Friday, October 1, 2010

எந்திரன் - ஒரு மைல்கல்

எந்திரன் - துவக்க காட்சியில் தாடியுடன் ஒரு விஞ்ஞானி ரோபோவை உருவாக்கி கொண்டு இருப்பார்...கிட்ட பார்த்தால்..அட ரஜினிகாந்த். இதுதாங்க படத்தில் ரஜினி அவர்களின் அறிமுகம். இங்க இருந்து முழுக்க முழுக்க ஷங்கரோட ராஜ்ஜியம் தான். சமீப காலங்களில் ரஜினி அவர்களின் சிறந்த உழைப்பை வெளி கொணர்ந்தவர் ஷங்கர் மட்டுமே...எந்திரன் ரஜினி அவர்களின் உழைப்பின் உச்சம். திரை அரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டமும் உச்சமே.

விஞ்ஞானி ரஜினி (வசீகரன்) அவர் 10 வருடம் உழைத்து உருவாக்கும் ரோபோ (இதுவும் ரஜினி தான்), கண்டுபிடிப்புகளின் உச்சம். சிட்டி என்று பெயரிடப்படும் இந்த ரோபோ மனிதனை போல் கோபம்,காதல், துக்கம் இன்ன பிற உணர்சிகள் இல்லாது சொல்கின்ற எல்லா வேலையும் செய்யும்...அதுவும் மின்னல் வேகத்தில். ஐஸ்வர்யா ராய்(சனா), வசீகரனின் காதலி, மருத்துவ கல்லூரி மாணவி. சந்தானம் மற்றும் கருணாஸ் வசீகரனின் ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்பவர்கள்.
சிட்டி ரோபோவை ராணுவத்தில் பணிக்கு அமர்த்தி ஆயிரம் வீரர்கள் செய்கின்ற வேலையை ஒரு ரோபோவின் மூலம் செய்ய வைப்பதே வசீகரனின் இலட்சியம். இதற்காக நடக்கும் பரிசோதனையில், சில மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் சிட்டியை அனைவரும் ஒப்புகொள்ள, ஒரு விஞ்ஞானி போரா(டேனி-வில்லன்) மட்டும் அதை சில பரிசோதனைகள் செய்து, சிட்டியை குழப்பமான கட்டளைகள் கொடுத்து தவறான செயல் செய்ய தூண்டி நிராகரித்து விடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், சிட்டி யார் எது சொன்னாலும் சொன்னதை, நல்லது  கெட்டது பாராமல், மனித உணர்சிகளை உணராது வேலை செய்யும் ஒரு இயந்திரம்...அவ்வளவே. இதனால் கோபம் அடையும் வசீகரன் மறுபடியும் உழைத்து, தாடி வளர்த்து ....சிட்டிக்குள் அனைத்து மனித உணர்ச்சியும் வரும்படி செய்கிறார். இதை, ஒரு கடினமான பிரசவத்தை, மிக லாவகமாக செய்வதின் மூலம் சிட்டி உலகக்கு தன்னை நிரூபிக்கிறது. சந்தோஷத்தில் சனா சிட்டியை முத்தமிட போக, சிட்டிக்கு  சனா மீது காதல் பிறக்கிறது. இதனால் வசீகரனுக்கும் சிட்டிக்கும் வாக்குவாதம் வர, சனா தான் வசீகரனைதான் காதலிப்பதாகவும்,இயந்திரத்தோடு வாழ்வது சாத்தியம் இல்லை என தன்  நிலைபாட்டை தெளிவாக சொல்லி விட சிட்டி வருத்தம் கொள்கிறது. இதனால், அடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் முன் நடக்கும் பரிசோதனையில் சிட்டி வேண்டும் என்றே காதல் வசனம் பேசி சொதப்பி விடுகிறது. இதனால் அவமானம் அடையும் வசீகரன் கோபத்தில் சிட்டியை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார். குப்பையில் இருந்து சிட்டியை மீட்க்கும் போரா, அதற்கு உயிர் கொடுத்து அதற்குள் தீய சக்திக்கான சிப்பை சொருகி, சிட்டியை அசூர ரோபாவாக மாற்றி விடுகிறார். கொடுறுமான  வேகத்துடன் கிளம்பும் ரோபோ சனாவை கடத்திவிடுகிறது, போரவையும் கொன்று விடுகிறது. பலரை  கொன்று தீய, நாச வேலைகளில் ஈடுபடும் ரோபோவை, எப்படி வசீகரன் அடக்கி சனாவை மீட்கிறார் என்பதே இறுதிகட்டம்.


படம் முழுக்க ரஜினி..ரஜினி...ரஜினி தான்....இந்த வயதில் அவரின் உழைப்பு அதிசயக்க வைக்கிறது. அதுவும் இரண்டாம் பாகத்தில் கெட்ட ரோபோவாய் மாறிய பிறகு....அசத்தல் ரஜினி...அதே மூன்று முகம் அலெக்ஸ் நடை...அந்த அசத்தலான சிரிப்பும்...யார் அந்த கருப்பு ஆடு என்று சொல்லி ஆடு மாதிரி கத்தும் இடத்தில... சூப்பர் ஸ்டார் ஜொலிக்கிறார். காதல் அணுக்கள் பாட்டில் மிக மிக அழகாய் இருக்கிறார் ரஜினி. இதற்காகவே ஷங்கருக்கு ஸ்பெஷல் சல்யூட். மத்த இயக்குனர்கள் சமீபத்தில் ரஜினியை இந்த அளவுக்கு அழகாய் கட்டியதே இல்லை..முக்கியமாக வாசு. ஐஸ்வர்யா ராய் சில close-up காட்சிகள் தவிர படம் முழுக்க அழகாய் பவனி வருகிறார். இரும்பிலே ஒரு இருதயம் பாட்டில் செம ஆட்டம் ஆடி இருக்காங்க. சந்தானம், கருணாஸ் சிரிக்க வைக்க முயற்சி செய்றாங்க...சில one-liners தவிர சிரிப்புதான் நமக்கு வரவே மாட்டேங்குது. வில்லன் டேனி திடீர்னு பரிதபாமா செத்து போறார். கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி இருப்பாங்க.

இந்திய சினிமா வரலாற்றில், தொழில்நுட்பத்தின் உச்சம் எந்திரன் தான். முதலில் ஷங்கருடைய உழைப்புக்கும், திட்டமிடுதலுக்கும் ஒரு பெரிய சபாஷ். இந்தியாவில், இந்த அளவிற்கு தொழில்நுட்பத்தை யாரும் பயன்படுத்த வாய்ப்பு மிக குறைவு. சுஜாதா அவர்களின் வசனங்கள் அருமை. நிறைய இடங்களில் வரும் one-liners superb. என்ன நக்கலா என்று காவல் அதிகாரி சிட்டியை கேட்க, இல்ல நிக்கல் என்று சொல்லும் வசனம் அற்புதம்...முதல் பாதி முழுக்க இந்த மாதிரி நிறைய வசனங்கள். படத்தில் முக்கியமாக சனாவுடன் சிட்டி செல்லும் அந்த இரண்டு நாட்கள்..அதகளம். முக்கியமாய் அந்த குப்பத்து காட்சி...படத்தின் அற்புதமான இடம் திரை அரங்கே அதிருகிறது.... . ராணுவ அதிகாரிகள் முன்பு சிட்டி சொல்லும் கவிதை அழகு...' கணிபொறியும் காதலிக்க வைக்கும் கன்னிபொறி' என்று ஆரம்பித்து அசத்தி இருக்கார் நா.முத்துக்குமார். நான் படம் பார்த்த திரை அரங்கு மிக கேவலமாக இருந்ததால் ரஹ்மானின் பின்னணி இசை பத்தி பெரிதாக கேட்க முடிய வில்லை. நம்ம ஊர்ல நல்ல திரை அரங்கில் பார்த்துட்டு சொல்றேன். ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் மிக பெரிய பலம். கிளிமஞ்சாரோ பாடலில் வரும் பின்னணி காட்சிகள் அற்புதம்.சாபு சிறிலின் பங்களிப்பு நிறைய....சில காட்சிகள் நடிக்கவும் செய்து இருக்கார்.

நிறைய இடத்தில ஷங்கரின் புத்திசாலித்தனம் ஒளிர் விடுகிறது....சின்ன சின்ன காட்சிகளுக்கும் அபாரமாக உழைத்து இருக்கிறார். படத்தில் மைனசே இல்லையே என்றால்..கண்டிப்பாக இருக்கிறது....எப்பவும் போல ஷங்கரின் படங்களில் மீறப்படும் லாஜிக் அபத்தங்கள் இதிலும் உண்டு....ஜென்டில்மேன், பாய்ஸ், அந்நியன் போல இந்த படத்திலும் இறுதி காட்சியில் நீதிமன்றம் வந்து விடுகிறது...இரண்டாம் பகுதியில் நிறைய இடங்களில் தொய்வு தெரிகின்றது..அதுவும் காவலர்கள் துரத்தும் அந்த காட்சியும், இறுதியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் ரொம்ப நீளம்...அஆவ் .. இறுதிக்காட்சிகளில் வரும் கிராபிக்ஸ் பார்க்கும் பொது ஜெடிக்ஸ் பாக்கிற மாதிரியே இருக்கு....இராம நாராயணன் படங்களில் வரும் கிராபிக்ஸ் குறைந்த தரம் ..அவ்வளவே....வித்தியாசம்... அந்த காட்சிகள் அவ்வளவு நீளம் தேவை இல்லை என்பதே எனது எண்ணம்....

மத்தபடி...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் 'எந்திரன்....'
.

11 comments:

எப்பூடி.. said...

விமர்சனத்திற்கு நன்றி. காமர்சியல் படங்களில் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இயக்குவது மிகவும் கடினம். ஏனைய படங்களோடு (கமர்சியல்) ஒப்பிடுகையில் எந்திரனில் லாஜிக் மீறல்கள் குறைவாகவே உள்ளன போலுள்ளது. நீதிமன்ற காட்சிகளை ஷங்கர் வைப்பதன் நோக்கம் படத்தில் பிழைபிடிப்பவர்கள் "இவ்வளவு கொலை செய்ததற்கு ஒரு தண்டனையுமில்லையா " என குறுக்குகேள்வி கேட்ககூடாதென்பதற்காகவே என்று நினைக்கிறேன். .

கத்தார் சீனு said...

நன்றி ஜீவதர்ஷன் அவர்களே.....
உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன்...அருமை...

கானகம் said...

நல்ல விமர்சனம்.. படம் நீங்களும் பாத்தாச்சா?

:-)

Thamiz Priyan said...

நான் படம் பார்த்த திரை அரங்கு மிக கேவலமாக இருந்ததால் ரஹ்மானின் பின்னணி இசை பத்தி பெரிதாக கேட்க முடிய வில்லை.\\\

mmm அதே தோஹா சினிமா 2 வில் பார்த்தோம்,.. :(

கத்தார் சீனு said...

நன்றி ஜெயக்குமார்....

நன்றி ஜின்னா !!!

படம் தோஹா சினிமாவில் முதல் நாள் மாலை காட்சி பார்த்தேன்....

எழில் said...

நல்ல விமர்சனம்!
உண்மையிலேயே இந்திய சினிமாவுக்கு இது ஒரு மைல் கல் தான்!
இடைவேளைக்கு பிறகு அசுர ரஜினி என்ட்ரிக்கு அப்புறமா வர சேசிங் காட்சிக்கு பதிலா நல்லா யோசிச்சிஅசுர ரஜினியோட காட்சிகளுக்கு பலத்தை கூட்டி படத்த இன்னும் விறுவிறுப்பாக்கிருக்கலாம்.
தோஹா சினிமா சவுண்ட் சிஸ்டத்த மாத்த பேசாம நிதி வசூல் பண்ணலாம்...
"அன்ஜான அன்ஜானி" ல வர மொக்க பாட்டு கூட நல்லா பாட்டு மாதிரி கேட்டுது villagio தியேட்டர்ல..
தியேட்டர்ல சில கமெண்ட்ஸ்.....ஏன் ரஜினிக்கு ஒபெனிங் சாங் இல்ல?
ரோபோ ஏன் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடல... Item சாங் இல்ல...
இது வழக்கமான தமிழ் ரசிகர்களின் மனநிலை........

Karuppaiah said...

VERY GOOD REVIEW, KEEP IT UP SIR

கத்தார் சீனு said...

நன்றி எழில்...நான் எழுதிய பதிவில் விடுபட்ட விஷயத்தை இங்கு சொன்னதற்கு ஸ்பெஷல் நன்றி.....
அஞ்சானா அன்ஜானி ஒரு சுமாரான படம்...அதுவே நல்ல திரை அரங்கில் பார்க்கும் பொது எவ்வளவு நல்லா இருக்கு.... இவங்க திருந்தவே மாட்டாங்க...

கத்தார் சீனு said...

நன்றி திரு.கருப்பையா அவர்களே.....

parthi.v said...

திருட்டு விசிடி ய ப்ரோஜெக்டேர்ல போட்டு பெரிய ஸ்க்ரீன்ல அடிச்சா அதுதான் "DOHA CINEMA". இதுல பாக்கும்போதே தூள் கெளப்புதே..... இன்னும் நம்ம ஊரு hi-tech theater ல பாத்தா...
விமர்சனம் பட்டய கெளப்புது பாஸ்...

கத்தார் சீனு said...

நன்றி பார்த்தி....
அதனாலதான் மால் சினிமால ஸ்பெஷல் ஷோ இன்னிக்கு பார்க்க போறேன்....