்ச ரிப்பீட்டலமா (Repeat) என? என்ன கொடுமையா இது, சினிமா எடுக்கறவன் எல்லாம் சண்டை காட்சியில டூப் போட்டுதான்யா எடுப்பான். இப்படியே, அடுத்து காதல் காட்சி, கற்பழிப்பு காட்சி எதுவும் அந்த நடிகர்களுக்கு பண்ணத்தெரியல, எங்கிட்ட வர சொல்லு, நான் எப்படி பண்ணி காட்டுறேன்னு சொல்லுவாரோ???
****************************************************************************************************
.