Friday, December 31, 2010

சீனு டைம்ஸ்-4

ஆண்பாவம் படம் வெளி வந்து 25 ஆண்டுகள் ஆகியதை இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் சமீபத்தில் கொண்டாடினார். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட, மறுபடியும்  தற்பொழுது ஆண்பாவம் படம் பார்த்தேன்.(எத்தனையாவது முறை என தெரிய வில்லை, குறைந்தது ஒரு 20 முறை இருக்கலாம்). சில படங்கள் அந்த கால கட்டங்களில்  ரசிக்க முடியும், பின்னாளில் பார்க்கையில் இந்த படத்தை எப்படி நல்லா இருக்குன்னு  நினைச்சோம்னு தோணும்,  ஆனால் ஆண்பாவம் படம் அந்த வரிசையில் கண்டிப்பாக இல்லை. இன்றளவும், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு அற்புதமான  ஜனரஞ்சகப்படம்.  என்னை பொறுத்த வரையில், இதுவும் உலக சினிமாதான். (கேபிள் அண்ணன் சொல்ற மாதிரி, வெளிநாட்டவர்க்கு நம்ம சினிமா உலக சினிமா, நமக்கு வெளிநாட்டு சினிமா உலக சினிமா.)

மறைந்த திரு.வி.கே.ராமசாமியின் நடிப்பு இந்த படத்தில் மிக மிக நகைச்சுவையுடன் நுட்பமாக இருக்கும். ராஜா அவர்களின் பின்னணி இசை ராஜாங்கம் நடத்தி இருக்கும். இங்கே கீழ உள்ள வீடியோக்களை  பாருங்கள்,  கண்டிப்பாக பிடிக்கும்.

இளையராஜா பின்னணி இசை



VKR நகைச்சுவை


****************************************************************************************************
சமீபத்தில் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய எப்போதும் பெண் புத்தகம் படித்தேன். சுஜாதாவை பற்றி தெரியாதவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக எழுதியது ஒரு பெண்தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அந்தளவிர்ற்கு மிக நுணுக்கமாக பெண்ணைப்பற்றி எழுதி இருப்பார். சின்னு என்ற பெண் கருவில் உருவாவதில் இருந்து தொடங்கி அவள் வாழ்க்கை முழுவதும் நடப்பதை ஒரு பெண்ணின் பார்வையில் அனாயசமாக எழுதி இருப்பார்.

புத்தகம் வெளியான கால கட்டம் எண்பதுகளின் தொடக்கம்...கதாசிரியர் சொல்வது போல, கொஞ்சம்  கதையாக, கொஞ்சம் கட்டுரையாக, கொஞ்சம் தத்துவமாக... பெண்ணை பற்றி சொல்ல வருவதையும், சமுகத்தின் பார்வையில் பெண்ணையும், பெண்ணுக்குள் இருக்கும் மனசையும் அதன் எண்ணங்களையும் மிக அழகாக சொல்லி இருக்கார் சுஜாதா. இந்நூலை எழுத பயன்பட்ட ஆங்கில நாவலையும் அதன் ஆசிரியரையும் மறக்காமல் முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மையின் வெளிச்சம். "Women are meant to be loved, be it any form" என்ற கருத்தை பின் தொடர முயற்சிக்கும், தவிர பெண்கள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இந்த புத்தகம் ஒரு வரப்ப்ராசதம் தான். இந்த புத்தகத்தை படித்த பிறகு, நாம் அறியாத உலகுக்கு சென்ற அனுபவம் உணர முடிகிறது.

எப்போதும் பெண்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்.
விலை Rs.110
****************************************************************************************************
நண்பர்கள், அன்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Wish you all the very best and always happiness in 2011
****************************************************************************************************

4 comments:

Anonymous said...

பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_120.html

கத்தார் சீனு said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...
உங்கள் அறிமுகத்தால் மிகவும் மகிழிச்சி அடைகிறேன்...
மிக்க நன்றி ரமேஷ் !!!

கத்தார் சீனு said...

மிக்க நன்றி பாண்டிச்சேரி வலைப்பூ!!!