Friday, February 25, 2011

சீனு டைம்ஸ்-7


பாண்டிங் அஹமதாபாத்ல நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில   ரன் அவுட் ஆகிவிட்டாராம்....அதனால கோவத்தில வந்து  ஆட்டக்காரர்களின்  உடை மாற்றும் அறையில இருக்கிற தொலைக்காட்சி பெட்டிய வந்து உடைச்சிட்டாராம். எப்படி இருக்கு பார்த்திங்களா?? . ஒரு அணியின் தலைவர்...அதுவும் ஆஸ்திரேலியா மாதிரி ஒரு நல்ல அணிக்கு தலைவர் இப்படியா கேவலமா நடந்துக்கிறது? இதாவது பரவாயில்லை...மைதானத்துக்கு வெளியில...எத்தனை முறை மைதானத்துக்குள்ளேயே கேவலமா நடந்திருப்பார்னு கணக்கே இல்லை. எதிரணி ஆட்டக்காரர்கள், நடுவர்கள்னு  ஒருத்தரையும் விட்டதில்லை. ஒரு ஆட்டக்காரர் என்றால் ஆட வந்த  புதிதில் இது மாதிரி கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்துப்பாங்க... போகப்போக கொஞ்சம் பக்குவம் வந்த பிறகு ஒழுங்கா நடந்துப்பாங்க,  அனால் பாண்டிங்  விஷயத்தில் அது இப்ப வரை நடக்கவே இல்லை.  இன்னும்  கொஞ்ச நாளில்  எப்படியும் ஓய்வு பெறத்தான் போறார். கடைசி வரை திருந்தாத, மாறாத ஆளாகவே இருந்திட்டார். ஓய்வு பெற்ற பிறகு கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால்  நல்ல  நினைவுகள் எதுவும் கண்டிப்பாக  இருக்காது. எவ்வளவு பேட்டிங் சாதனைகள்,  வெற்றிகள் இருந்தாலும்  ஒழுக்கம்  இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
****************************************************************************************************
சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த கவிஞர், மதன் கார்க்கி. இளம் கவிஞர்களில் தாமரை மற்றும் நா.முத்துக்குமாருக்கு அப்புறம் இவரை ரொம்ப பிடித்திருக்கு. ரொம்ப இளமையா, புதுசு புதுசான வார்த்தை பிரயோகங்கள் கவர்ந்திழுக்குது. இப்ப கூட கோ படத்தில ஒரு பாட்டில் வர்ற வரிகள் அப்படியே மண்டைக்குள்ள ஓடிகிட்டே இருக்கு. ஹாரிசோட மெலடி இசை வேறு கூட்டணி.  

"ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!"

"நிழலை திருடும்
மழலை நானோ?"

இன்னொரு பாட்டில் இந்த வரிகள்...

"மாற்றம் தேடியே - தினமொரு
நேற்றைத் தோற்கிறோம்
வேற்றுப் பாதையில் - பூமி
சுற்றப் பார்க்கிறோம்"

மதன் கார்க்கி சினிமாத்துறை மட்டுமல்லாது தான் சார்ந்த துறைகளில் மிகவும் பேசப்படுவார் என நினைக்கிறேன். காலந்தான் பதில்  சொல்லவேண்டும்.....பார்ப்போம்
****************************************************************************************************
சென்ற வாரம் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மரணம் மிகவும் வருந்த வைத்து. எத்தனை பாடல்கள் மிக அழகாக பாடி இருக்கார்...தவிரவும் நல்ல நடிகர். அவருடைய குரல் போல  யாராலும் அவ்வளவு எளிதில்  பாடிவிட முடியாது, தனித்தன்மை கொண்டது. 
கடைசி காலத்தில் உடல் நலக்குறைவால் மிகவும் கஷ்டப்பட்டு இருந்தார். தவிரவும்  பழைய சினிமா நண்பர்கள் யாரும் வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ஏதோ ஒரு வாரப்பத்திரிக்கையில் வருந்தியிருந்தார்.
 
அவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்தது.  
  • கோடைக்கால காற்றே - பன்னீர் புஷ்பங்கள்  
  • பூவே இளையே பூவே - கோழி கூவுது
  • மனிதன் மனிதன் எவன்தான் - மனிதன்
  • ஆசை நூறு வகை - அடுத்த வாரிசு
  • பொதுவாக என் மனசு தங்கம் - முரட்டுக்காளை
  • இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு - சிகப்பு ரோஜாக்கள்
  • வா வா வசந்தமே - புது கவிதை
  • சொந்தங்களே சுற்றங்களே - அடுத்தாத்து ஆல்பர்ட்  
  • பூங்காற்று திரும்புமா - முதல் மரியாதை
  • கட்டி வச்சிக்கோ இந்த அன்பு மனசை - என் ஜீவன் பாடுது  
  • மோனலிசா மோனலிசா - MR ரோமியோ  
  • தென்கிழக்கு சீமையிலே - கிழக்கு சீமையிலே
அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது
  • பாலைவன ரோஜாக்கள்
  • ஒரு கைதியின் டைரி
  • கொக்கி
  • திருடா திருடா
  • கதாநாயகன்
  • ஊர்க்காவலன்
அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.
****************************************************************************************************
"வாழ்க்கை என்பது இருளிலிருந்து புறப்பட்ட அம்பு போல....
கொஞ்ச நேரம் வெளிச்சத்தை வேகமா கடந்து,
மறுபடியும் இருளில் சென்று முடியும்."

சொல்ல வர்ற கருத்து என்னன்னா, இருக்கிற கொஞ்ச காலம் சந்தோஷமா ஓட்டுவோம்.
****************************************************************************************************

Wednesday, February 16, 2011

நகைச்சுவை - 2 !!!