ஜனாதிபதியுடன் இந்திய அணி |
இந்த தடவை இந்திய அணி ஒரு வழியா ரொம்ப கஷ்டப்பட்டு ஆசியா கோப்பையில் விளையாட தகுதி பெற்றனர். கத்தாரில் நடப்பதால் நாமளும் போய் நம்ம அணிக்கு உற்சாகம் கொடுப்போம்னு இந்தியாவிற்கும் பஹ்ரைனுக்குமான போட்டிக்கு ஒரு மூணு வாரம் முன்னாடியே பதிவு பண்ணி வச்சி ஆச்சு. போட்டிகளும் ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து தொடங்கியது. இந்தியாவிற்கு இது இரண்டாவது போட்டி. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 4-0 என தோற்று இருந்தனர். நல்லவேளை, நம்ம கோல்கீப்பர் ரொம்ப நல்லா பந்தை பிடிச்சார்..இல்லன்னா ஒரு 8-0, 10-0 ன்னு தோத்து இருப்போம்.
பதினான்காம் தேதி போட்டியன்று நண்பர்கள் குழுவோடு இந்தியக்கொடி எல்லாம் வாங்கிகிட்டு அமர்க்களமா உள்ள போய் சீட்ட தேடி நம்ம சீட்ட பார்க் பண்ணியாச்சு. இந்தியாவின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திரம் பைச்சிங் பூடியா வேற காயம் காரணமா ஆடலைன்னு முதல்லையே சொல்லிட்டாங்க. அன்னிக்கு விளையாட்டு அரங்கத்தில் மக்கள் எண்ணிக்கை 11,000(approx). இதில் இந்தியாவிற்க்கான ஆட்கள் மட்டும் ஒரு பத்தாயிரம் பேர் இருந்தனர். ஆட்டம் தொடங்கிய மிகக்குறைந்த நேரத்திலேய பஹ்ரைன் அணியினர் முதல் கோலை பெனால்டி வாய்ப்பு மூலம் அடித்தனர். அடுத்த கொஞ்ச நேரத்தில் இந்தியாவிற்கு கிடைத்த கார்னர் ஷாட்டை அற்புதமாக கோல் அடித்து சமன் செய்தனர். அந்த கோல் அடித்த வினாடியில் அரங்கில் கிளம்பிய சத்தம் அடங்க ஒரு மூன்று நிமிடம் ஆனது. அதற்க்கு அப்புறம் பஹ்ரைன் தொடர்ந்து கோல் மழை பொழிந்து கொண்டு இருந்தனர். ஒரு வழியாக முதல் பாதி முடியும் போது 4-1 என்று இருந்தது.
எங்களோடு போட்டி காண வந்த நண்பர் வேலூர் மாவட்ட கால்பந்து அணியின் தலைவராக இருந்தவர். நாம் மக்கள் ஆடும் அழகை பார்த்து கோவத்தின் உச்சியில் இருந்தார். வாங்க சீனு, நம்ம அவங்க ஜெர்சி போட்டுக்கிட்டு களத்தில் இறங்குவோம் எனக்கேட்டு கொண்டே இருந்தார். நானும் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் கால்பந்து ஆடி இருக்கேன்.(கல்லூரிக்குள் நடந்த முக்கியமான போட்டிகளில் பெனால்டி ஷாட் கூட கோலாக்க முடியாமல் நண்பர்களிடம் மானம் கெட்டது தனிக்கதை). நிற்க. இரண்டாம் பகுதி தொடங்கியது...நமது அணியினர் மிக ஆக்ரோஷமாக ஒரு பத்து நிமிடம் விளையாடினர்.இதன் விளைவாக இன்னொமொரு கோல் அடித்தனர். அந்த கோலும் அடிப்பதற்குள் நாக்கு தள்ளி போய்ட்டாங்கான்னு தான் சொல்லணும்.(மூணாவது attempt la தான் அந்த பந்து உள்ளவே போய் தொலைச்சுச்சு) பஹ்ரைன் சும்மா இருப்பாங்களா என்னா, அவங்க பங்குக்கு இன்னொமொரு கோல் அடித்தனர். ஒரு வழியாக 5 - 2 என ஆட்டம் முடிந்தது. எங்களுக்கு இந்தியா தோத்து போயிடுச்சேன்னு சின்ன வருத்தம் இருந்தாலும், கில்லி மாதிரி ரெண்டு கோல் அடிச்சதே பெரிய சந்தோஷம். (இந்தியா கோல் அடிக்கும்னு அது வரை யாரும் நம்பவே இல்லை, ஏன்னா , ஆசியா கோப்பை போட்டிகளுக்கு முன் நடந்த நட்பு போட்டிகளில், நம்ம அணி ஒரு போட்டி கூட ஜெயிக்கவில்லை, முக்கியமா ஒரு கோலும் அடிக்கவும் இல்லை)
போஸ் குடுக்கற அவசரத்தில் கொடிய வேற தலை கீழாக பிடிச்சி இருக்கேன் (பாரதத்தாயே மன்னிச்சிடும்மா !!) |
.
7 comments:
கத்தாரிகள நல்லாவே சமாளிச்சிருக்கீங்க போல :) ஆட்டத்த பாக்கவும் உங்களுக்கு குடுத்து வச்சிருக்கு. வாழ்த்துக்கள்
@ எட்வின்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... உங்கள் தளம் அருமை !!!
தோற்றாலும் பரவாயில்லை.கில்லி ஆடும் கிரிக்கெட் பசங்களை விட்டுப்புட்டு கால்பந்தாட்டக்காரர்களை ஊக்குவிப்போம்.
கபில்தேவ் ஜெயிச்சதுல வந்த காய்ச்சல் இன்னும் தீரவேயில்லை.அந்த மாதிரி கால்பந்தாட்டத்தில் ஒரே ஒரு கிண்ணம் வரட்டும்.அப்புறம் பாருங்க ஆட்டத்தை.
பகிர்வுக்கு நன்றி.
@ ராஜ நடராஜன்
மிக்க நன்றி....
கண்டிப்பா வரும் நாட்களில் இந்தியாவில் கால்பந்து பெரிய அளவில் வரும் என்றே எதிர்பார்கிறேன்.
@ ராம்ஜி யாஹூ
மிக்க நன்றி....
நல்ல பதிவு, கிரிகெட்டுக்கு ஒரு MRF Pace foundation வந்தபிறகு நம்ம இந்திய அணிக்கு நல்ல நல்ல வேகபந்து வீச்சாளர்கள் சரளமாக வர ஆரம்பிச்சாங்க..அதே மாதிரி கால்பந்துக்கும் ஏதாவது ஒரு அமைப்பு வந்தா பள்ளி கல்லூரி அளவிலேயே நல்ல கால்பந்து வீரர்களை உருவாக்க முடியும்... அப்பதான் கோப்பை கனவு எல்லாம் நனவாகும்...
மிக்க நன்றி எழில்...
மல்லையா/அம்பானி மாதிரி ஆட்கள் எதாவது கால்பந்துக்கு இந்தியாவில் செலவு செஞ்சா கண்டிப்பா பெரிய அளவில் வரும்....பார்ப்போம் !!!!
Post a Comment