Monday, December 19, 2011

நீயும்...நானும்...வெறுமையும்...!!!



நீ விட்டு சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......

முதலில் காதலை நான்தான் சொல்ல வேண்டும் என்றாய்
நான் சொல்ல விழையும் முன் நீயே சொன்னாய்
அதை ரசித்தேன்

ஐந்தரை மணிக்கு வருவேன் என்பாய்
ஆறரைக்கு வருவாய்
அதை ரசித்தேன்

மென்சோகம் கொண்ட முகத்தில்
மெலிதாய் ஒரு புன்னகை சரிய விடுவாய்
அதை ரசித்தேன்

நான் இல்லாத நேரத்தில் எங்கே என
ஓரக்கண்ணில் நோட்டம் விடுவாய்
அதை ரசித்தேன்

ரயில் பயணங்களில் நான் பேசப்பேச
என் தோள்களில் தூங்கி விடுவாய்
அதை ரசித்தேன்

மணமேடையில் உன் கையை மெலிதாய் சீண்டினேன்
வெட்கத்தில் நீ சிவந்தாய்
அதை ரசித்தேன்

உன்னைப்போல அழகான தேவதையை ஈன்றேடுத்தாய்
என் அளவில்லா அன்பின் பரிசென்றாய்
அதை ரசித்தேன்

எனைப்பிரிந்து எப்படி ஒரு வாரம் இருப்பாய் என்றாய்
அசை போட உன் லட்சோப லட்ச நினைவுகள்
எப்போதும் என்னோடு உண்டென்றேன்

அதை நீ ரசித்தாய்.....

நீ இல்லாத போதும் வெறுமை
என்னை தொடுவதில்லை
ஏனென்றால்

நீ விட்டுச்சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......
.
  

23 comments:

கும்மாச்சி said...

சீனு கவிதை அருமை.

கத்தார் சீனு said...

நன்றி கும்மாச்சி சார்....

Boss said...

kavidhai rasiganin
oru azhagana kavidhai...
Rasithen...
Erathazha 12 varudam kazhithu
nanbanin tamizh kavidhai...
Rasithen...
Vittu pona kadhalin
Vidadha ninavugal thurathuvadhai...
Rasithen...
Andha kadhalukaga nam aditha koothugalum...
Rasithen...
Ninaivugalin Nizhalil
oonjaladum oru nyabaga vizhudhu!!!!

கத்தார் சீனு said...

பாஸ் எழுதிய பின்னூட்டம்

கவிதை ரசிகனின்
ஒரு அழகான கவிதை...
ரசித்தேன்...
ஏறத்தாழ 12 வருடம் கழித்து
நண்பனின் தமிழ் கவிதை...
ரசித்தேன்...
விட்டு போன காதலின்
விடாத நினைவுகள் துரத்துவதை...
ரசித்தேன்...
அந்த காதலுக்காக நாம் அடித்த கூத்துகளும்...
ரசித்தேன்...
நினைவுகளின் நிழலில்
ஊஞ்சலாடும் ஒரு ஞாபக விழுது !!!!

பாஸ்கர் மச்சி செம நச்சுன்னு பதில் கவிதை மச்சி...
கல்லூரி நாட்களை நிறையவே மிஸ் செய்கிறோம் !!!

sukuttis said...

Kavithai Arumai!!!

sukuttis said...

Superrrrr!!!!!!!!!

கத்தார் சீனு said...

நன்றி Suresh !!!

Boss said...

Nanbane,
Oru velai idhu
Unnai pradhibalika koodum!!!!

thotti meenin
sogamai
vittil poochiyin
vegamai
thottu pirindha
mogamai
vikki thavikum
dhagamai
sattena kalaindha
megamai
kadhal tholaitha nanum
innum innum
kavidhayai
koodizhandha
kuruviyai
meela mudiya un
kadaisi parvai sirayil
oru sudhandhira
kaidhiyai
inraikum...

கத்தார் சீனு said...

மேற்கண்ட நண்பர் பாஸ்கரின் பின்னூட்டம் தமிழில் ....

நண்பனே,
ஒரு வேலை இது
உன்னை பிரதிபலிக்க கூடும்!!!!

தொட்டி மீனின்
சோகமாய்
விட்டில் பூச்சியின்
வேகமாய்
தொட்டு பிரிந்த
மோகமாய்
விக்கி தவிக்கும்
தாகமாய்
சட்டென கலைந்த
மேகமாய்
காதல் தொலைத்த நானும்
இன்னும் இன்னும்
கவிதையாய்
கூடிழந்த
குருவியாய்
மீள முடியா உன்
கடைசி பார்வை சிறையில்
ஒரு சுதந்திர
கைதியாய்
இன்றைக்கும்... !!!

மச்சி.....செம ப்ளோல இருக்க போல....அள்ளி வீசற...செமையா இருக்கு...இதெல்லாம் பதிஞ்சி வைசிக்கோடா...
ஆனால், naakku antha scene ledhu machi !!!

Boss said...

Idhuvum nee than
ena ninaikiren!!!


oru karkuviyalin
otrumayai
thenralal kalaika parkiren...
unnai,
ennai kadhalika vaika
koodumana varai
muyarchikiren...
podumana varai muyarchikirena
ena puriyavillai!
un vidupadu dhisaivegathai edhirthu
en sarbu dhisaivegathai mattume nambi
thurathugiren...
eerpu izhandha enthira paravayai
parakirai nee...
oru natchathirathin
vilimbil amarndhu
vetru giraga vidiyalai
vimarsikkum vaipu
kittumayin,
oru velai
nee ennai kadhalikka koodum...
melkanum oru varikum
adutha varikum
sambandhame illadhadhu pol
than thondrugiradhu!
unnaym ennayum pol!
saathiya koorugal illayeninum
kagidhathil kappal vida mudiyum ennal..
enenil
inru varayil
peridhaga edhayum sadhikadha
miga sadharana manidhanai ,
varthaigalai mattume
korka therindha
tamizh tholaitha
thamizhai tholaitha
thagudhiyatra pookaran nan!!!!!

சசிகலா said...

நீ விட்டுச்சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......
.அருமை

கத்தார் சீனு said...

மறுபடியும் நண்பர் பாஸ்கரின் பின்னூட்டம் தமிழில் :

இதுவும் நீதான்
என நினைக்கிறன்!!!


ஒரு கற்குவியலின்
ஒற்றுமையை
தென்றலால் கலைக்க பார்க்கிறேன்...
உன்னை,
என்னை காதலிக்க வைக்க
கூடுமான வரை
முயற்சிக்கிறேன்...
போதுமான வரை முயற்சிக்கிறேன
என புரியவில்லை!
உன் விடுபடு திசைவேகத்தை எதிர்த்து
என் சார்பு திசைவேகத்தை மட்டுமே நம்பி
துரத்துகிறேன்...
ஈர்ப்பு இழந்த எந்திர பறவையை
பறக்கிறாய் நீ...
ஒரு நட்சத்திரத்தின்
விளிம்பில் அமர்ந்து
வேற்று கிரக விடியலை
விமர்சிக்கும் வாய்ப்பு
கிட்டுமாயின்,
ஒரு வேலை
நீ என்னை காதலிக்கக்கூடும்...
மேல்காணும் ஒரு வரிக்கும்
அடுத்த வரிக்கும்
சம்பந்தமே இல்லாதது போல்
தான் தோன்றுகிறது!
உன்னையும் என்னையும் போல்!
சாத்திய கூறுகள் இல்லையெனினும்
காகிதத்தில் கப்பல் விட முடியும் என்னால்..
ஏனெனில்
இன்று வரையில்
பெரிதாக எதையும் சாதிக்காத
மிக சாதாரண மனிதனை,
வார்த்தைகளை மட்டுமே
கோர்க்க தெரிந்த
தமிழ் தொலைத்த
தமிழை தொலைத்த
தகுதியற்ற பூக்காரன் நான் !!!!!

மச்சி...எல்லாம் நான் நான்னு நீதான் சொல்ற....!!!

Neverthless, நல்ல எழுதற மச்சி !!!

கத்தார் சீனு said...

மிக்க நன்றி சசிகலா !!!

Boss said...

ezhudhukolgalum ezhuthukalum
eppodhume adhisayam than!
parvai tholaitha ezhudhukol
naveena varaipadangal varaiyum...
padhai tholaitha ezhuthu
naveena kadhaigalai marum...
kadhal tholaitha
ezhudhukolum,
kadhalil tholaitha varthaigalum
mattume,
nenjam urukkum
kavaidhaigalai uruvedukkum!!!
ezhukal enadhu...
ezhudhukolum enadhu..
enanangal mattum...
unadhaga irukumayin
ivai anaithume nee than!!!
nee maruppaai enil,
naanaga kuda iruka koodum!!!

சுதாகர் said...

kavidhai romba nalla iruku.
Thalaippu inum cachyaa iruntha nalairukum.

vazhthukal.

கத்தார் சீனு said...

நன்றி சுதாகர்......!!!

என்றும் இனியவன் said...

எனது தளத்தில்:
தனுசுக்கு போட்டியாக சிம்பு

கத்தார் சீனு said...

எழுதுகோள்களும் எழுத்துக்களும்
எப்போதுமே அதிசயம் தான் !
பார்வை தொலைத்த எழுதுகோள்
நவீன வரைபடங்கள் வரையும்...
பாதை தொலைத்த எழுத்து
நவீன கதைகளாய் மாறும்...
காதல் தொலைத்த
எழுதுகோளும்,
காதலில் தொலைத்த வார்த்தைகளும்
மட்டுமே,
நெஞ்சம் உருக்கும்
கவிதைகளை உருவெடுக்கும்!!!
எழுத்துகள் எனது...
எழுதுகோளும் எனது..
என்னங்கள் மட்டும்...
உனதாக இருக்குமாயின்
இவை அனைத்துமே நீ தான்!!!
நீ மறுப்பாய் எனில்,
நானாக கூட இருக்ககூடும் !!!

rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

Vel Tharma said...

இனிய கவிதை. பாராட்டுக்கள்.

கத்தார் சீனு said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி rishvan மற்றும் வேல் தர்மா !!!

Anonymous said...

ezhdhukolum ezhuthukalum kavithai nalla iruku.

கத்தார் சீனு said...

@ Anonymous

நன்றி...
எழுதுகோள் கவிதை எழுதியது எனது நண்பன் பாஸ்கர் பாபு !!!