காவலன் படம் இங்க கத்தாரில ஒரு வாரம் கழிச்சுத்தான் வந்துச்சி......கடைசியா வந்த விஜய் படம், சுறா பார்க்க தைரியம் இல்லாததால் பார்க்கவில்லை. ஆனால் காவலன் படம் வெளியிட, இந்த அளவிற்கு எல்லாம் நிதிகளும் பிரச்சினை செய்வதைப்பார்த்து எப்படி இருந்தாலும் காவலன் பார்த்தே தீருவது என முடிவு செய்து, போன சனிக்கிழமை பார்த்தாச்சு. படம் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. விஜய் அழகா இருக்கார்...மெலிஞ்சி இருக்கார். சில காட்சியில நல்லாவும் நடிச்சி இருக்கார். விஜய், அந்த பிரவுன் நிற விக் ரொம்ப காசு கொடுத்து வாங்கிட்டார் போல...எல்லா படத்திலயும் ஒரு பாட்டுக்கு அந்த விக்க வைச்சிக்கிட்டு வந்து கொல்றார்.(ஒருவேளை திருஷ்டிக்கோ?) அசின் சகிக்கலை, எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. வடிவேலு நாட் தி பெஸ்ட்...பட் ஓகே! நீபா....எப்பா எப்பா எப்பப்பா.. கண்ணுக்கு நிறைஞ்சி இருக்காங்க !!!. வித்யாசாகர் பாட்டுல ஒன்னு தவிர எதுவும் பிடிக்கலை. இசை பெரிய சொதப்பல். வேற ஒன்னும் பெரிசா சொல்ற மாதிரி இல்லை. சராசரி படம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வர வர, யாராவது சினிமாவில வள வளன்னு கைபேசில பேசிக்கிட்டே வர மாதிரி காட்சிகள் பார்த்தா வெறுப்பா இருக்கு..மன்மதன் அம்பு போதையே தெளியல.... மறுபடியும் இப்ப வந்த காவலன்லையும் எப்பபார்த்தாலும் கைபேசில பேசிகிட்டே இருக்காங்க. இயக்குனர்களே...தயவு செய்து மாத்தி யோசிங்க ப்ளீஸ் !!! நிஜ வாழ்க்கைல கைபேசியின் பயன்பாடு மிக அதிகமாகி விட்ட இந்த காலத்தில், திரையிலும் தொடர்ந்து கைபேசி வருவதை பார்த்தால் ஒருவித அயர்ச்சி ஏற்படுகின்றது.

நம்ம ஊரில் தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறுவதை கத்தார் நாட்டு அமைச்சரும் பார்த்துகிட்டே இருந்து இருப்பார் போல....இங்கயும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையேத்திட்டாங்க. என்ன வித்தியாசம் என்றால், நம்ம ஊர் மாதிரி எட்டு மாசத்தில் பத்து தடவை விலை ஏற்றவில்லை.. இங்க கடைசியா விலை ஏறியது நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் என ஞாபகம். கத்தார் நாட்டு காசு மதிப்பிற்கு, இப்பதான் லிட்டர்க்கு ஒரு ரியால் வந்து இருக்கு, இது நாள் வரை ௦0.80 ௦ ரியால் தான் இருந்தது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகும் அரபு நாடுகள் மத்தியில் ஓரளவிற்கு இந்த விலை குறைவே. இந்த ஊர்க்காரங்க இதையே பெரிய விலை ஏற்றம்னு பேசிக்கிறாங்க.. என்ன கொடும கோவிந்தா?? இதற்கு எல்லாம் அடிநாதம் இங்கே எண்ணெய் வளம் உண்டு.... நம்ம ஊர்லயும் எண்ணெய் வளம் வரட்டும்... அப்புறம் பாப்போம்.!!! நாமளும் மத்த நாட்டு ஆட்களுக்கு விசாவை நிறுத்தி கொடுப்போம்....(கனவு காணுங்கள் நண்பர்களே...அதுக்குதான் செலவு ஒண்ணும் இல்லையே)

தீபாவளி விடுமுறையப்ப வாத்தியார் சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்தகுமாரன் கதை என்ற சரித்திர நாவல் படித்தேன். ராஜ ராஜ சோழன், தஞ்சை பெரிய கோயில் கட்டும் நேரத்தில் கதை நடப்பதாக சித்தரித்துள்ளார். கதையின் பிரதான பாத்திரங்கள் வசந்தகுமாரன்(வசந்த்), கணேச பட்டர்(கணேஷ்) மற்றும் அபிமதி. அரசனை பற்றி கதை சொல்லாமல், வசந்தகுமாரன் என்னும் வாணிபம் செய்யும் இளைஞனை வைத்து கதை சொல்வது அழகு. நிறைய சோழர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் வார்த்தைகளை சுஜாதா கையாண்டுள்ளார்.(நல்லவேளை எல்லாவற்றிற்கும் விளக்கமும் கொடுத்துள்ளார்...இல்லையென்றால் "ங்கே" என முழிக்க வேண்டியது தான்). எப்பவும் போல, பல சரித்திர குறிப்புகளை ஆராய்ந்து...மற்றும் சோழர் காலத்து வரலாற்றை சொல்லும் பல முக்கியமான புத்தகங்கள் படித்துத்தான் இந்த நாவலை நம்பும் நடையில் எழுதி உள்ளார். பொறாமை, சதி, போர், ஒற்று ஆய்தல், ராஜதந்திரம், காதல், காமம், மக்கள் கலகம், பெரிய கோயில் கட்டுவதில் சில மக்களுக்கு இருந்த அதிருப்தி, ராஜேந்திர சோழனின் ஆரம்ப வரலாறு என எல்லாத்தையும் கலந்துக்கட்டி மிக விறுவிறுப்பா எழுதி இருக்கார் வாத்தியார். கண்டிப்பா படிக்கலாம்.
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்.
விலை Rs.130

5 comments:
பகிர்விற்கு நன்றிகள்
வருகைக்கு மிக்க நன்றி ராம்ஜி அவர்களே !!!
வழக்கமா விஜய் படம் வந்தாலே பதிவுலகத்திற்கு ஒரே கொண்டாட்டம் தான்...ஆனால் பாவம் இந்த தடவை அவங்களுக்கு ஏமாற்றம் தான்...
Thanks for the post..!
@ எழில்
நன்றி !!!
@ கொச்சு ரவி....
U R most welcome
Post a Comment