Sunday, March 25, 2012

நானும் பறவையே !!!



நான் பறவை....
நாடு கடத்தப்பட்ட பறவை....
கண்ணைக்கட்டி கூட்டுக்குள்
அடைக்கப்பட்ட பறவை...
சுதந்திரமாய் பறக்க
மறந்து போன பறவை...
சிற்றின்ப உலகத்தில்
சிதைந்து போன பறவை...
நல்லார் தீயார்
பேதம் அறியா பறவை...


பறவைக்கும் மனம் உண்டு...
ஆம்...எனக்கும் மனம் உண்டு....
அதில், என்றும் நீ உண்டு...
எனது இறக்கைகள் ஒவ்வொன்றாக
வெட்டப்பட்டாலும்
உனக்காக நான்
மேன்மேலும் பறப்பேன்...
உலகம் சுயநலத்திற்காக
என்மீது சவாரி செய்தாலும்
என் பயணம் உனை  
நோக்கித்தான் என்றும்....
கண்காணா ஜோடிப்பறவையே
உனைநோக்கித்தான்
என் பயணம் என்றும் !!!
எங்கு நீயோ....
அங்கு நீயே
நானாக விழைகிறேன்...
என் மனத்தீயை
உன் அருகாமை எனும்
குளிர்த்தீயில் இழக்க விழைகிறேன்...
எனக்காக காத்திருப்பாய் என
உனை நோக்கி பறக்கும்
பறவை நான்...
ஆம்....நானும் பறவையே !!!
.

10 comments:

PadhuSS said...

so touching.. soon ur bird will come to u...

SureshBabu said...

Seenu, Very Nice machi..

கத்தார் சீனு said...

@ PadhuSS
@ SureshBabu

நன்றிகள் பல !!!

Anonymous said...

nice..ya... wats up now days ur becoming a good poet.....

கத்தார் சீனு said...

@ Anonymous
மிக்க நன்றி....
நான் எழுதறது எல்லாம் கவிதையான்னே எனக்கு சந்தேகம் வருவது உண்டு....
நீங்க என்னடான்னா "good poet" ன்னு வேற சொல்றீங்க...

Anonymous said...

Of course you are good poet only…..
Neeyum….nanum….verumayum……….. kavithai v.v.v.super.
U has some unique capacity to write keep it up.

சுதாகர் said...

//நான் பறவை....
நாடு கடத்தப்பட்ட பறவை....
கண்ணைக்கட்டி கூட்டுக்குள்
அடைக்கப்பட்ட பறவை...
சுதந்திரமாய் பறக்க
மறந்து போன பறவை...
சிற்றின்ப உலகத்தில்
சிதைந்து போன பறவை...
நல்லார் தீயார்
பேதம் அறியா பறவை...//

இந்த வரிகள் ரொம்ப நல்லா இருக்கு...

//உன் அருகாமை எனும்
குளிர்த்தீயில் இழக்க விழைகிறேன்...//

குளிர்த்தீயில்.... தீயில் குளிர் தீயும் உண்டோ... ???

Keep it up.
Vazhthukkal...

கத்தார் சீனு said...

நன்றி சுதாகர்...

உங்கள் கருத்துக்கள் எனக்கு உற்சாக மருந்து....

குளிர்தீ எனச்சொல்லி இருப்பது முரண் வகை !!!

Anonymous said...

Kulir irukum idathil than thee mooti anal kayvargal

Unadhu arugamai, enaku
kulirnthum thee mooti kathakathapai tharum ….. ena porul kollalam illaya
(I think it’s not muran type)

கத்தார் சீனு said...

@ Anonymous

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....

நான் முரண் என சொல்லி இருப்பது நான் எழுதிய அர்த்தம் கொண்டு.

உங்கள் முரண் கருத்து உங்கள் புரிதல்...அவ்வளவே !!!