Friday, December 31, 2010

சீனு டைம்ஸ்-4

ஆண்பாவம் படம் வெளி வந்து 25 ஆண்டுகள் ஆகியதை இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் சமீபத்தில் கொண்டாடினார். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட, மறுபடியும்  தற்பொழுது ஆண்பாவம் படம் பார்த்தேன்.(எத்தனையாவது முறை என தெரிய வில்லை, குறைந்தது ஒரு 20 முறை இருக்கலாம்). சில படங்கள் அந்த கால கட்டங்களில்  ரசிக்க முடியும், பின்னாளில் பார்க்கையில் இந்த படத்தை எப்படி நல்லா இருக்குன்னு  நினைச்சோம்னு தோணும்,  ஆனால் ஆண்பாவம் படம் அந்த வரிசையில் கண்டிப்பாக இல்லை. இன்றளவும், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு அற்புதமான  ஜனரஞ்சகப்படம்.  என்னை பொறுத்த வரையில், இதுவும் உலக சினிமாதான். (கேபிள் அண்ணன் சொல்ற மாதிரி, வெளிநாட்டவர்க்கு நம்ம சினிமா உலக சினிமா, நமக்கு வெளிநாட்டு சினிமா உலக சினிமா.)

மறைந்த திரு.வி.கே.ராமசாமியின் நடிப்பு இந்த படத்தில் மிக மிக நகைச்சுவையுடன் நுட்பமாக இருக்கும். ராஜா அவர்களின் பின்னணி இசை ராஜாங்கம் நடத்தி இருக்கும். இங்கே கீழ உள்ள வீடியோக்களை  பாருங்கள்,  கண்டிப்பாக பிடிக்கும்.

இளையராஜா பின்னணி இசை



VKR நகைச்சுவை


****************************************************************************************************
சமீபத்தில் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய எப்போதும் பெண் புத்தகம் படித்தேன். சுஜாதாவை பற்றி தெரியாதவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக எழுதியது ஒரு பெண்தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அந்தளவிர்ற்கு மிக நுணுக்கமாக பெண்ணைப்பற்றி எழுதி இருப்பார். சின்னு என்ற பெண் கருவில் உருவாவதில் இருந்து தொடங்கி அவள் வாழ்க்கை முழுவதும் நடப்பதை ஒரு பெண்ணின் பார்வையில் அனாயசமாக எழுதி இருப்பார்.

புத்தகம் வெளியான கால கட்டம் எண்பதுகளின் தொடக்கம்...கதாசிரியர் சொல்வது போல, கொஞ்சம்  கதையாக, கொஞ்சம் கட்டுரையாக, கொஞ்சம் தத்துவமாக... பெண்ணை பற்றி சொல்ல வருவதையும், சமுகத்தின் பார்வையில் பெண்ணையும், பெண்ணுக்குள் இருக்கும் மனசையும் அதன் எண்ணங்களையும் மிக அழகாக சொல்லி இருக்கார் சுஜாதா. இந்நூலை எழுத பயன்பட்ட ஆங்கில நாவலையும் அதன் ஆசிரியரையும் மறக்காமல் முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மையின் வெளிச்சம். "Women are meant to be loved, be it any form" என்ற கருத்தை பின் தொடர முயற்சிக்கும், தவிர பெண்கள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இந்த புத்தகம் ஒரு வரப்ப்ராசதம் தான். இந்த புத்தகத்தை படித்த பிறகு, நாம் அறியாத உலகுக்கு சென்ற அனுபவம் உணர முடிகிறது.

எப்போதும் பெண்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்.
விலை Rs.110
****************************************************************************************************
நண்பர்கள், அன்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Wish you all the very best and always happiness in 2011
****************************************************************************************************

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - அன்பின் எய் மாற்றம் !!!

தலைவர் படம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதே தனி கிக் தான். என்ன கொஞ்சம் நல்ல திரை அரங்காக இருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோசபட்டிருப்பேன்.

மன்-மதன்-அம்பு = மேஜர் ராஜ் மன்னர்(கமல்ஹாசர்), மதன கோபால்(மாதவன்), அம்புஜாக்ஷி(த்ரிஷா), தீபா(சங்கீதா) ஆகிய நால்வர்தான்  பிரதான பாத்திரங்கள், இவர்களை வைத்துதான் கதை. நடிகை நிஷா என்கிற அம்புவிற்கும்  மதனுக்கும்  இடையே உள்ள  காதல், கல்யாணத்திற்கு முன்பு மதனின் சந்தேக புத்தியால் தற்காலிகமாக பிரிகிறது. இதனால் பாரிசில் விடுமுறைக்கு தோழி தீபாவுடன் செல்கிறார் அம்பு. மதனோ, அம்புவை சந்தேகித்து மேஜரை வேவு பார்க்கும் அதிகாரியாக அனுப்புகிறார். மேஜர் சில நாள் அம்புவை கண்காணித்த பிறகு அவள் நல்லவள் என சான்றிதழ் கொடுக்கிறார். எதுவும் கெட்டது அம்புவிடம் இல்லை என்று  சொல்வதற்கு நான் எதற்கு உனக்கு காசு கொடுக்க வேண்டும் என மதன் மேஜரிடம் சொல்ல, காசுக்காக(மேஜரின் நண்பன் கேன்சர் நோயாளியின்  வைதியச்செல்வுகாக) மேஜர் மதனிடம் தகிடு தத்தோம் செய்ய ஆரம்பிக்கிறார். அதாவது அம்புவிற்க்கும் இன்னொரு ஆளுக்கும் தொடர்பு இருப்பதாக பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். தொடர்ந்து பொய் மேல் பொய், அம்பு மற்றும் தீபாவுடன் நெருங்கி பழகுதல் என படம் செல்ல, இறுதியில் மதன் அம்புவை அடைந்தாரா, மேஜர் அம்புவை அடைந்தாரா என்பதை இரண்டாம் பாதியில் நகைச்சுவையோடு சொல்லி முடித்து இருக்கின்றனர்.

மேஜராக கமல் அந்த பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவோடு செய்து இருக்கிறார்.அம்புவாக த்ரிஷா எப்பொழுதும் நடிகைகளுக்கே உள்ள மென்சோகத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். மதனாக மாதவன் பின்னி இருக்கிறார், அதுவும் குடித்து விட்டு பேசும் இடங்களில் அருமையாக நடித்து இருக்கிறார்.(ஆனாலும் கொஞ்சம் படம் முழுக்க ஓவராக குடிச்சிகிட்டே இருக்கார்). தீபாவாக சங்கீதா கலக்கி இருக்காங்கா....நிறைய இடங்களில் எல்லாரயும் ஓரங்கட்டி அசத்தி இருக்காங்கா. எல்லாரும் சொந்த  குரலில்  பேசியது  அருமை.  படத்தில் கமலின் நண்பனாக ரமேஷ் அரவிந்த் மற்றும் நண்பரின் மனைவியாக ஊர்வசி நடித்து இருக்கின்றனர். கேன்சர் நோயாளியாக ரமேஷ் அரவிந்த் ரொம்ப நல்லா நடித்து இருக்கின்றார். ரமேஷ் அரவிந்தின் கதாப்பாத்திரப்பெயர் ராஜன். (அபூர்வ ராகங்கள்  காலங்களில் கமலுக்கு உண்மையிலயே  ராஜன் என்ற கேன்சரால்  பாதிக்கப்பட்ட நண்பர் இருந்தார் என்பது வரலாறு). தீபாவின் பிள்ளைகளாக  நடித்த குட்டி பையனும் பொண்ணும் செம க்யூட். மற்றபடி சூர்யா ஒரு பாட்டுக்கு வர்றார், ஓவியா, உஷா உதூப், மலையாள தம்பதிகள் குஞ்சன் மற்றும் மஞ்சு, ஸ்ரீமன், ஆகாஷ்(அதாங்க வனிதா விஜயகுமரோட முதல் புருஷன்) என நிறைய பேர் இருகின்றனர்.

படத்தின் பெரிய விளக்குகள் (அதாங்க Highlights)
  • வசனங்கள் எல்லாம் செம கூர்மை...நிறைய  ஒன் லைனர்ஸ் அருமை. சின்ன சின்னதாக அருமையா படம் முழுக்க வசனங்கள் வந்துகிட்டே இருக்கு.
  • ஒட்டுமொத்தமாக படத்தின் மேகிங் ரொம்ப ரிச்சாக அழகாக உள்ளது.
  • கதாபாத்திரங்கள் தேர்வு.(குறிப்பா சங்கீதா, உஷா உதூப், மாதவன், குட்டி பசங்க)
  • நீல வானம் பாடல் மூலம் சொல்லப்படும் திருப்பு காட்சிகள் (உண்மையிலயே திருப்பு காட்சிகள் தான்...படத்தில் பாருங்க..புரியும்) மிக மிக அழகு. தமிழ் சினிமாவில் அல்லது இந்திய சினிமாவில் நான் பார்த்தது இது தான் முதல் முறை.
  • பாடல்கள் எல்லாம் அருமை(பாடல்கள் வரும் இடம் எல்லாம் அழகு), இன்னும் பின்னணி இசை கொஞ்சம் நல்லா இருந்து இருக்கலாம்.
  • மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு ரொம்ப நல்லா செஞ்சி இருக்கார். அந்த கப்பலை எடுத்த டாப் அங்கிள் சாட்ஸ், வெளிநாட்டு காட்சிகள், நீல வானம் பாடல் என படம் முழுக்க மிக நேர்த்தியாக செய்து இருக்கார்.
  • உடைகள் ரொம்ப அழகாக இருக்கு படம் முழுக்க..உபயம்-கௌதமி.
  • வசனத்திற்கு ஏற்ப வரும் குறிப்பு காட்சிகள் செம கிளாஸ்.
  • தகிடு ததோம் பாடல் ஆரம்பிக்கும் இடம், ஒரு சின்ன சண்டை காட்சி.
ஒரு நடிகையை எப்படியெல்லாம் சந்தேகப்பட முடியும் என போகிற போக்கில் அழகாக காட்டி இருக்காங்க. கமல் அவர்களை கேன்சர் நோய் எந்தளவிற்கு பாதித்து உள்ளது(ராஜன், கௌதமி, ஸ்ரீவித்யா, மகேஷ் என கமலின் வட்டார நண்பர்களில் பாதிப்பாக கூட இருக்கலாம்) அவரின்  கதை வசனங்களில் தெளிவாக தெரிகிறது. திரைக்கதையை எப்பொழுதும் விட்டு கொடுக்காத கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம்  மற்றும் இந்த படத்தில் கமலிடமே விட்டு விட்டார். சர்ச்சைக்குரிய கவிதை இங்கு கத்தாரில் முழுவதுமாக வருகிறது...நம்ம ஊரில் எப்படி என தெரிய வில்லை, இந்த கவிதைக்கு எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்  என எனக்கு சத்தியமாக புரியவில்லை.

படத்தில் இத்தனை இருந்தும் அங்காங்கே தொய்வு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. இது எடிட்டிங்கில் உள்ள பிரச்சினையா அல்லது திரைக்கதையா  என சொல்ல  தெரிய வில்லை. படத்தின் ஒரே மற்றும் பெரிய மைனசாக எனக்கு தெரிவது இது மட்டுமே. கமல் மற்றும் த்ரிஷாவிற்கு வரும் காதல் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் (முத்தம் இல்லைங்க.... காட்சிகள்) கொடுத்து இருக்கலாம்.மற்றபடி படம்  எனக்கு   மிகவும் பிடித்து இருந்தது...ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.
.

Tuesday, December 7, 2010

நகைச்சுவை - 1 !!!









Wednesday, December 1, 2010

2 மாநிலங்கள் (எனது கல்யாணக்கதை) - சேத்தன் பகத்

சேத்தன் பகத் எழுதிய 2 States - The Story of My Marriage என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். பள்ளி நாட்களுக்கு அப்புறம் மிக நீண்ட நாள் கழித்து படித்த ஆங்கில புத்தகம். இந்த புத்தகத்தை, என்னோட நண்பர் ஒருவர் விடுமுறை முடிந்து வரும்பொழுது வாங்கிட்டு வரவும்னு சொன்னதால் வாங்கினேன்...அப்படி என்ன இருக்கு இந்த புத்தகத்தில் என புரட்ட ஆரம்பித்தேன்..மூழ்கி விட்டேன், முழு மூச்சில் படித்தும் விட்டேன். எப்பவுமே, நண்பர்கள் யாராவது புத்தகம் வாங்கி வர சொன்னால், நான் வாங்கி கொடுத்து, அவர்கள் படித்த பிறகே நான் படிப்பேன். ஆனால் இந்த புத்தகம் என் கொள்கையை மொத்தமாக சேதப்படுத்தி விட்டது.
சேத்தன் பகத் அவர்களின் எளிய எழுத்து நடையா, கதைக்களமா எதுவென்று சொல்ல இயலவில்லை, ஏதோ ஒன்று வசிய சக்தி மாதிரி புத்தகத்தில் இருந்து கண்களை எடுக்கவே விட வில்லை. ரொம்ப எளிமையான, அழகான காதல் கதை.ஒரு பஞ்சாபிக்கும் தமிழச்சிக்கும் உருவாகும் காதல், எவ்வாறு பல போராட்டங்களை சந்தித்து பின்பு கல்யாணத்தில் முடிகிறது என்பதே கதை. சேத்தன் பகத் அவர்களின் உண்மை காதல் கதையைத்தான் புத்தகமாக தந்துள்ளார்.
என்னை பொறுத்த வரை, ஒரு நல்ல எழுத்தாளரின் அடையாளம் மற்றும் வெற்றி, படிப்பவர்களை கதையோடும், பாத்திரங்களோடும், ஒரு மாதிரி மாயையான உலகத்தில் உலவ விட்டு, அந்த தளத்திற்கு படிப்பவர்களை கொண்டு செல்ல வேண்டும். இதை சேத்தன் பகத் மிக அழகாக கையாண்டுள்ளார். IIMA, IIT, கார்பரேட் உலகம், பஞ்சாபி மற்றும் தமிழ் கலாச்சாரம், அரபிந்தோ ஆஷ்ரம், உறவு முறை சிக்கல்கள், கல்யாண முறைகள் என காதல் சொட்ட சொட்ட கதை செல்கிறது. என்ன ஒரே குறை என்றால், தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் நிறைய இடத்தில் கிண்டலடித்து இருக்கார். இதை அவரே, ஏன் என முன்னுரையிலும் சொல்லி இருக்கார். மேலும், கதை சொல்வது ஒரு பஞ்சாபி என்பதால் ஒத்து கொள்ளலாம். புத்தகத்தின் அட்டை, கதாசரியரின் சமர்ப்பணம்(Dedication), என நிறைய சின்ன சின்ன விஷயங்கள் choooo chweet and cute. Give it a try. 

Title: 2 States
Publisher:
Rupa and Co., New Delhi
Language:
English
Release Date:
October 08, 2009 
Price:   Rs .95
.