ஆடுகளம் - எல்லாரையும் முன்னணியில் ஆடுகளத்தில் ஆட விட்டு பின்னாடி இருந்து அடிச்சி ஆடி இருக்கார் இயக்குனர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா அவர்கள் தைரியமாக மார் தட்டி சொல்லி கொள்ளலாம்... வெற்றிமாறன் தனது சிஷ்யன் என...!
எல்லா மனிதருக்குள்ளேயும் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான்... சமயதிற்க்கேற்ப இருவரில் ஒருவன் வெளிப்படுவான். ஆடுகளத்தின் ஒன் லைனர் இதுதான். சேவல் சண்டையில் முதன்மையான ஆளாக கொடி கட்டி பறக்கும் பேட்டைக்காரன், அவருடைய சிஷ்யன் கருப்பு ஒரு கட்டத்தில் அவரை விட பணத்தாலும் புகழாலும் வளருவதைக்கண்டு மனம் ஓம்பாமல், கருப்புக்கு எதிராக சதிச்செயல்கள் செய்ய...முடிவு என்னவாகிறது என்பதே படம். இதை கருப்பின் காதல், தாய்ப்பாசம், நட்பு, பேட்டைகாரனின் துரோகம் ஊடே கதை சொல்லி இருக்கார் இயக்குனர் வெற்றிமாறன். ஈகோ / துரோக எண்ணங்கள் மனிதனை என்னவெல்லாம் செய்யும் என பிரமாதமாக காட்டி இருக்கார் இயக்குனர். இது மாதிரி கதைக்களன் மற்றும் திரைகதைக்காக இயக்குனருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து !
தனுஷ்க்கு இந்த கருப்பு பாத்திரம் ஒரு திருப்புமுனை தான். தனுஷை விட இந்த கருப்பு பாத்திரத்திற்கு யாரும் நியாயம் செய்து விட முடியாது என அடித்து சொல்லலாம். யாத்தே யாத்தே பாடல் துவக்கத்தில் தனுஷ் ஆடத்துவங்கும் போது நமக்கு ஆடத்தோன்றும்...., I m Love you என்று தப்சியிடம் சொல்லும் போது நமக்கும் சொல்லத்தோணும். ஒத்த சொல்லாலா பாட்டு துவங்கும் போது ஒரு சிரிப்பு இருக்கும் பாருங்க... வாவ்...!!! கடைசியில் தனது குருதான் அனைத்துக்கும் காரணம் எனத்தெரிந்து அவரிடம் என்னை கொன்னுடுங்க என்று உருகும் இடத்தில அசத்தல். பேட்டைக்கரனாக நடித்திருக்கும் ஜெயபாலன் படம் முழுக்க வாழ்ந்து இருக்கார் என சொல்லலாம். அந்த வயதிற்கேற்ப தான் தான் குரு, தான் சொல்வது தான் அனைவரும் கேட்கணும் என நினைப்பதும், கருப்பு அதை மீறி ஜெய்க்கும் போது வரும் பொறாமையாகட்டும், இறுதிக்காட்சியில் கருப்புக்கு எல்லா உண்மையும் தெரிந்த பிறகு காட்டும் முகபாவனையகட்டும் மனிதர் அனாயசமாக செய்து இருக்கார். (சுவாதி கிரணம்(இயக்கம்-கே.விஸ்வநாத்) என்ற ஒரு தெலுங்கு படத்தில் மம்மூட்டி இதே மாதிரி தனது சிஷ்யன் தன்னை மீறி வளருவதை பிடிக்காது அந்த பொறாமை பிடித்த பாத்திரத்தை கச்சிதமாக செய்து இருப்பார்). ராதாரவியின் குரல் இந்த பாத்திரத்திற்கு மிக அருமையா பொருந்தி இருக்கு.
துரையாக கிஷோர் ஓவர் அக்டிங், அண்டர் அக்டிங்லாம் இல்லாம என்ன சரியா தேவையோ, அதை மட்டும் செஞ்சி இருக்கார். பார் நடத்தும் பாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் பொருந்தி இருக்கார். பேட்டைக்காரனின் இளம் மனைவியாக வரும் மீனாள் பாவப்பட்ட கதாபாத்திரம்...அழகா நடிச்சி இருக்காங்க. தப்ஸி பண்ணு(BUN இல்லைங்கோ ...Pannu) ஆங்கிலோ இந்தியனா வராங்க. பரவா இல்லை...நல்லா நடிச்சு இருக்காங்க..முக்கியமா பேட்டைக்காரன் கருப்பு பத்தி தவறாக சொல்லும் போது, அப்புறம், உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்னு கருப்பு பார்த்து சொல்லும் போது. காக் உட்டிங்க்னு(சேவல் விடறது) கருப்பு பாட்டிகிட்ட சொல்லும் போது தப்ஸி கிட்ட இருந்து ஒரு முகபாவனை வரும் பாருங்க...சுபெர்ப். ஊளையாக வரும் கருப்பின் நண்பர் அழகு பாத்திரம். நிறைவா செஞ்சி இருக்கார். படத்தின் முக்கிய வெற்றி..எல்லா பாத்திரமும் ரொம்ப இயல்பாக வைத்து இருப்பதுதான். ரத்தினமாக வரும் அந்த போலீஸ் கதாபாத்திரம் பின்னி இருக்கார். ஒவ்வொரு முறை தோல்வியில் மருகும் போதும், அவங்க அம்மா பொலம்பும் போது ஆற்றாமையால் கோபம் கொள்வதும், மொட்டை போட்டுக்கொண்ட பிறகு பேசும் வசனமாகட்டும், அழகான நடிப்பு.
வேல்ராஜின் ஒளிப்பதிவு அழகு...முக்கியமா பாடல் காட்சிகளில்....க்ளோஸ் அப் காட்சிகளில். சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும்படி உள்ளது. GV.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்தான், படம் பார்த்த பிறகு இன்னும் பெரிய ஆளவில் பேசப்படுகிறது... பின்னணி இசையும் ரொம்ப நல்லா இருக்கு. கிராபிக்ஸ்ல செய்ய பட்டிருக்கும் சேவல் சண்டை, ரொம்ப நல்லா செஞ்சி இருக்காங்க.
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல....எல்லாப்பெருமையும் இயக்குனர் வெற்றிமாறனுக்கே...சின்ன சின்னதா விஷயமாக இருந்தாலும்..பார்த்து பார்த்து செஞ்சி இருக்கார். மனித உணர்வுகளை ரொம்ப துல்லியமாக படம் எடுத்து இருக்கார். இயக்குனரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இவர் இன்னும் நிறைய, இது மாதிரி மனித உணர்வுகளைக்கொண்டு மிக அழகாக படம் எடுக்க வாழ்த்துக்கள்.
பொல்லாதவன் - Commercial Class, ஆடுகளம் - ALL TIME CLASS
.
எல்லா மனிதருக்குள்ளேயும் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான்... சமயதிற்க்கேற்ப இருவரில் ஒருவன் வெளிப்படுவான். ஆடுகளத்தின் ஒன் லைனர் இதுதான். சேவல் சண்டையில் முதன்மையான ஆளாக கொடி கட்டி பறக்கும் பேட்டைக்காரன், அவருடைய சிஷ்யன் கருப்பு ஒரு கட்டத்தில் அவரை விட பணத்தாலும் புகழாலும் வளருவதைக்கண்டு மனம் ஓம்பாமல், கருப்புக்கு எதிராக சதிச்செயல்கள் செய்ய...முடிவு என்னவாகிறது என்பதே படம். இதை கருப்பின் காதல், தாய்ப்பாசம், நட்பு, பேட்டைகாரனின் துரோகம் ஊடே கதை சொல்லி இருக்கார் இயக்குனர் வெற்றிமாறன். ஈகோ / துரோக எண்ணங்கள் மனிதனை என்னவெல்லாம் செய்யும் என பிரமாதமாக காட்டி இருக்கார் இயக்குனர். இது மாதிரி கதைக்களன் மற்றும் திரைகதைக்காக இயக்குனருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து !
தனுஷ்க்கு இந்த கருப்பு பாத்திரம் ஒரு திருப்புமுனை தான். தனுஷை விட இந்த கருப்பு பாத்திரத்திற்கு யாரும் நியாயம் செய்து விட முடியாது என அடித்து சொல்லலாம். யாத்தே யாத்தே பாடல் துவக்கத்தில் தனுஷ் ஆடத்துவங்கும் போது நமக்கு ஆடத்தோன்றும்...., I m Love you என்று தப்சியிடம் சொல்லும் போது நமக்கும் சொல்லத்தோணும். ஒத்த சொல்லாலா பாட்டு துவங்கும் போது ஒரு சிரிப்பு இருக்கும் பாருங்க... வாவ்...!!! கடைசியில் தனது குருதான் அனைத்துக்கும் காரணம் எனத்தெரிந்து அவரிடம் என்னை கொன்னுடுங்க என்று உருகும் இடத்தில அசத்தல். பேட்டைக்கரனாக நடித்திருக்கும் ஜெயபாலன் படம் முழுக்க வாழ்ந்து இருக்கார் என சொல்லலாம். அந்த வயதிற்கேற்ப தான் தான் குரு, தான் சொல்வது தான் அனைவரும் கேட்கணும் என நினைப்பதும், கருப்பு அதை மீறி ஜெய்க்கும் போது வரும் பொறாமையாகட்டும், இறுதிக்காட்சியில் கருப்புக்கு எல்லா உண்மையும் தெரிந்த பிறகு காட்டும் முகபாவனையகட்டும் மனிதர் அனாயசமாக செய்து இருக்கார். (சுவாதி கிரணம்(இயக்கம்-கே.விஸ்வநாத்) என்ற ஒரு தெலுங்கு படத்தில் மம்மூட்டி இதே மாதிரி தனது சிஷ்யன் தன்னை மீறி வளருவதை பிடிக்காது அந்த பொறாமை பிடித்த பாத்திரத்தை கச்சிதமாக செய்து இருப்பார்). ராதாரவியின் குரல் இந்த பாத்திரத்திற்கு மிக அருமையா பொருந்தி இருக்கு.
துரையாக கிஷோர் ஓவர் அக்டிங், அண்டர் அக்டிங்லாம் இல்லாம என்ன சரியா தேவையோ, அதை மட்டும் செஞ்சி இருக்கார். பார் நடத்தும் பாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் பொருந்தி இருக்கார். பேட்டைக்காரனின் இளம் மனைவியாக வரும் மீனாள் பாவப்பட்ட கதாபாத்திரம்...அழகா நடிச்சி இருக்காங்க. தப்ஸி பண்ணு(BUN இல்லைங்கோ ...Pannu) ஆங்கிலோ இந்தியனா வராங்க. பரவா இல்லை...நல்லா நடிச்சு இருக்காங்க..முக்கியமா பேட்டைக்காரன் கருப்பு பத்தி தவறாக சொல்லும் போது, அப்புறம், உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்னு கருப்பு பார்த்து சொல்லும் போது. காக் உட்டிங்க்னு(சேவல் விடறது) கருப்பு பாட்டிகிட்ட சொல்லும் போது தப்ஸி கிட்ட இருந்து ஒரு முகபாவனை வரும் பாருங்க...சுபெர்ப். ஊளையாக வரும் கருப்பின் நண்பர் அழகு பாத்திரம். நிறைவா செஞ்சி இருக்கார். படத்தின் முக்கிய வெற்றி..எல்லா பாத்திரமும் ரொம்ப இயல்பாக வைத்து இருப்பதுதான். ரத்தினமாக வரும் அந்த போலீஸ் கதாபாத்திரம் பின்னி இருக்கார். ஒவ்வொரு முறை தோல்வியில் மருகும் போதும், அவங்க அம்மா பொலம்பும் போது ஆற்றாமையால் கோபம் கொள்வதும், மொட்டை போட்டுக்கொண்ட பிறகு பேசும் வசனமாகட்டும், அழகான நடிப்பு.
வேல்ராஜின் ஒளிப்பதிவு அழகு...முக்கியமா பாடல் காட்சிகளில்....க்ளோஸ் அப் காட்சிகளில். சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும்படி உள்ளது. GV.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்தான், படம் பார்த்த பிறகு இன்னும் பெரிய ஆளவில் பேசப்படுகிறது... பின்னணி இசையும் ரொம்ப நல்லா இருக்கு. கிராபிக்ஸ்ல செய்ய பட்டிருக்கும் சேவல் சண்டை, ரொம்ப நல்லா செஞ்சி இருக்காங்க.
வெற்றிமாறன் |
பொல்லாதவன் - Commercial Class, ஆடுகளம் - ALL TIME CLASS
.
6 comments:
அற்புதம்! துரோகத்தின் அழகியல்..
மிக்க நன்றி எழில் !!!
அடடா!! படம் பார்த்த உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்!!!
மிக்க நன்றி சங்கர்ஜி !!!
கதையை ஒரு லைனில் சொல்லி பாராட்டியவிதம் அருமை. உங்கள் விமர்சனம் சூப்பர். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி மதுரை சரவணன் !!!
உங்கள் வலைமனை அருமை !!!
Post a Comment