Friday, June 25, 2010

குடும்பம் !!!

சமீபத்தில் நான் ரசித்த படக்காட்சி !!!

Friday, June 18, 2010

தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல் !!!




கூவி கூவி கூப்ட்டாங்க !!!


"தமிழகத்தின்" செல்ல
குரலுக்கான தேடல்னு சொன்னாங்க !!!
TRP ல சன் டிவிக்கு
தண்ணி காட்னாங்க !!!

25 இலட்சத்தில
பரிசுன்னு சொன்னாங்க !!!
வித விதமா
விளம்பரம் செஞ்சாங்க !!!

ஓட்டு போடுன்னு SMS அனுப்பி
தொல்ல பண்ணாங்க !!!
ஒருத்தர் விடாம
எல்லாரையும் கூப்ட்டாங்க !!!

கடைசியில,

இந்தா வச்சிக்கோன்னு
ஒரு "மல்லு"க்கு தூக்கி
பரிச குடுத்தாங்க !!!

ஆறரை கோடி தமிழங்கள்ள
ஒரு junior கூடவா சிக்கல???

இதுதான்

"தமிழகத்தின்" செல்ல
குரலுக்கான தேடலா ???



பின்குறிப்பு :-

வெற்றி பெற்ற சிறுமிய நான் குறை சொல்ல வில்லை.
இனவாதமும் என் வாதம் இல்ல.
விஜய் டிவி என்ன ______ க்கு
"தமிழகத்தின்" செல்ல
குரலுக்கான தேடல்னு சொல்லணும்??




Wednesday, June 16, 2010

நந்தலாலா ???

நந்தலாலா ???

எதேச்சையாய் இன்று வேலைக்கு செல்லும் நேரம், ரொம்ப நாள் கழித்து மீண்டும் நந்தலாலா படப் பாடல் கேட்டேன் !!! (நந்தலாலா பாடல் வெளியானப்ப கேட்டது!!!) எல்லா பாடல்களும் எப்போதும் போல ராஜாவின் ராஜாங்கமாக இருந்தது. "தாலாட்டு கேட்க நானும்" என்ற பாடலை மட்டும் பல முறை கேட்டேன். எத்தனை முறை கேட்டாலும் மனதை விட்டு நீங்கவே இல்லை. இந்த பாடல் ராஜாவின் குரலில் கேட்கையில், பழைய பல நினைவுகள் மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்து விட்டது.

"நானாக நானில்லை தாயே", "பொண்ண போல ஆத்தா" , போன்ற ராஜாவின் பல மிக சிறந்த பாடல்கள் போல இதுவும் மிக சிறப்பாய் இருக்கிறது. ராஜாவின் குரலில் தான் எத்தனை வசீகரம்? இந்த மாதிரி ராஜாவின் ராஜா கீதங்கள் கேட்கையில் ஒன்று மட்டும் மிக மிக தெளிவாய் தெரிகிறது ....

"Men May come and Men may go.
  But i go on ...forever"

மேற்கண்ட Tennyson எழுதிய மிக சிறந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது !!! எத்தனை பேர் வந்தாலும், எத்தனை காலம் ஆனாலும், " ராஜா ராஜா தான் ".

நிற்க....ராகதேவனை பத்தி பேச ஆரம்பித்தால் பேசிகிட்டே இருக்கலாம்..நாம் நந்தலாலாவிற்கு வருவோம்.நானும் ஏன் இந்த படம் இன்னும் வரவில்லை என்று யோசிக்காத நாளே இல்லை எனலாம். என்னதான் ஆச்சுங்க இந்த படத்துக்கு??? மிஷ்கின், அவருடைய ஆகச்சிறந்த படைப்பாய் இந்த படத்தை தான் பல முறை சொல்லி இருக்கார். என்ன தான் நடக்குதுன்னே புரியல???? சாரு வேற இந்த படத்தை பத்தி ரொம்பவே சிலாகித்து எழுதி இருந்தார். அதுவும் ராஜா முதல் முறையாக படத்திற்கு தேவையான நல்ல இசை கொடுத்து இருப்பதாகவே வேற அவர் சொன்னார் !!! (இது சாரு அவர்களின் பார்வையில்). நமக்கெல்லாம் அன்னகிளியில் இருந்தே அவர் தேவுடு(Dhevudu - God) தான் !!!!

யோசித்து பர்ர்க்கையில் ஒன்றுமே புலப்பட வில்லை....அப்படி என்ன தாங்க இந்த படம் வெளியுடுவதில் பிரச்சினை?? மிஷ்கின், சாரு மாதிரி ஆட்களுக்கு படத்த போட்டு காட்டுவதை விட நல்ல விநியோகஸ்தர் அல்லது சினிமா மீது காதல் உள்ள வியாபாரி யாருக்காவது போட்டு காட்டி படம் வெளி வரும் வழியை பார்க்கலாம். படத்தின் விளம்பரங்களில் எல்லாம் ராஜாவின் பெயர் தான் முதலில்...அதுவும் படத்தின் trailer பார்க்கையில், இளையராஜாவுடன் ஒரு பயணம் என்று படா buid-up வேறு !!! ஐயங்கரன். "வில்லு, ஏகன்" மாதிரி படங்கள் வெளி இடுகையில் இந்த படம் ஏன் வெளியிட மாட்டேன்றங்க?? For sure content wise, அந்த படங்கள் விட நந்தலாலா நல்லாவே இருக்கும். சமீபத்தில் ஐயங்கரன் வெளியிட்ட அங்காடி தெரு வெற்றி படம் தான். பின் ஏன் நந்தலாலா விஷயத்தில் இத்தனை மெத்தனம். ராஜா அவர்கள் எப்பவும் போல மௌனமாவே இருக்கார், மிஷ்கின், அவர் ஒரு பக்கம் சேரனை வைத்து "யுத்தம் செய்" என்ற படம் எடுக்க போய்ட்டார்??

அப்புறம், யார்தான் தேரை இழுத்து தெருவுக்கு விடுவாங்க???

கல்லூரி காதல் !!!


வைகறையில் பூத்த மலர்களாய் நீ !!!
உன்னிடத்தில் உதித்த நினைவுகளாய் நான் !!!

என்னவெல்லாம் செய்தாய் எனை???
பூ பூவாய் கொய்தாய் மனம் தனை !!!

நானா கேட்டேன் உன் இதயம் தனை ???
நீயாய் விடுத்து சென்றாய் என்னிடத்தில் உனை !!!

இதுவரை என்னுள் இல்லாத என் நெஞ்சம் தனை
உன்னோடு சேர்த்து எனக்கே எனக்காய் செய்தாய் நமை !!!

உயிரோடு உதிரமாய் நிறைத்தாய் நம் காதல் தனை !!!

நம் காதல் வாழ்க !!!
காதல் படிக்கட்டுகளாய் அல்ல !!!
கல்லுரி கல்வெட்டுகளாய் !!!
கல்மேஜை(stone bench) காதல்வெட்டுகளாய் !!!

டிஸ்கி : - "எவ்ளவோ பண்ணிட்டோம்?? இத பண்ணமாட்டோமா !!! " என்ற ரீதியில் மேல படிச்சதை பெருசா மனசுல வெச்சிக்காம தொடர்ந்து ஆதரவு கொடுங்க !!!!

Wednesday, June 9, 2010

ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்


சமீபத்தில் விடுமுறைக்கு ஊருக்கு போய் இருந்த சமயம், ஒரு நாள் சென்னையிலிருந்து எங்க ஊர் விளாப்பாக்கத்திற்கு பேருந்தில் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றேன். எப்படியும் ஒரு 2-1/2 மணி நேரம் பயணம் இருக்குமே, என புத்தகம் எதாவது வாங்கலாம் என கடையை துழாவினேன். எப்பவும் போல ஆ.வி., குமுதம் மற்ற சில புத்தகங்களை பார்த்தேன். எல்லாம் ஏற்கனவே படித்து முடித்து இருந்ததால் கடையை சுத்தி சுத்தி பார்த்து கிட்டு இருந்தேன். கடைக்காரர் சற்றே எரிச்சலுடன், என்ன சார் 'பலான' புத்தகம் வேணுமா என்றார்?, நான் கொஞ்சம் டரியலாகி அவரை பார்க்க, என்ன தான் வேணும் என்றார்?. இல்ல வேற என்ன புத்தகங்கள் இருக்கு என்றேன்?. இந்த பக்கம் பாருங்க என்று கடையின் இன்னொரு இடது ஓரத்தை காண்பித்தார். எராளமான கிழக்கு பதிப்பக புத்தகங்கள் இன்ன பிற புத்தகங்கள் இருந்தன. என்ன வாங்கலாம் என யோசித்தபடியே இருக்கையில், ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகம் கண்ணில் பட்டது.(ஏற்கனவே பல பதிவுலக நண்பர்கள் இப்புத்தகத்தை பற்றி எழுதியவை படித்த ஞாபகம்) 100 ரூ என்றார் கடைக்காரர், ஆச்சரியமாக புத்தகத்திலும் அதே விலை தான் இருந்தது. புத்தகம் வாங்கி கொண்டு ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

புத்தகத்தை பிரித்து பார்க்கும் முன், முன் அட்டை, பின் அட்டை, முன்னுரை எல்லாம் படித்து முடிக்க, வண்டி கிளம்பியது. கே.ரகோத்தமன், என்ற முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி எழுதி இருந்த புத்தகம், 225 பக்கங்கள் இருந்தது.
படிக்க படிக்க புத்தகத்துள் மூழ்கி போனேன். பக்கத்தில் இருந்த எங்க வயதான ஊர்க்காரர்(படிக்காதவர்) ஒருவர், ரொம்ப பரிதாபமா, என்ன தம்பி பரீட்சைக்கு படிக்கறியா? என்றார். நான் ஆமாம், இல்லை போல தலை அசைத்து விட்டு தொடர்ந்து புத்தகத்தை படித்து கொண்டு இருந்தேன். ஒரு வழியாக ஆற்காடு வருகையில் 160 பக்கங்கள் வரை முடித்து இருந்தேன். அங்கிருந்து அடுத்த பேருந்து எங்க ஊருக்கு இன்னும் 45 நிமிடங்கள் இருந்தது. ஒரு தேனீர் கடையில் டீ சொல்லிட்டு, கடை பெஞ்சில் அமர்ந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக எங்க ஊர் பேருந்து சரியாக வரும் நேரம் புத்தகத்தை முடித்து இருந்தேன். வீட்டிற்கு சென்றடைந்தவுடன், ஆச்சர்யம் தாளாமல், மறுபடியும் முக்கியமான சில பக்கங்களை புரட்டி பார்த்தேன்.

புத்தகம் முடித்த பிறகு, ராஜிவ் கொலை வழக்கு குறித்த பல மர்மங்கள் ஒருளவு தெளிவு பெற்று தான் இருந்தது. இக்கொலை வழக்கின் விசாரணை எப்படி நடந்தது? எப்படியெல்லாம் ஆதாரங்கள் சேகரித்து கொலையில் சம்பந்தபட்ட பல பேரை கைது செய்தனர், விசாரணை செய்தனர் என கொஞ்சம் விளக்கமாகவே எழுதி இருந்தனர். நிறைய தகவல்கள் உள்ளது புத்தகத்தில், எனினும் இன்னும் கொஞ்சம் உண்மைகள் இப்புத்தகத்தில் வெளி வர வில்லை என்றே நான் நம்புகிறேன்(ஆசிரியர் சொல்வது போல, பல அரசியல் காரணங்களாக இருக்கலாம்) அனாலும் நிறைய புதிய தகவல்கள் உள்ளது. என்ன காரணங்கள், எப்படி திட்டமிட்டனர், யார் யார் எல்லாம் ஈடுபட்டனர் என்று அருமையாக விளக்கப்பட்டது. இதை ஒரு தகவல் புத்தக நடையில் எழுதாமல், கொஞ்சம் கதை நடையில் எழுதி இருப்பது விறுவிறுப்பை கூட்டுகின்றது.

எந்த அளவிற்கு நமது உளவு துறை வேலை செய்து கொண்டு இருக்கிறது என்பதை படிக்கையில், நிஜமாகவே நம் நாடு குறித்த பல சந்தேகங்கள் மற்றும் பயங்கள் வரத்தான் செய்கிறது. அது மட்டும் இல்லாமல், விடுதலை புலிகளின் திட்டமிடல், அவர்களின் உளவுத்துறை மிக துல்லியமாக வேலை செய்ததை இந்த புத்தகத்தில் ஆசிரியர் அழகாக விளக்கி உள்ளார். எந்த ஒரு சின்ன தடயமும் இல்லாமல் வழக்கை துவங்கி, ஹரிபாபு புகைபடத்தில் இருந்து, சுபா சுந்தரத்தை பிடித்து, பின்பு பலவாறு தேடி எப்படி நளினி மற்றும் முருகனை பிடித்தனர், சிவராசன் எப்படி இறந்தான் என மிக எளிய நடையில் சொல்லப்பட்டு உள்ளது. பல ஆதார கடிதங்கள், புகைப்படங்கள் (கருப்பு/வெள்ளை கொஞ்சம் வெறுப்பேற்றுகிறது, என்ன செய்ய? 100 ரூபாய்க்கு அவ்வளவுதான் கிடைக்கும் போல) இணைக்க பட்டுள்ளது.

பிரபாகரன், பொட்டு அம்மான், கிட்டு, பத்மநாபா கொலை வழக்கு, நளினி-முருகன் காதல், தமிழ் நாட்டின் அரசியல் சக்திகள், வைக்கோ, கருணாநிதி, சி.பி.இ கார்த்திகேயன், மரகதம் அம்மா, வாழப்பாடி, ஸ்ரீபெரும்புதூர், சிவராசன், ஹரிபாபு, சுபா சுந்தரம், சுபா, தனு, சின்ன சாந்தன், பெங்களூரு(அப்போ பெங்களூர்) ரங்கநாத், கோடியக்கரை சண்முகம், அமைதி படை, LTTE, சாத்தனின் படைகள் என பல விஷயங்கள் பற்றி அற்புதமாக சொல்லி இருக்காங்க. கார்த்திகேயன் அவர்களை பகிரங்கமாகவே பல இடங்களில் ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார், முக்கியமாக பல அரசியல் தலைவர்களை விசாரிக்காமல் விட்டதற்காக! இந்த புத்தகம் தொகுப்பிலும் சில அரசியல் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், ஏன் என்றால் சில இடங்களில் மர்மம் முழுமையாக விலக வில்லை. ஆனாலும் புத்தகம் மிக விறுவிறுப்பாக உள்ளது என்ற உண்மையை மறுக்க இயலாது.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்து பாருங்கள். வைத்த கண் வாங்காமல், ஒரே மூச்சில் படித்து முடித்து விடலாம்.

Sunday, June 6, 2010

மன்மதன் அம்பு



மன்மதன் அம்பு !!! தலைவர் அடுத்த பட அறிவிப்பு வந்தாச்சு !!!

ரொம்ப ரொம்ப மகிழ்சிச்சியா இருக்கு !!! எப்பவும் போலவே, தலைவர் படம்னாலே பல தகவல்கள்...உண்மைகள் சில...பொய்கள் பல...."யாவரும் கேளிர்"னு சொன்னங்க....அப்புறம் "காருண்யம்"னு சொன்னங்க !!! இசை - ஸ்ருதி, உதயநிதி நடிக்கறார்...எத்தனை தகவல்கள் இது மாதிரி ??


அதுதான் கமல்ஹாசர் !!! இனியும் பதிவுலக மற்றும் எழுத்துலக (தனித்தனியா சொல்லிட்டேனோ??) நண்பர்கள் மிக விறுவிறுப்பா எழுதி தள்ளுவாங்க(நானெல்லாம் ஒரு பதிவு போடுறேன் இல்ல...இப்படித்தான்..வேற எப்பூடீ?).

விஷயங்களா இல்லை எழுதுவதற்கு?

- தலைப்பு ஒரு மாதிரியா இருக்கு.
- இவருக்கு எதுக்கு திரிஷா ஜோடி??
- தமிழன் எப்படி இந்தியாவை விடுத்து வெளி நாடுகளில் படம் பிடிக்கலாம்?
- மாதவன் கதாபாத்திரம் சிறியதாக இருக்கும்....
- திரிஷாவின் திரை உலக வாழ்க்கை இனி முற்று பெரும்.

இந்த மாதிரி பல விஷயங்கள் படம் வெளி வரும் முன்பே விவாதிக்கபடும். படம் வெளி வந்த பிறகு, சொல்லவே தேவை இல்லை, அது இதை விட மிக பெரிய சுற்று வரும். இது மாதிரி விமர்சனங்கள், விவாதங்கள், பகடிகள், எள்ளி நகை ஆடுதல் எதுவுமே கமல்ஹாசர்க்கு புதியதே அல்ல. எப்பவும் போல மிக சிறந்த வண்ணங்களோடு வெளிப்படுவார் என அடித்து சொல்லலாம்.

உ.போ.ஒ, வந்த பிறகு, எப்பவும் போல தலைவர் எதுவும் சொல்லாம, அவர் வேலைய மட்டும் பார்த்துகிட்டே இருந்தார். என்ன தான் இவ்வளவு நாள் செய்து கொண்டு இருந்தார்??? "ஆயிரத்தில் ஒருவன்" trailer வெளியீட்டு விழாவின் பொது தலைவர் சொன்னார், "கதை, திரைக்கதை, Locations, நடிகர்கள், இன்ன பிற பெரிய மற்றும் சின்ன சின்ன இத்யாதி விஷயங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டு, அப்புறம் படம் எடுக்க போவதே சால சிறந்தது" என்றார். இதை தான் இவ்வளவு நாளா ம.அ படக்குழுவினர் செய்து கொண்டு இருந்தார்கள். கூடுதலா ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஒத்திகை("rehearsal" ) பார்த்து இருக்காங்க. இது தமிழ் சினிமாவுக்கு புதுசுன்னு கூட சொல்றாங்க. எனக்கு என்னவவோ அப்படி தோணலை, குழுவாக இல்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் தனியாக நிறைய நடிகர்கள் ஒத்திகை பார்ப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன்.(திரை உலக நண்பர்கள் விளங்கி சொன்னால் தான் தெரியும்)


நிற்க...விஷயத்திற்கு வருவோம் !!!


இயக்கம் - K.S.ரவிக்குமார், வெற்றி கூட்டணி தொடரும் என நம்பலாம். கமல்ஹாசர் கிட்ட இருந்து என்ன வாங்கணும் என இயக்குனருக்கு மிக நன்றாகவே தெரியும்.

ஒளிப்பதிவு - மனுஷ் நந்தன், ரவிச்சந்திரனிடம் பாடம் பயின்றவர். நிறைய எதிர்பார்க்கலாம்.

இசை - தேவி ஸ்ரீ பிரசாத், பெரிய களம் இருக்கும் பட்சத்தில் நிறைவாகவே செய்வார் என நம்பலாம்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் - கமல்ஹாசர் - எதுவுமே சொல்வதற்கு இல்லை. கமல்ஹாசர் கண்டிப்பாக அவருடைய ஆஸ்தான குழுவோடு விவாதம் முடித்த பிறகே எல்லாம் finalise ஆகி இருக்கும்.

திரிஷா ஜோடியாக தாரளமாக நடிக்கலாம். வி.தா.வ. யில் அம்மணிக்கு முகத்தில் அத்தனை முதிர்ச்சி தெரிந்தது. நம்புவோம், நடிப்பிலும் முதிர்ச்சி பெறுவார் என! அன்பே சிவம் போல மாதவனும் தனது மிக சிறந்த நடிப்பை வெளிப்படுதத்துவார் என நம்பலாம்.

தீபாவளி திருநாளன்று படம் வெளி வரலாம் என கூறப்படுகிறது, இந்த குழுவின் ஒத்திகை, திட்டமிடுதல் வெற்றி பெற்று, படம் மிக விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்.

டிஸ்கி : மிஷ்கின் கூட என்ன தான் நடந்தது??? நல்ல இயக்குனர். ஏன் என்றே புரியவில்லை? கமல்ஹாசர் கூட இது மாதிரி நிகழ்வுகள் தொன்று தொட்டே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த டிஸ்கிய விளக்கி யாராவது மூத்த பதிவர்கள் நல்ல பதிவா போட்டா நல்லாத்தான் இருக்கும்.

Friday, June 4, 2010

கோபுர தரிசனம் !!! கோடி நன்மை தரும் !!!

நான் "கிளிக்"கியவை
மதுரை
மதுரை -1
மதுரை -2
மதுரை - பொற்றாமரை குளம்
திருப்பரகுன்றம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை-1
திருக்கடையூர்
திருமாற்பேறு
மைசூர்