Wednesday, May 11, 2011

சீனு டைம்ஸ்-8

போஸ்டர்கள், பேனர்கள், சுவர் விளம்பரங்களுக்கு தனிச் சிறப்பு பெற்ற
ஊர் மதுரை. போன தடவை மதுரை போனப்ப நான் கண்கூடா பார்த்து
பிரமிச்சேன். உண்மையைச்சொன்னா, இந்த மாதிரி அடிக்கு ஒரு பேனர் வைக்கறத பார்த்தா ஒரே  காமடியா இருந்தது!!!ஒரு நிகழ்ச்சியக்கூட
விடறது இல்லை மதுரை மக்கள்...பாசக்காரங்க....அதுவும் அஞ்சா நெஞ்சருக்கு வைப்பாங்க பாருங்க விதவிதமா  பட்டப்பெயர்...சிரிச்சி மாளாது.

சமீபத்தில், போன மாதம் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் பேர் அடிச்சாங்க 
பாருங்க ஒரு போஸ்டர்....என்னால முடியல.... இதாங்க அந்த போஸ்டர்களில் வர்ற வாசகம், "வெள்ளை மாளிகையைக் கூட ஆளத் தகுதியான தலைவா, நீ தலைமை செயலகத்துக்கு வரத் தயங்குவது ஏன்?"
மக்களே, என்ன எழுதறதுன்னு கொஞ்சம் யோசிச்சி எழுதுங்கப்பா..எதால சிரிக்கருதுன்னே தெரியல...உங்க அளவில்லா பாசத்திற்கும்,  நகைச்சுவைக்கும்  என்னதான் எல்லை? அவரு பாட்டுக்கு ராணா  பட  டென்ஷன்ல உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரியில படுத்துகிட்டு இருக்கார்...அவரைப்போய் உசுப்பேத்திக்கிட்டு...போய் வீட்ல புள்ளகுட்டிங்க இருந்தா ஒழுங்கா படிக்க வைங்க...பொழப்ப பாருங்க !!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாத்தனும்ன்னு ஏதோ ஒரு சங்கம் சொல்லி இருக்காங்க. அதாவது தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே சொல்லுவாங்களாம். இதுக்கு  முன்னாடி திருமகன்னு ஒரு படம் வந்துச்சி...அப்ப  எங்க போய் இருந்தாங்க? இப்படியே போனா என்னதான் பேர் வைப்பாங்க?? பேசாம I M VIKRAM னு பேர் வச்சிக்கிலாம், எப்படியும் I M SAM படத்தைதான் உல்டா பண்றாங்க, 
அப்படியே தலைப்பும் அதே மாதிரியே வைச்சிட வேண்டியது தான்!!!    

எனக்கு ஒரு சந்தேகம், தமிழ்நாட்டில யாருமே முத்துராமலிங்கம், ராஜாஜி, 
காமராஜ், அண்ணாதுரை னு பேர் வைச்சிக்கிறது இல்லையா?? கொஞ்ச 
நாள் முன்னாடி கூட  ராக்கெட் ராஜான்னு ஒரு பாட்டில வருதுன்னு 
இன்னொரு கோஷ்டி அளப்பரை செஞ்சாங்க!  நம்ம நாட்டில ஏன்தான் 
இவ்வளவு உணர்ச்சிவசப்படறாங்கன்னு தெரியல....விருமாண்டி படம் எடுக்கும் போது கமல் அவர்கள் கோபம் பொங்க பேசின காணொளியை 
கீழே கண்டு களியுங்கள். ஒரு மனுஷன் எவ்வளவு வெறுப்பாயிருந்தா இப்படி பேசியிருப்பார்??? (பழசுதான்...அட்ஜீஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்...)

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

நாளை மறுநாள், அடுத்த ஐந்து ஆண்டுகள்  தமிழகத்தை சுரண்டப்போவது
யார் என்று தெரிந்து விடும். இவ்வளவு நாள் கழித்து முடிவுகள் வெளி வருவதால் கொஞ்சம் சூடு குறைந்து தான் போய் உள்ளது என சொல்ல வேண்டும். எல்லாரும் அவங்க அவங்க கணிப்ப சொல்லிட்டாங்க....
நாமளும் எதாவது சொல்லணும் இல்லியா...ஆகையால் என்னோட கணிப்பு(கவனிக்கவும்...கணிப்பு மட்டுமே...அதாவது ஊகம்) கீழே.

1. அ.தி.மு.க கூட்டணி 140  முதல் 150 இடங்கள் பெற்று ஆட்சி அமைக்கும்

2.  அ.தி.மு.க,  தி.மு.க கூட்டணிக்கு   பெரும்பான்மை கிடைக்காமல்,
பா.ம.க அல்லது காங்கிரஸ், யாராவது ஒருவர் அல்லது இருவரும்
அணி மாறி அ.தி.மு.கவிற்கு ஆதரவளித்து ஆட்சி அமையும்.

எப்பூடீ ?? நாங்களும் சொல்வோம் இல்ல !!!!
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()
.

6 comments:

எழில் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் உன்னோட பிளாக்கு வறேன்.

//எனக்கு ஒரு சந்தேகம், தமிழ்நாட்டில யாருமே முத்துராமலிங்கம், ராஜாஜி,
காமராஜ், அண்ணாதுரை னு பேர் வைச்சிக்கிறது இல்லையா?? //

நல்ல கமெண்ட். இது ரொம்ப சரி. எனக்கும் இதுல உடன்பாடே இல்ல....

எழில் said...

சும்மா எதுக்கு எடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிச்சி அல்ப விளம்பரங்களை தேடிக்கிறதுக்குனே ஒரு கூட்டம் திரியுது.. அதுலயும் குறிப்பா ஒரு மாவட்டத்தில இருந்து கிளம்பிடுறாங்க...அதுவும் சாதி சாயம் பூசிக்கிட்டு.....

ரஜினி போஸ்டர் பத்தினா கமெண்ட் சூப்பர்...

மதுரை சரவணன் said...

போஸ்டர் கலாச்சாரம் நிறைந்த மதுரை யாராலும் மாற்ற முடியாது.. வாழ்க..!

கத்தார் சீனு said...

@ மதுரை சரவணன்
மிக்க நன்றிங்க .....

@ எழில்
ஆமாம் எழில்....அவிங்க அப்படித்தான் !!!

Anonymous said...

//வெள்ளை மாளிகையைக் கூட ஆளத் தகுதியான தலைவா, நீ தலைமை செயலகத்துக்கு வரத் தயங்குவது ஏன்?"//

அடப்பாவிங்களா..

கத்தார் சீனு said...

@ சிவகுமார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

என்ன பண்றது நம்ம மக்கள் எல்லாம் பாசத்துல என்ன பேசறதுன்னே தெரியாம பேசிடுவாங்க