ரொம்ப நாளாய் பார்க்க வேண்டிய படங்கள் என எண்ணிக்கொண்டிருந்த
இரு படங்களை சமீபத்தில் பார்த்தேன். இந்த இரு படங்களை இவ்வளவு நாளாய் எப்படி பார்க்கத்தவறினேன் எனத்தெரியவில்லை. அவற்றின்
விவரம் கீழே :-
ஓம்காரா(ஹிந்தி)
அஜய் தேவ்கன், சயீப்அலி கான், விவேக் ஓபராய், நசீருதின்ஷா, கரீனா கபூர், கொன்கனா சென் எனப்பெரிய பட்டாளமே நடித்த படம். கதை, திரைக்கதை, இசை மற்றும் இயக்கம் விஷால் பரத்வாஜ்.ஷேக்ஸ்பியரின் ஒதேல்லோவை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மனித மனங்களுக்குள்
இருக்கும் காதல், காமம், துரோக எண்ணங்கள், துக்கம், சந்தோசம், குற்ற உணர்ச்சி என உணர்ச்சி குவியலான படம். எல்லாரும் அற்புதமா நடிச்சி இருப்பாங்க..அதுவும் சயீப்அலி கான், கரீனாவின் நடிப்பு டாப் கிளாஸ். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் கண்டிப்பாக விஷால் பரத்வாஜுக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பதை நிருபிக்கும் படம் இது.
தன்மாத்ரா(மலையாளம்)
மோகன்லால் நடித்து ப்ளசி இயக்கிய ஒரு அற்புதமான படைப்புத்தான் இந்த தன்மாத்ரா. ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று அற்புதமாய் இந்த படத்தில் காட்டி இருக்கின்றார் இயக்குனர். மிக மிக நெகிழ்ச்சியான படம், அதுவும் மோகன்லால் நடிப்பு மிக இயற்கையாக அற்புதமாக இருக்கும். ஆல்சைமர் நோய்(அறிவாற்றல் இழப்பு) தாக்கிய மனிதன் எப்படி இருப்பான் என்பதை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கார் மோகன்லால். மோகன்லால் தவிர நெடுமுடி வேணு, மீரா வாசுதேவன், அர்ஜுன் லால், ஜகதி, சீதா எல்லாரும் நல்லா நடித்திருக்கின்றனர்.
வாய்ப்பு கிடைக்கும்போது இந்தப்படங்களை கண்டிப்பாக பாருங்கள். உலகசினிமாக்களுக்கு இந்திய சினிமா சிறிதளவும் குறைந்தது இல்லை என உரத்து கூறும் காவியங்கள் இவை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொஞ்ச நாள் முன்னாடி நார்வேயில் நடந்த பயங்கர தீவரவாத தாக்குதல்
கொஞ்ச நாள் முன்னாடி நார்வேயில் நடந்த பயங்கர தீவரவாத தாக்குதல்
மொத்தமாக 77 பேரை காவு வாங்கியது. இதைப்பற்றி சம்பவம் நடந்த
மறுநாள் அலுவலகத்தில் என் சக தமிழ் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே எதேச்சையாக வந்த
கத்தாரி இஸ்லாம் நண்பர், என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொண்டு கேட்ட கேள்வி என்னை நிறைய சிந்திக்க வைத்து. அவர் என்ன
கேட்டார் என்றால், "Don't tell me that this attacks were carried out by any Islamic
terrorists?". நான் அந்தச்சம்பவத்தை கொஞ்சம் விளக்கி சொன்ன பிறகுதான்
அவர் திருப்தி அடைந்தார். எந்தளவிற்கு அவர் இந்த தொடர்
தீவரவாதத்தின் மேல் வெறுப்பு இருந்தால் இந்தக்கேள்வியை கேட்டிருப்பார்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றதைத்தொடர்ந்து, ஆளாளுக்கு இந்தியா முதல் இடம் வகிக்க தகுதியில்லை என் பேசத்தொடங்கி விட்டது மிகவும்
கேலிக்கூத்தாக உள்ளது, குறிப்பாக இங்கிலாந்து பத்திரிக்கைகள். இது வரை இங்கிலாந்து ஒரு முறை கூட உலகக்கோப்பை வென்றது இல்லை, டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதல் இடம் பெற்றதும் இல்லை. இத்தனை வருஷம் கவுண்டி கிரிக்கெட் நடத்தி இருந்தாலும், IPL மாதிரி ஒரு பணம் கொழிக்கும் தொடரை நடத்தியதில்லை. அதுவும் இல்லாம சமீப காலங்களில் பிசிசிஐ உலகக்ரிக்கெட்டில் முக்கிய அங்கமாக மாறிவிட்ட
புகைச்சல் வேறு. நம்ம நேரத்துக்கு தொடர்ந்து ரெண்டு தோல்வி வேற
கிடைச்சாச்சா... எப்படா வாய்ப்பு கிடைக்கும்னு காத்து கிடந்தது போல பேச
ஆரம்பிச்சிட்டானுங்க. பெருமைக்கு ...... தின்ற பசங்க பேசுற பேச்சு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு. ரவி சாஸ்த்ரி இவங்க எல்லாத்தையும் செம கிழி கிழிச்சிருக்கார். கீழே உள்ள காணோளியை பாருங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாத்தியார் சுஜாதா அவர்கள் முதன்முதலில் எழுதிய நாவலான
நைலான் கயிறு சமீபத்தில் படித்தேன். துப்பறியும் நாவல் தான்....ஆனால் இதில் கணேஷ் மட்டும்தான் வருகிறார். கணேஷ்
பாத்திரம் கூட கதையின் பாதியோடு விடை பெறுகிறது. கணேஷ்
பாத்திரமே, கணேஷ் + வசந்த் கலந்தாற்ப்போல தான்
வடிவமைக்கப்பட்டுள்ளது. நிறைய புதுமைகளோடு இந்தக்கதை
வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. அப்போதைய காலகட்டத்திலும் கூட சுஜாதா அவர்கள் எந்தளவிற்கு விவரங்கள் கதையின் ஊடே கொடுத்து இருக்கார் என்பது பிரம்மிக்க வைக்கிறது. சிறிய நாவல் தான்,
துப்பறியும் கதைக்களம்... சுஜாதாவின் துள்ளலான நடை...கண்டிப்பாக படிக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
படித்ததில் பிடித்தது
Live LIFE like a pair of Walking Legs :
The Foot that's Forward has no Pride & the Foot Behind has no Shame !
BECAUSE, They both Know their Situation will Change.
The Foot that's Forward has no Pride & the Foot Behind has no Shame !
BECAUSE, They both Know their Situation will Change.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது என்னுடைய ஐம்பதாவது பதிவு. இது வரை ஊக்கம் அளித்து ஆதரவளித்து வந்த அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவு
கொடுக்கப்போவோருகும் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
.
7 comments:
Hi Srini, Congrats for your 50th Post.
vellakara pasangalukku eppavum thimiru adhigam dhaan. Verum vayilaye mozham poduvaanunga...
Ravi Sasthri arumaiya pesi irukaar. nan eppavum virumbi rasikira oru arumayana commentator and a nice guy....
Have you seen The King's Speech.?
Eskay
நன்றி சுதா...
ரவி சாஸ்திரி ஆளும் சூபெர்தான் வாய்சும் சூபெர்தான் ....
இன்னும் பார்க்கலை eskay அவர்களே....
வருகைக்கு நன்றி !!!
நல்ல பகிர்வு, சுஜாதா புத்தகங்கள் மேலும் வேண்டுமென்றால் தொலைபேசுங்கள்.
மிக்க நன்றி கும்மாச்சி சார், தற்போது ஊரில் இருக்கேன், டிசம்பரில் கண்டிப்பாக தொலை பேசுகிறேன் !!!
Post a Comment