Wednesday, September 7, 2011

"மங்காத்தா" டா !!!


உள்ளே தல....வெளியே தல.....
வெளியே தல.....உள்ளே தல....
உள்ளே தல....வெளியே தல.....
வெளியே தல.....உள்ளே தல....

இது தலையோட மங்கத்தாடா....உள்ளேயும் தலதான்...வெளிய்லையும் தலதான்...வாலி, அமர்க்களம், தீனா காலத்தின் அஜித் ரொம்ப யுகங்களுக்கப்பறம் இப்பத்தான் "தல" காட்றார். பொதுவா ஹீரோன்னா, சரக்கடிக்க கூடாது, தம்மடிக்க கூடாது, நிறைய பொண்ணுகிட்ட போகக்கூடாது, திருடக்கூடாது, ஏமாத்தக்கூடாது,கெட்ட வார்த்தை பேசக்கூடாது,தொப்பைய காட்டக்கூடாது, வயச சொல்லக்கூடாது, மல்டி ஸ்டார் படத்தில நடிக்ககூடாது, டை அடிக்காம இருக்கக்கூடாது, சப்ப பசங்கக்கிட்ட அடி வாங்கக்கூடாது......இது மாதிரி ஏகப்பட்ட கூடாதுகள் உண்டு. அனால், மேல சொன்ன எல்லாத்தையும் அஜித் தில்லா தூக்கி போட்டுட்டு இந்த கதையில், இந்த படத்தில் நடிச்சதுக்கே ஒரு ஸ்பெஷல் வாழ்த்துகள்.
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டமும் அதன் பிண்ணனியில் புரளும் கோடிக்கணக்கான பணமும் தான் கதைக்களம். விநாயக் மகாதேவன் என்ற போலீஸ் பாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். ஒரு கெட்டவனுக்கு உதவப்போகும் தருணத்தில், ஆறு மாதம் வேலையிலிருந்து அஜித் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுகிறார். பின்பு நாலு சப்ப பசங்கள பின் தொடர்ந்து, அவர்கள் போடும் 500 கோடி பணத்திருட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்கிறார். அர்ஜுன்(பிருதிவிராஜ்) தலைமையில் போலீஸ் அணி கிரிக்கெட் சூதாட்ட கும்பலையும், புரளும் பணத்தையும் எல்லா இடங்களிலும் பறிமுதல் செய்கின்றனர். அஜித் தலைமையில் உள்ள ஐவர் குழு எப்படி இந்த 500 கோடி பணத்தை போலீசுக்கும், சூதாட்ட கும்பலுக்கும் தெரியாமல் லவுட்டுகின்றனர், பின்னர் என்ன ஆகிறது என்பதை கண்டிப்பாக எதாவது ஒரு வெள்ளித்திரையிலோ, துணித்திரையிலோ, தங்கத்திரையிலோ காண்க.
படத்தின் முதல் பாதியின், பாதி வரை விதவிதமா நடிகர்கள் புதுசுபுதுசா வந்துகிட்டே இருக்காங்க......அவ்ளோ பெரிய கும்பல் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அஜித், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமி ராய், அண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி, சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், அர்விந்த் ஆகாஷ்....எம்மாடி...முடியல....போதும் இத்தோடு நிறுத்திக்கிறேன். இவ்வளவு பேர் கதைக்கு தேவைப்பட்டிருந்தாலும், அஜித்தின் ஆளுமைதான் படம் முழுக்க...சொல்ல போனால் அஜித்தின் மற்ற படங்களை விட இந்த படத்தில் அவருக்கு காட்சிகள் குறைவுதான். இரண்டாம் பாதியில் தூள் பரத்துகிறார்....அதுவும் அந்த தனியாக சதுரங்கம் ஆடும் இடம் செம. இது மாதிரி தொடர்ந்து நல்ல ஸ்கோப் உள்ள படங்களில் அஜித் நடிக்கக்கடவுக நாராயணா !!! அர்ஜுனுக்கு வயது முதிர்ச்சி ரொம்பவே தெரிகிறது. திரிஷா கொஞ்சம் நேரம் காதல் பண்றாங்க...பின் அழறாங்க...அப்புறம் காணமேலே போய்டுறாங்க. லட்சமி ராய் தான் செம டாப்பு. அரேபியன் குதிரைலாம் பிச்சை வாங்கணும். அஞ்சலி, ஆண்ட்ரியாலாம் கூட இருக்காங்க. பிரேம்ஜி காமெடி பண்றேன்னு சொற்ப இடங்கள் தவிர்த்து, நிறைய இடத்தில மொக்கை போடுறார்.சென்சார்க்காரங்க தொல்லை பெரும் தொல்லையா இருக்கு....எதையுமே காட்ட மாட்டேன்றாங்க, கொஞ்சம் சீன் தெரியும் காட்சிகளில் கூட ஏதோ ஜிகுஜிகுன்னு வந்துடுது......இந்த மாதிரி காட்றதுக்கு அந்தக்காட்சிய வெட்டியே தொலைக்கலாம். நம்ம எந்த காலத்தில் இருக்கிறோம்னு சில நேரத்தில் பிடிபடுவதில்லை.
படத்தின் இரண்டு மிகப்பெரிய தவறாக எனக்குத்தெரிவது திரைக்கதையும், பாட்டும்தான்.படத்தில் நிறைய இடங்கள் ஆங்காங்கே தொய்வாக செல்கிறது, இரண்டாம் பாதியிலும் கூட. யுவன் என்ன அவசரத்தில் இருந்தாரோ தெரியல, விளையாடு மங்காத்தா பாட்டு தவிர எதுவுமே சரி இல்லை. பின்னணி இசையும் சுமார்தான், அதுவும் முதலில் வரும் நகைச்சுவை காட்சிகளில், பின்னணி இசை ரொம்ப கேவலமா இருக்கு. இத்தனை சுமாரான ஆறு பாட்டு போட்டதுக்கு, இந்த மாதிரி கதைக்கு மூணு பாட்டு மட்டும் நச்சுன்னு போட்டிருக்கலாம். வெங்கட் பிரபு திரைக்கதைக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றிருக்கும். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தான் படத்தின் பலம். வசனங்கள் ஓகே ரகம். வெங்கட் பிரபு அதி தீவிர அஜித் ரசிகர் போல, படத்தை பாருங்கள் புரியும். நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அஜித்திற்காக மற்றும் மேக்கிங்க்காக கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.
.

2 comments:

Anonymous said...

சீனு, விமர்சனம் அருமை. ஆகா, ஓகோ, பிரமாதம். நீங்க சொல்லறதெல்லாம் கேட்டு இனிமேல் அஜித்தும் எப்படி நடிக்கணும் என்று கற்றுக்கொள்ள வேண்டும், இயக்குனர் வெங்கட்டும், உங்களிடம் வந்து ட்யுஷுன் எடுத்து கொள்ள வேண்டும். நாராயணா (ஆழ்வார்), நமச்சிவாயா (பரமசிவம்), நங்கநல்லூர் 'ஆஞ்சநேயா' எங்களையெல்லாம் இந்த ப்ளாகர்ஸ் கிட்டயிருந்து காப்பாத்துங்கப்பா. வினோத்.

கத்தார் சீனு said...

வினோத், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !!!
அஜித் மற்றும் வெங்கட் பிரபுக்கு ட்யுஷுன் எடுக்கறதுக்கு எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....பேசி அனுப்பி விடுங்க..ஜமாய்ச்சுடுவோம் !!!