Wednesday, December 1, 2010

2 மாநிலங்கள் (எனது கல்யாணக்கதை) - சேத்தன் பகத்

சேத்தன் பகத் எழுதிய 2 States - The Story of My Marriage என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். பள்ளி நாட்களுக்கு அப்புறம் மிக நீண்ட நாள் கழித்து படித்த ஆங்கில புத்தகம். இந்த புத்தகத்தை, என்னோட நண்பர் ஒருவர் விடுமுறை முடிந்து வரும்பொழுது வாங்கிட்டு வரவும்னு சொன்னதால் வாங்கினேன்...அப்படி என்ன இருக்கு இந்த புத்தகத்தில் என புரட்ட ஆரம்பித்தேன்..மூழ்கி விட்டேன், முழு மூச்சில் படித்தும் விட்டேன். எப்பவுமே, நண்பர்கள் யாராவது புத்தகம் வாங்கி வர சொன்னால், நான் வாங்கி கொடுத்து, அவர்கள் படித்த பிறகே நான் படிப்பேன். ஆனால் இந்த புத்தகம் என் கொள்கையை மொத்தமாக சேதப்படுத்தி விட்டது.
சேத்தன் பகத் அவர்களின் எளிய எழுத்து நடையா, கதைக்களமா எதுவென்று சொல்ல இயலவில்லை, ஏதோ ஒன்று வசிய சக்தி மாதிரி புத்தகத்தில் இருந்து கண்களை எடுக்கவே விட வில்லை. ரொம்ப எளிமையான, அழகான காதல் கதை.ஒரு பஞ்சாபிக்கும் தமிழச்சிக்கும் உருவாகும் காதல், எவ்வாறு பல போராட்டங்களை சந்தித்து பின்பு கல்யாணத்தில் முடிகிறது என்பதே கதை. சேத்தன் பகத் அவர்களின் உண்மை காதல் கதையைத்தான் புத்தகமாக தந்துள்ளார்.
என்னை பொறுத்த வரை, ஒரு நல்ல எழுத்தாளரின் அடையாளம் மற்றும் வெற்றி, படிப்பவர்களை கதையோடும், பாத்திரங்களோடும், ஒரு மாதிரி மாயையான உலகத்தில் உலவ விட்டு, அந்த தளத்திற்கு படிப்பவர்களை கொண்டு செல்ல வேண்டும். இதை சேத்தன் பகத் மிக அழகாக கையாண்டுள்ளார். IIMA, IIT, கார்பரேட் உலகம், பஞ்சாபி மற்றும் தமிழ் கலாச்சாரம், அரபிந்தோ ஆஷ்ரம், உறவு முறை சிக்கல்கள், கல்யாண முறைகள் என காதல் சொட்ட சொட்ட கதை செல்கிறது. என்ன ஒரே குறை என்றால், தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் நிறைய இடத்தில் கிண்டலடித்து இருக்கார். இதை அவரே, ஏன் என முன்னுரையிலும் சொல்லி இருக்கார். மேலும், கதை சொல்வது ஒரு பஞ்சாபி என்பதால் ஒத்து கொள்ளலாம். புத்தகத்தின் அட்டை, கதாசரியரின் சமர்ப்பணம்(Dedication), என நிறைய சின்ன சின்ன விஷயங்கள் choooo chweet and cute. Give it a try. 

Title: 2 States
Publisher:
Rupa and Co., New Delhi
Language:
English
Release Date:
October 08, 2009 
Price:   Rs .95
.
 

6 comments:

Mohan said...

தமிழ் கெட்ட வார்த்தைகளை இந்தப் புத்தகத்தில் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். மற்றபடி படிப்பதற்கு சுவாரசியமான புத்தகம்தான்.

கத்தார் சீனு said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மோகன்...

சுதாகர் said...

Chetan bhagat is a very good and favourite writer. Her never makes the reader bored. I read one of his books "One night at call center" and I believe 3 Idiots movie is based on his novel "Five Point Someone" I guess...

கத்தார் சீனு said...

Thanks Sudha for ur comments...S...3 Idiots is based on 5 Point someone....

கானகம் said...

அட இந்தப் புத்தகம் உங்க கிட்ட இருக்கா? ஒருநா சந்திச்சிர வேண்டியதுதான்.. நான் இன்னும் படிக்கலை..

கத்தார் சீனு said...

சொல்லுங்க ஜெயக்குமார்..ஒரு நல்ல நாளா பார்த்து நேர்ல சந்திசிடுவோம் .... 55367391