Friday, December 31, 2010

சீனு டைம்ஸ்-4

ஆண்பாவம் படம் வெளி வந்து 25 ஆண்டுகள் ஆகியதை இயக்குனர் பாண்டியராஜன் அவர்கள் சமீபத்தில் கொண்டாடினார். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாட, மறுபடியும்  தற்பொழுது ஆண்பாவம் படம் பார்த்தேன்.(எத்தனையாவது முறை என தெரிய வில்லை, குறைந்தது ஒரு 20 முறை இருக்கலாம்). சில படங்கள் அந்த கால கட்டங்களில்  ரசிக்க முடியும், பின்னாளில் பார்க்கையில் இந்த படத்தை எப்படி நல்லா இருக்குன்னு  நினைச்சோம்னு தோணும்,  ஆனால் ஆண்பாவம் படம் அந்த வரிசையில் கண்டிப்பாக இல்லை. இன்றளவும், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு அற்புதமான  ஜனரஞ்சகப்படம்.  என்னை பொறுத்த வரையில், இதுவும் உலக சினிமாதான். (கேபிள் அண்ணன் சொல்ற மாதிரி, வெளிநாட்டவர்க்கு நம்ம சினிமா உலக சினிமா, நமக்கு வெளிநாட்டு சினிமா உலக சினிமா.)

மறைந்த திரு.வி.கே.ராமசாமியின் நடிப்பு இந்த படத்தில் மிக மிக நகைச்சுவையுடன் நுட்பமாக இருக்கும். ராஜா அவர்களின் பின்னணி இசை ராஜாங்கம் நடத்தி இருக்கும். இங்கே கீழ உள்ள வீடியோக்களை  பாருங்கள்,  கண்டிப்பாக பிடிக்கும்.

இளையராஜா பின்னணி இசை



VKR நகைச்சுவை


****************************************************************************************************
சமீபத்தில் வாத்தியார் சுஜாதா அவர்கள் எழுதிய எப்போதும் பெண் புத்தகம் படித்தேன். சுஜாதாவை பற்றி தெரியாதவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக எழுதியது ஒரு பெண்தான் என்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அந்தளவிர்ற்கு மிக நுணுக்கமாக பெண்ணைப்பற்றி எழுதி இருப்பார். சின்னு என்ற பெண் கருவில் உருவாவதில் இருந்து தொடங்கி அவள் வாழ்க்கை முழுவதும் நடப்பதை ஒரு பெண்ணின் பார்வையில் அனாயசமாக எழுதி இருப்பார்.

புத்தகம் வெளியான கால கட்டம் எண்பதுகளின் தொடக்கம்...கதாசிரியர் சொல்வது போல, கொஞ்சம்  கதையாக, கொஞ்சம் கட்டுரையாக, கொஞ்சம் தத்துவமாக... பெண்ணை பற்றி சொல்ல வருவதையும், சமுகத்தின் பார்வையில் பெண்ணையும், பெண்ணுக்குள் இருக்கும் மனசையும் அதன் எண்ணங்களையும் மிக அழகாக சொல்லி இருக்கார் சுஜாதா. இந்நூலை எழுத பயன்பட்ட ஆங்கில நாவலையும் அதன் ஆசிரியரையும் மறக்காமல் முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மையின் வெளிச்சம். "Women are meant to be loved, be it any form" என்ற கருத்தை பின் தொடர முயற்சிக்கும், தவிர பெண்கள் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த எனக்கு இந்த புத்தகம் ஒரு வரப்ப்ராசதம் தான். இந்த புத்தகத்தை படித்த பிறகு, நாம் அறியாத உலகுக்கு சென்ற அனுபவம் உணர முடிகிறது.

எப்போதும் பெண்
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்.
விலை Rs.110
****************************************************************************************************
நண்பர்கள், அன்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Wish you all the very best and always happiness in 2011
****************************************************************************************************

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - அன்பின் எய் மாற்றம் !!!

தலைவர் படம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதே தனி கிக் தான். என்ன கொஞ்சம் நல்ல திரை அரங்காக இருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோசபட்டிருப்பேன்.

மன்-மதன்-அம்பு = மேஜர் ராஜ் மன்னர்(கமல்ஹாசர்), மதன கோபால்(மாதவன்), அம்புஜாக்ஷி(த்ரிஷா), தீபா(சங்கீதா) ஆகிய நால்வர்தான்  பிரதான பாத்திரங்கள், இவர்களை வைத்துதான் கதை. நடிகை நிஷா என்கிற அம்புவிற்கும்  மதனுக்கும்  இடையே உள்ள  காதல், கல்யாணத்திற்கு முன்பு மதனின் சந்தேக புத்தியால் தற்காலிகமாக பிரிகிறது. இதனால் பாரிசில் விடுமுறைக்கு தோழி தீபாவுடன் செல்கிறார் அம்பு. மதனோ, அம்புவை சந்தேகித்து மேஜரை வேவு பார்க்கும் அதிகாரியாக அனுப்புகிறார். மேஜர் சில நாள் அம்புவை கண்காணித்த பிறகு அவள் நல்லவள் என சான்றிதழ் கொடுக்கிறார். எதுவும் கெட்டது அம்புவிடம் இல்லை என்று  சொல்வதற்கு நான் எதற்கு உனக்கு காசு கொடுக்க வேண்டும் என மதன் மேஜரிடம் சொல்ல, காசுக்காக(மேஜரின் நண்பன் கேன்சர் நோயாளியின்  வைதியச்செல்வுகாக) மேஜர் மதனிடம் தகிடு தத்தோம் செய்ய ஆரம்பிக்கிறார். அதாவது அம்புவிற்க்கும் இன்னொரு ஆளுக்கும் தொடர்பு இருப்பதாக பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். தொடர்ந்து பொய் மேல் பொய், அம்பு மற்றும் தீபாவுடன் நெருங்கி பழகுதல் என படம் செல்ல, இறுதியில் மதன் அம்புவை அடைந்தாரா, மேஜர் அம்புவை அடைந்தாரா என்பதை இரண்டாம் பாதியில் நகைச்சுவையோடு சொல்லி முடித்து இருக்கின்றனர்.

மேஜராக கமல் அந்த பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவோடு செய்து இருக்கிறார்.அம்புவாக த்ரிஷா எப்பொழுதும் நடிகைகளுக்கே உள்ள மென்சோகத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். மதனாக மாதவன் பின்னி இருக்கிறார், அதுவும் குடித்து விட்டு பேசும் இடங்களில் அருமையாக நடித்து இருக்கிறார்.(ஆனாலும் கொஞ்சம் படம் முழுக்க ஓவராக குடிச்சிகிட்டே இருக்கார்). தீபாவாக சங்கீதா கலக்கி இருக்காங்கா....நிறைய இடங்களில் எல்லாரயும் ஓரங்கட்டி அசத்தி இருக்காங்கா. எல்லாரும் சொந்த  குரலில்  பேசியது  அருமை.  படத்தில் கமலின் நண்பனாக ரமேஷ் அரவிந்த் மற்றும் நண்பரின் மனைவியாக ஊர்வசி நடித்து இருக்கின்றனர். கேன்சர் நோயாளியாக ரமேஷ் அரவிந்த் ரொம்ப நல்லா நடித்து இருக்கின்றார். ரமேஷ் அரவிந்தின் கதாப்பாத்திரப்பெயர் ராஜன். (அபூர்வ ராகங்கள்  காலங்களில் கமலுக்கு உண்மையிலயே  ராஜன் என்ற கேன்சரால்  பாதிக்கப்பட்ட நண்பர் இருந்தார் என்பது வரலாறு). தீபாவின் பிள்ளைகளாக  நடித்த குட்டி பையனும் பொண்ணும் செம க்யூட். மற்றபடி சூர்யா ஒரு பாட்டுக்கு வர்றார், ஓவியா, உஷா உதூப், மலையாள தம்பதிகள் குஞ்சன் மற்றும் மஞ்சு, ஸ்ரீமன், ஆகாஷ்(அதாங்க வனிதா விஜயகுமரோட முதல் புருஷன்) என நிறைய பேர் இருகின்றனர்.

படத்தின் பெரிய விளக்குகள் (அதாங்க Highlights)
  • வசனங்கள் எல்லாம் செம கூர்மை...நிறைய  ஒன் லைனர்ஸ் அருமை. சின்ன சின்னதாக அருமையா படம் முழுக்க வசனங்கள் வந்துகிட்டே இருக்கு.
  • ஒட்டுமொத்தமாக படத்தின் மேகிங் ரொம்ப ரிச்சாக அழகாக உள்ளது.
  • கதாபாத்திரங்கள் தேர்வு.(குறிப்பா சங்கீதா, உஷா உதூப், மாதவன், குட்டி பசங்க)
  • நீல வானம் பாடல் மூலம் சொல்லப்படும் திருப்பு காட்சிகள் (உண்மையிலயே திருப்பு காட்சிகள் தான்...படத்தில் பாருங்க..புரியும்) மிக மிக அழகு. தமிழ் சினிமாவில் அல்லது இந்திய சினிமாவில் நான் பார்த்தது இது தான் முதல் முறை.
  • பாடல்கள் எல்லாம் அருமை(பாடல்கள் வரும் இடம் எல்லாம் அழகு), இன்னும் பின்னணி இசை கொஞ்சம் நல்லா இருந்து இருக்கலாம்.
  • மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு ரொம்ப நல்லா செஞ்சி இருக்கார். அந்த கப்பலை எடுத்த டாப் அங்கிள் சாட்ஸ், வெளிநாட்டு காட்சிகள், நீல வானம் பாடல் என படம் முழுக்க மிக நேர்த்தியாக செய்து இருக்கார்.
  • உடைகள் ரொம்ப அழகாக இருக்கு படம் முழுக்க..உபயம்-கௌதமி.
  • வசனத்திற்கு ஏற்ப வரும் குறிப்பு காட்சிகள் செம கிளாஸ்.
  • தகிடு ததோம் பாடல் ஆரம்பிக்கும் இடம், ஒரு சின்ன சண்டை காட்சி.
ஒரு நடிகையை எப்படியெல்லாம் சந்தேகப்பட முடியும் என போகிற போக்கில் அழகாக காட்டி இருக்காங்க. கமல் அவர்களை கேன்சர் நோய் எந்தளவிற்கு பாதித்து உள்ளது(ராஜன், கௌதமி, ஸ்ரீவித்யா, மகேஷ் என கமலின் வட்டார நண்பர்களில் பாதிப்பாக கூட இருக்கலாம்) அவரின்  கதை வசனங்களில் தெளிவாக தெரிகிறது. திரைக்கதையை எப்பொழுதும் விட்டு கொடுக்காத கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம்  மற்றும் இந்த படத்தில் கமலிடமே விட்டு விட்டார். சர்ச்சைக்குரிய கவிதை இங்கு கத்தாரில் முழுவதுமாக வருகிறது...நம்ம ஊரில் எப்படி என தெரிய வில்லை, இந்த கவிதைக்கு எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்  என எனக்கு சத்தியமாக புரியவில்லை.

படத்தில் இத்தனை இருந்தும் அங்காங்கே தொய்வு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. இது எடிட்டிங்கில் உள்ள பிரச்சினையா அல்லது திரைக்கதையா  என சொல்ல  தெரிய வில்லை. படத்தின் ஒரே மற்றும் பெரிய மைனசாக எனக்கு தெரிவது இது மட்டுமே. கமல் மற்றும் த்ரிஷாவிற்கு வரும் காதல் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் (முத்தம் இல்லைங்க.... காட்சிகள்) கொடுத்து இருக்கலாம்.மற்றபடி படம்  எனக்கு   மிகவும் பிடித்து இருந்தது...ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.
.

Tuesday, December 7, 2010

நகைச்சுவை - 1 !!!









Wednesday, December 1, 2010

2 மாநிலங்கள் (எனது கல்யாணக்கதை) - சேத்தன் பகத்

சேத்தன் பகத் எழுதிய 2 States - The Story of My Marriage என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். பள்ளி நாட்களுக்கு அப்புறம் மிக நீண்ட நாள் கழித்து படித்த ஆங்கில புத்தகம். இந்த புத்தகத்தை, என்னோட நண்பர் ஒருவர் விடுமுறை முடிந்து வரும்பொழுது வாங்கிட்டு வரவும்னு சொன்னதால் வாங்கினேன்...அப்படி என்ன இருக்கு இந்த புத்தகத்தில் என புரட்ட ஆரம்பித்தேன்..மூழ்கி விட்டேன், முழு மூச்சில் படித்தும் விட்டேன். எப்பவுமே, நண்பர்கள் யாராவது புத்தகம் வாங்கி வர சொன்னால், நான் வாங்கி கொடுத்து, அவர்கள் படித்த பிறகே நான் படிப்பேன். ஆனால் இந்த புத்தகம் என் கொள்கையை மொத்தமாக சேதப்படுத்தி விட்டது.
சேத்தன் பகத் அவர்களின் எளிய எழுத்து நடையா, கதைக்களமா எதுவென்று சொல்ல இயலவில்லை, ஏதோ ஒன்று வசிய சக்தி மாதிரி புத்தகத்தில் இருந்து கண்களை எடுக்கவே விட வில்லை. ரொம்ப எளிமையான, அழகான காதல் கதை.ஒரு பஞ்சாபிக்கும் தமிழச்சிக்கும் உருவாகும் காதல், எவ்வாறு பல போராட்டங்களை சந்தித்து பின்பு கல்யாணத்தில் முடிகிறது என்பதே கதை. சேத்தன் பகத் அவர்களின் உண்மை காதல் கதையைத்தான் புத்தகமாக தந்துள்ளார்.
என்னை பொறுத்த வரை, ஒரு நல்ல எழுத்தாளரின் அடையாளம் மற்றும் வெற்றி, படிப்பவர்களை கதையோடும், பாத்திரங்களோடும், ஒரு மாதிரி மாயையான உலகத்தில் உலவ விட்டு, அந்த தளத்திற்கு படிப்பவர்களை கொண்டு செல்ல வேண்டும். இதை சேத்தன் பகத் மிக அழகாக கையாண்டுள்ளார். IIMA, IIT, கார்பரேட் உலகம், பஞ்சாபி மற்றும் தமிழ் கலாச்சாரம், அரபிந்தோ ஆஷ்ரம், உறவு முறை சிக்கல்கள், கல்யாண முறைகள் என காதல் சொட்ட சொட்ட கதை செல்கிறது. என்ன ஒரே குறை என்றால், தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் நிறைய இடத்தில் கிண்டலடித்து இருக்கார். இதை அவரே, ஏன் என முன்னுரையிலும் சொல்லி இருக்கார். மேலும், கதை சொல்வது ஒரு பஞ்சாபி என்பதால் ஒத்து கொள்ளலாம். புத்தகத்தின் அட்டை, கதாசரியரின் சமர்ப்பணம்(Dedication), என நிறைய சின்ன சின்ன விஷயங்கள் choooo chweet and cute. Give it a try. 

Title: 2 States
Publisher:
Rupa and Co., New Delhi
Language:
English
Release Date:
October 08, 2009 
Price:   Rs .95
.
 

Monday, November 29, 2010

நந்தலாலா - ஒரு காவியம் !!!

நந்தலாலா படம் ஏன் இன்னும் வெளியிடாம இருக்காங்க, என்று வருந்தி ஒரு ஆறு மாதம் முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன்...(நந்தலாலா???). நான் வருந்தியதில் எள்ளளவும் தவறு இல்லை என இன்று படத்தை பார்த்ததும் உணர்ந்தேன்....மெய் சிலிர்த்தேன். சொல்ல போனால், எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாய் இருக்கிறது படம்.

ஏன் மிஷ்கின் இளையராஜா அவர்களின் பெயரை முதலில் போடுகிறார் என நினைப்பவர்கள் படம் பார்த்த பிறகு உணர்ந்து கொள்வார்கள். SPB அவர்கள் ஒரு முறை சொன்னார், இந்த ஆளு ராட்சசன் மாதிரி கம்போஸ் செய்வார், என ஒரு மேடையில் சொன்னதாக ஞாபகம். அவர் சொன்ன வார்த்தைகள் 1000 % (typo error இல்லை) உண்மை...சத்தியம். படத்திற்கு உயிரை உருக்கிற மாதிரி, மனச பிழியர மாதிரி இசை அமைத்து இருக்கார். நிறைய இடங்களில் என்னையும் அறியாமல் நான் அழுதேன்... இசை இல்லாமல் பார்த்தால் கண்டிப்பாக யாருமே அழ வாய்ப்பில்லை. ஒரு படத்திற்கு எங்கு பின்னணி இசை வர வேண்டும், எங்கு வரக்கூடாது என்ற விஷயத்தை மிக மிக துல்லியமாக செய்துள்ளார் இசைக்கடவுள் .
 
மகேஷ் முத்துசுவாமி அவர்களின் ஒளிப்பதிவு கண்களை திரையோடு கட்டிப்போட்டு விடுகிறது. ஒவ்வொரு காட்சியும் அப்படியே நம்ம தமிழ்நாட்டின் எழிலை அழகாக கதையோடு கண் முன்னே நிறுத்துகிறார். படத்திற்ற்கு பெயர் போடும் இடத்திலிருந்து முடியும் வரை ஒவ்வொரு காட்சியும் அற்புதம்.

இயக்குனர் மிஷ்கின் அவர்கள் சொன்னது போல அவரின் ஆகச்சிறந்த  படைப்பு கண்டிப்பாக நந்தலாலா தான். சினிமா என்பது visual medium என்பதை அழகாக காட்சிகளை கொண்டு விளக்குகிறார். படத்தின் எல்லா வசனத்தையும் ஒரு A4 தாளில் எழுதி விடலாம். படத்தில் மிக அதிகமான சின்ன சின்ன கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவரும் மனதில் நிற்கின்றனர். யாரும் ரொம்ப வசனம் பேசலை, ஓவரா நடிக்க வில்லை. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு கதை சொல்கின்றது, மிக அழகாக உள்ளது. எல்லாவற்றுக்கும் அடிநாதம் அன்பே என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கார் மிஷ்கின். முக்கியமாக, யாரையும் கெட்டவராக காட்ட வில்லை இயக்குனர். 

 படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அகிலேஷாக அஸ்வத் ராம் மற்றும் பாஸ்கர் மணியாக மிஷ்கின். படத்தின் பயணம் முழுக்க இவர்கள் இருவர் தான். நடிக்கிறாங்க என்பது எங்கேயும் தெரியாத அளவிற்கு மிகச்சிறப்பா செஞ்சி இருக்காங்க. அப்புறம் அந்த பள்ளி மாணவி, தேனிலவு தம்பதிகள், மாற்று திறனாளி , காவலர்கள், கலாட்டா காளைகள், இளநீர்கார பெரியவர், பைக்ல வருபவர்கள், லாரி ஓட்டுனர், தடி வச்சி இருக்கிற தாத்தா, விபச்சாரியாக வரும் ஸ்னிக்தா, லாரியில் தூங்கிக்கொண்டு வரும் நாசர், வேலைக்காரி, பாட்டி, பாஸ்கர் மணி அண்ணன், அம்மாவாக வரும் ரோகினி, அகிலேஷின் அம்மாவாக வருபவர், திருடுபவர், ஆட்டோ ஓட்டுனர் என எல்லாரும் அமர்களப்படுத்தி இருக்காங்க.  

கதையை பற்றி நான் ஒன்னும் இங்கு சொல்லப்போவது இல்லை. அது ஒரு அனுபவம்...பயண அனுபவம். கண்டிப்பாக திரை அரங்கில் பாருங்கள்...முக்கியமாக நல்ல திரை அரங்கில் பாருங்கள். இது ஒரு ஜப்பானிய படம், ரொம்ப மெதுவா போகுது, ஆர்ட் பிலிம் அப்படின்னு நிறைய பேர் சொல்லுவாங்க...எதையும் நம்பாதிங்க...காது குடுத்து கேட்காதிங்க...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.  
 .

Thursday, October 28, 2010

சீனு டைம்ஸ்-3

மன்மதன் அம்பு இசை கூடிய விரைவில் சிங்கை நாட்டில் வெளியிட போவதாக செய்தி கேள்விப்பட்டு...ரொம்ப குஷி ஆய்ட்டேன். இது வரை மன்மதன் அம்பு படத்தின் புகைப்படம் ஒன்று கூட வெளி வராததே பெரிய ஆச்சரியமா இருக்கு. ரொம்ப மூளைய கசக்கி யோசித்தாலும் எந்த மாதிரி கதை திரைக்கதை உள்ள படம் என்று ஊகிக்க முடிய வில்லை. முதல் முறையாக தலைவர் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத்(DSP) இசை(தசாவதாரத்தில் பின்னணி இசை மட்டும் செய்து இருந்தார்). DSP இசையில் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் , பாட்டெல்லாம் கேட்டா துள்ளலாக, நல்ல தரத்தில்(Quality music output) இருக்கும். எப்படியும் தலைவர் ஒரு பாட்டாவது பாடி இருப்பார். Let us Wait and Hear ...

நிற்க, ( உட்கார்ந்து இருக்கறவங்க தயவு செய்து எழுந்துடாதிங்க ப்ளீஸ்...)
அது என்ன இப்ப எல்லாரும் இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்துகிறார்கள்? இந்த அளவுக்கு ஆடம்பரமான விளம்பரம் உண்மையாகவே தேவைதானா?? எவ்வளவு பணம் செலவு ஆகும், அந்த காசுக்கு குறைந்த பட்ஜெட்ல ஒரு படமே தயார் செய்து விடலாம் போல. அதுவும் மன்மதன் அம்பு படத்தின் பட்ஜெட்டில், மூன்றில் ஒரு பங்கு படத்தின் விளம்பர செலவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஒதுக்கி இருப்பதாக கேள்விப்பட்டேன். அது சரி...பல்லு உள்ளவன் பட்டாணி சாப்பிடறான். நமக்கு தலைவர் படமும் பாடல்களும் வெற்றி பெற்றால் சரிதான்.
****************************************************************************************************
கத்தாரில் WTA சாம்பியன்ஷிப் 2010 டென்னிஸ் போட்டிகள் இந்த வாரம் அக்டோபர்  26ல்  துவங்கி 31ல் முடிவடைகிறது. இந்த போட்டியின் சிறப்பு என்னவென்றால், மகளிர் தரவரிசையில் உள்ள  முதல் எட்டு  பேர்  மட்டும்தான்  ஆடுவார்கள். எனவே, நல்ல சிறப்பான போட்டித்தொடர் இருக்கும். வில்லியம்ஸ்  சகோதரிகள் விலகி கொண்டதால், இன்னும் ரெண்டு பேர் 9, 10ல இருந்தவங்க வந்துட்டாங்க. ஜெயிச்சா ஏழு  கோடி  பரிசு...!!! இங்க கீழ இருக்கற 8 அம்மணிகள் தான் விளையாடறாங்க...(ஒரு அம்மணி மட்டும் புகைப்படம் எடுக்க வரலை, விமானம்  தாமதமோ !!!) 
ஊருக்கு போற ஜோர்ல இந்த போட்டிக்கு நுழைவுச்சீட்டு வாங்க மறுந்துட்டேன். நம்மளுக்கு ரொம்ப புடிச்ச கிம்  கிளிஜ்ச்டேர்ஸ் வேற ஆடுவதால் என்னடா பண்றது... டிக்கெட் எதுவம் இல்லையே என முழிச்சிகிட்டு இருக்கும்  போது அபத்பாந்தவனா  என்னோட  இந்தோனேசியா நண்பர் அவர் அரை இறுதி ஆட்டத்துக்கு  வாங்கிய  நுழைவுச்சீட்டை எனக்கு கொடுத்துட்டார். நான் ஏன் முக்கியமா கிம் கிளிஜ்ச்டேர்ஸ் விளையாடறத   பாக்க போறேன்னா, அந்த அம்மணி கல்யாணம் பண்ணி அவருக்கு குழந்தை பிறந்த பிறகு மறுபடியும் விளையாட வந்து இரண்டு முறை கிராண்ட் ஸ்லாம் வென்று இருக்காங்கா... எவ்வளவு கடினமான விஷயம்....?? ஸ்டெபிக்கு அப்புறம் கிம்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச டென்னிஸ் வீராங்கனை. எப்படியாவது கிம் அரை இறுதிக்கு வந்துடுவாங்க  என்ற நம்பிக்கையில் சனிக்கிழமை வரை  காத்திருக்கிறேன். போன வருஷம்,  எனக்கு மிகவும் பிடித்த ரோஜர் பெடரரை இங்கு நேரில், அவர் விளையாட  பார்த்ததே பெரிய  சந்தோஷம். எப்படியும் கிம்மையும்  நேரில் பார்த்துட்டு  வந்து  அடுத்த பதிவில் விவரிக்கிறேன். 

                                          
****************************************************************************************************

பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா?
சின்ன அய்யா அன்புமணி சவால்! சவால்! சவால்!
 ஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போடத்தெரியாது . உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி. - போன வாரத்திய செய்தி இது.
 
உண்மைதான், மருத்துவர் அய்யா ராமதாஸ் தான் தமிழகத்தின்  உண்மையான கதாநாயகன், ஏன்னா அவர்தான் ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு  கழக கட்சிகளோடு முட்டி மோதி பார்த்து சண்டை போடறாரே. அப்புறம் சின்ன அய்யாகிட்ட யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன், ஆறு மட்டும் எட்டு பேக் வச்சி இருக்கிற நடிகர்களான சல்மான் கான், ஆமிர் கான் எல்லாம் கூட டூப் போட்டுத்தான் சண்டை காட்சியில நடிக்கறாங்க, அவங்க கிட்டயும் இதே பஞ்ச ரிப்பீட்டலமா (Repeat)  என? என்ன கொடுமையா இது, சினிமா எடுக்கறவன் எல்லாம் சண்டை காட்சியில டூப்  போட்டுதான்யா எடுப்பான். இப்படியே, அடுத்து காதல் காட்சி, கற்பழிப்பு காட்சி எதுவும் அந்த நடிகர்களுக்கு பண்ணத்தெரியல, எங்கிட்ட வர சொல்லு, நான் எப்படி பண்ணி காட்டுறேன்னு சொல்லுவாரோ???
****************************************************************************************************
.

Wednesday, October 20, 2010

"அண்ணா"ந்து பார் !!!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இரு பெருந்தலைவர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் காமராஜர் அவர்கள். நெடுநாளாய் இவர்களை பற்றிய வாழ்க்கை வரலாறு படிக்க ஆவலாய் இருந்தேன். போன விடுமுறையில் தென்காசிக்கு நண்பன் கல்யாணத்திற்கு போன போது, திருநெல்வேலியில் ரயில் ஏறும் முன்பு, செஞ்சுரி புத்தகக்கடையில் என்.சொக்கன் எழுதிய "அண்ணா"ந்து பார்! புத்தகமும் வாங்கினேன்.

சின்ன வயதில் நான் வளர்ந்த காலத்தில் அதிகம் பார்த்த கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அண்ணா அவர்கள் பேர் சொல்லியேதான் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல்
செய் - தார்கள், கின்றார்கள், வார்கள். தமிழக அரசியலில் அண்ணா அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் வியக்கத்தக்கது, 1967ல் அண்ணா அவர்களால் ஆட்சி  இழந்த  தேசிய கட்சியான காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை, அண்ணா அவர்கள் போட்ட அஸ்திவாரம் அப்படி. அண்ணாவின் மறைவிற்கு பிறகு, இன்று வரை அவர் தோற்றுவித்த தி.மு.க மற்றும் அவர் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட  அ.தி.மு.க.  மட்டும்தான் தமிழகத்தில்  ஆட்சி செய்கின்றனர்.

புத்தகம் அண்ணா மற்றும் பெரியார் இருவரிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது, தொடர்ந்து அண்ணா அவர்களின் பிறப்பு, பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, அரசியல், பேச்சு மற்றும் எழுத்து பணி பிறகு அரசியல் களம் என விரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த களத்தில் இருந்த அரசியல் கட்சிகள், பெரியாரிடம் அண்ணா கொண்ட ஈடுபாடு, ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்கள், பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து தனி கட்சி தொடங்கியது, பத்திரிக்கைகள் மற்றும் நாடகங்கள் நடத்தியது, தனி திராவிட நாடு கோரிக்கை, தி.மு.க தேர்தலை சந்தித்த விதம், காங்கிரசை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது என நிறைய பல நிகழ்வுகளின் கோர்வையாக உள்ளது.

பெரியாரிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடைசி வரை அண்ணா பெரியாரை எந்த சமயத்திலும் விட்டு கொடுத்ததே இல்லை, பெரியார் அண்ணாவை இகழ்ந்து பேசியும் கூட. புத்தகத்தில் அண்ணா அவர்களின் குறைகள் பற்றி எதுவும் பெரிசா இல்லை...சும்மா கண்துடைப்புக்கு கொஞ்சம் இருக்கு.

அண்ணா வாழ்க்கை பற்றிய இந்த புத்தகத்தில், இன்றைய முதல்வர் பெயர் ஒரு சில இடத்தில் வருகிறது...எங்கோ ஒரு ஓரத்தில் இருந்தவர், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல பேரை காலி செய்து விட்டு முதல்வர் ஆகி விட்டார், இன்று வரை யாரையும் அவரை மீறி வளர விடாம பார்த்துகிட்டு இருக்கார். எதற்கெடுத்தாலும் அண்ணா பேர் சொல்லும் திராவிட கட்சிகள் அண்ணா செய்த மற்றும் செய்ய நினைத்த நல்லாட்சியில் கொஞ்சம் கூட இது நாள் வரை செய்யவில்லை, அப்புறம் என்ன அண்ணா நாமம் வாழ்க, அண்ணா மூன்றெழுத்து, தி.மு.க மூன்றெழுத்துன்னு கதைய விட்டுகிட்டு...!

புத்தகம்

ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 184
விலை : 90
வருடம் : 2007
https://www.nhm.in/shop/978-81-8368-006-6.html

கிழக்கு பதிப்பகத்தின் வலைத்தளத்தில் இந்த புத்தகத்தை பற்றி எழுதி இருப்பதை போல், கடல் போன்ற அண்ணாவின் வாழ்கை வரலாற்றை விழுங்கிய ஒரு குடம் தான் இந்த புத்தகம். இன்னும் நிறைய எழுதிருக்கலாமோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.எனக்கு புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. எனக்கு வாழ்கை வரலாறுகள் படிக்க ரொம்ப பிடிக்கும், பொதுவாக எல்லாருக்கும் அப்படித்தானே.(அடுத்தவங்க கதையென்றால் நம்மதான் வாய பொளந்து கேட்டுகிட்டு இருப்போமே !!!)
.

Friday, October 8, 2010

சீனு டைம்ஸ்-2

போன வாரம் இங்க ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்.... நல்ல கூட்டம்.... வண்டி நிறுத்திட்டு உள்ள போகவே ஒரு கால் மணி நேரம் ஆகி விட்டது. நண்பனோட சும்மா துணைக்கு போனதால் நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு  அவர் கூட சுத்திகிட்டு இருந்தேன். பிங்க் நிற உடையில் ஒரு அழகான குழந்தை பார்த்தேன்...ஒரு இரண்டு வயசு இருக்கும். ரொம்ப அழகா சிரிச்சிகிட்டு இருந்துச்சி...சில வினாடிகள் அந்த குழந்தை கூட சிரிச்சி வேடிக்கை காட்டிவிட்டு தள்ளி போயிட்டேன். மறுபடியும் வாங்கிய  பொருள்களுக்கு விலை போடும் நேரத்தில் அதே பாப்பா சிரிச்சிகிட்டே தனியே வெளியே நடந்து போச்சு. அப்படியே அந்த மால் கார்ரிடர் தாண்டி வெளியே கார்கள் நிறுத்தம் வரை சென்று விட்டது. எல்லாரும் பார்த்துகிட்டே இருக்காங்க..ஒருத்தரும் குழந்தையை தூக்கவில்லை. அடுத்து பிரதான சாலையில் செல்ல அந்த பாப்பா எத்தனிக்கையில், இதுவரை அந்த குழந்தை பின்னாடியே சென்ற  நான் இதற்கு மேல் வேலைக்காகாது என நான் அந்த குழந்தையை தூக்கினேன். அம்சமா சிரிச்சிகிட்டே என்கிட்டே வந்துட்டாங்க. நேராக கஸ்டமர் கேரில் சென்று பதட்டத்தோட, "குழந்தை யாருடையது என்று தெரியவில்லை,  தனியாக சுத்திகிட்டு இருக்குனு, கொஞ்சம் மைக்ல அறவிப்பு கொடுங்கன்னு சொன்னேன்".  அங்க இருந்த பெண்மணி கொஞ்சம் கூட அச்சமோ/பதட்டமோ இல்லாம அந்த குழந்தைய கொஞ்ச ஆரம்பிசிட்டாங்க. அவங்க கூப்பிட்டும் என்னிடம் இருந்து போக மறுத்து விட்டது அந்த பாப்பா. ஒரு வழியா மைக்ல அறிவிப்பு செஞ்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து, ஒரு சலனமோ/பதட்டமோ இல்லாம ரொம்ப ஜில்லுனு(cool a) என்னை நோக்கி ஒருத்தர் வந்தார், குழந்தையை அழைப்பது போல் கைகளை நீட்டினார். "இது  உங்க குழந்தையா" என்ற எனது கேள்விக்கு, வாயை  திறந்து  ஆமாம்னு கூட சொல்லலை..., நான் கேட்ட கேள்விக்கு அமோதிப்பது போல தலையை மட்டும்  ஆட்டிட்டு குழந்தையை தூக்கிகிட்டு போய்கிட்டே  இருந்தார், அந்த கஸ்டமர் கேர் பெண்மணி அவங்க திரும்பி அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டாங்க....நான் மட்டும் "ங்கே"  னு முழிச்சபடி  பார்த்துகிட்டே  இருந்தேன். நான் ரொம்ப பெரிய  செண்டிமெண்ட் சீன் எதிர்பார்த்தா, இப்படி ஆயிடுச்சுன்னே  பார்கையில், அப்புறம் தான் விளங்கிச்சு....இந்த மாதிரி பெரிய மால்களில்  இதெல்லாம் தினசரிகள் போல என.....! ஆனா அந்த குழந்தையோட அப்பா ஒரு சின்ன நன்றி சொல்லி இருக்கலாமோ என என் சின்ன மனசு  நினைச்சிச்சு..... (ஏன்னா நானும் சராசரி மனிதன் தானே(வேணும்னா என் profile பார்த்துக்குங்க)..... என்ன உலகம்டா சாமி !!!)
****************************************************************************************************
சமீபத்தில் நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ. ஏற்கனவே ஒரு பிரபல பதிவர் இந்த வீடியோவை ரொம்ப நாள் முந்தி அவர் பதிவில் வெளியிட்டு  இருந்தாலும், என்னோட வட்ட்டதில் உள்ள நண்பர்களுக்காக ....இதோ அந்த காட்சி....        
கடைசியா, ரஜினி அவர்கள் பேசி முடிக்கும் போது, "Thank you very much Aishwaryaji" னு சொல்லும் போது...எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.... Simplicity, Thy name is Rajinikanth.
****************************************************************************************************
எங்க கம்பெனில, போன மாதம் ஒரு ISO Refresher கோர்ஸ் போயிருந்தேன். கோர்ஸ் எடுத்தவர் ரொம்ப அழகா, தெளிவா எல்லாரையும் ஈடுபடுத்தி நடத்தி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், தவறுகள் பத்தி பேசுகையில் என்னை பார்த்து கேட்டார், நீ எவ்வளவு சதவிகிதம் உன் வேலைல தப்பு செய்வே என்று கேட்டார்?. நான் கொஞ்சம் உணர்ச்சி பெருக்கில் ஒரு 2 சதவிகிதம்னு சொன்னேன். இது உங்க கம்பெனிக்கு அதிகம்னு சொன்னார். நான் 2 சதவிகிதம்தானே என்றேன். அவர் உடனே, உங்க கம்பெனில இருக்குற 2000 பேரும் 2 சதவிகிதம் தப்பு பண்ணா?? தப்பா என்றார். இவரு எப்படா அந்நியன் படம் பார்த்தார்னு நினைச்சேன். சொல்ல வரது என்னன்னா, அவர் இந்த மாதிரி கேட்ட உடனே வாத்தியார் சுஜாதா ஞாபகம் வந்துடுச்சி. அந்நியன் படத்தோட மொத்த கருத்துமே இந்த கீழ்கண்ட வரிகளில் அடங்கி விடுகின்றது. அதுதாங்க சுஜாதா.

அந்நியன் : "5 பைசா திருடினா தப்பா ?"

சொக்கன் : "தப்பா தெரியலை சார் !"

அந்நியன் : "5 கோடி பேர் 5 பைசா திருடினா தப்பா ??"

சொக்கன் : "தப்பு மாதிரி தெரியுது சார் !!"

அந்நியன் : "5 கோடி பேர் 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா ???"

சொக்கன் : "பெரிய தப்பு சார் !!!"

இப்ப சமீபத்தில் கூட ஒரே ஒரு துரோகம் என்ற வாத்தியார் எழுதுன புத்தகம் படித்தேன். கதை முழுக்க இருவரின் பார்வையில் மாறி மாறி அத்தியாயங்கள் எழுதப்பட்டு இருக்கும். (விருமாண்டி திரைக்கதை பாணி, இந்த கதை எப்பவோ எண்பதுகளில் எழுதப்பட்டது). காலத்தில் எவ்வளவு முந்தி இருந்தார் வாத்தியார் சுஜாதா?? ஆகையால் தான் இறப்பிலும் முந்தி விட்டார் போல!!! வாத்தியார் இன்னும் நம்மோட இருந்திருந்தால் எந்திரன் இரண்டாம்  பாகம் கண்டிப்பா இப்ப இருக்கறத விட நல்லாவே வந்து இருக்கும். கடவுள் யார் என்று எந்திரன் படத்தில் ரோபோவை பார்த்து கேட்கப்படும் கேள்விக்கு வரும் பதில் அட்டகாசம். எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்வேன், எல்லா பதிவிலும் எழுதுவேன்... "We Miss U வாத்தியாரே...!!!
****************************************************************************************************

Friday, October 1, 2010

எந்திரன் - ஒரு மைல்கல்

எந்திரன் - துவக்க காட்சியில் தாடியுடன் ஒரு விஞ்ஞானி ரோபோவை உருவாக்கி கொண்டு இருப்பார்...கிட்ட பார்த்தால்..அட ரஜினிகாந்த். இதுதாங்க படத்தில் ரஜினி அவர்களின் அறிமுகம். இங்க இருந்து முழுக்க முழுக்க ஷங்கரோட ராஜ்ஜியம் தான். சமீப காலங்களில் ரஜினி அவர்களின் சிறந்த உழைப்பை வெளி கொணர்ந்தவர் ஷங்கர் மட்டுமே...எந்திரன் ரஜினி அவர்களின் உழைப்பின் உச்சம். திரை அரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டமும் உச்சமே.

விஞ்ஞானி ரஜினி (வசீகரன்) அவர் 10 வருடம் உழைத்து உருவாக்கும் ரோபோ (இதுவும் ரஜினி தான்), கண்டுபிடிப்புகளின் உச்சம். சிட்டி என்று பெயரிடப்படும் இந்த ரோபோ மனிதனை போல் கோபம்,காதல், துக்கம் இன்ன பிற உணர்சிகள் இல்லாது சொல்கின்ற எல்லா வேலையும் செய்யும்...அதுவும் மின்னல் வேகத்தில். ஐஸ்வர்யா ராய்(சனா), வசீகரனின் காதலி, மருத்துவ கல்லூரி மாணவி. சந்தானம் மற்றும் கருணாஸ் வசீகரனின் ஆராய்ச்சி கூடத்தில் வேலை செய்பவர்கள்.
சிட்டி ரோபோவை ராணுவத்தில் பணிக்கு அமர்த்தி ஆயிரம் வீரர்கள் செய்கின்ற வேலையை ஒரு ரோபோவின் மூலம் செய்ய வைப்பதே வசீகரனின் இலட்சியம். இதற்காக நடக்கும் பரிசோதனையில், சில மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் சிட்டியை அனைவரும் ஒப்புகொள்ள, ஒரு விஞ்ஞானி போரா(டேனி-வில்லன்) மட்டும் அதை சில பரிசோதனைகள் செய்து, சிட்டியை குழப்பமான கட்டளைகள் கொடுத்து தவறான செயல் செய்ய தூண்டி நிராகரித்து விடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், சிட்டி யார் எது சொன்னாலும் சொன்னதை, நல்லது  கெட்டது பாராமல், மனித உணர்சிகளை உணராது வேலை செய்யும் ஒரு இயந்திரம்...அவ்வளவே. இதனால் கோபம் அடையும் வசீகரன் மறுபடியும் உழைத்து, தாடி வளர்த்து ....சிட்டிக்குள் அனைத்து மனித உணர்ச்சியும் வரும்படி செய்கிறார். இதை, ஒரு கடினமான பிரசவத்தை, மிக லாவகமாக செய்வதின் மூலம் சிட்டி உலகக்கு தன்னை நிரூபிக்கிறது. சந்தோஷத்தில் சனா சிட்டியை முத்தமிட போக, சிட்டிக்கு  சனா மீது காதல் பிறக்கிறது. இதனால் வசீகரனுக்கும் சிட்டிக்கும் வாக்குவாதம் வர, சனா தான் வசீகரனைதான் காதலிப்பதாகவும்,இயந்திரத்தோடு வாழ்வது சாத்தியம் இல்லை என தன்  நிலைபாட்டை தெளிவாக சொல்லி விட சிட்டி வருத்தம் கொள்கிறது. இதனால், அடுத்து ராணுவ உயர் அதிகாரிகள் முன் நடக்கும் பரிசோதனையில் சிட்டி வேண்டும் என்றே காதல் வசனம் பேசி சொதப்பி விடுகிறது. இதனால் அவமானம் அடையும் வசீகரன் கோபத்தில் சிட்டியை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசி விடுகிறார். குப்பையில் இருந்து சிட்டியை மீட்க்கும் போரா, அதற்கு உயிர் கொடுத்து அதற்குள் தீய சக்திக்கான சிப்பை சொருகி, சிட்டியை அசூர ரோபாவாக மாற்றி விடுகிறார். கொடுறுமான  வேகத்துடன் கிளம்பும் ரோபோ சனாவை கடத்திவிடுகிறது, போரவையும் கொன்று விடுகிறது. பலரை  கொன்று தீய, நாச வேலைகளில் ஈடுபடும் ரோபோவை, எப்படி வசீகரன் அடக்கி சனாவை மீட்கிறார் என்பதே இறுதிகட்டம்.


படம் முழுக்க ரஜினி..ரஜினி...ரஜினி தான்....இந்த வயதில் அவரின் உழைப்பு அதிசயக்க வைக்கிறது. அதுவும் இரண்டாம் பாகத்தில் கெட்ட ரோபோவாய் மாறிய பிறகு....அசத்தல் ரஜினி...அதே மூன்று முகம் அலெக்ஸ் நடை...அந்த அசத்தலான சிரிப்பும்...யார் அந்த கருப்பு ஆடு என்று சொல்லி ஆடு மாதிரி கத்தும் இடத்தில... சூப்பர் ஸ்டார் ஜொலிக்கிறார். காதல் அணுக்கள் பாட்டில் மிக மிக அழகாய் இருக்கிறார் ரஜினி. இதற்காகவே ஷங்கருக்கு ஸ்பெஷல் சல்யூட். மத்த இயக்குனர்கள் சமீபத்தில் ரஜினியை இந்த அளவுக்கு அழகாய் கட்டியதே இல்லை..முக்கியமாக வாசு. ஐஸ்வர்யா ராய் சில close-up காட்சிகள் தவிர படம் முழுக்க அழகாய் பவனி வருகிறார். இரும்பிலே ஒரு இருதயம் பாட்டில் செம ஆட்டம் ஆடி இருக்காங்க. சந்தானம், கருணாஸ் சிரிக்க வைக்க முயற்சி செய்றாங்க...சில one-liners தவிர சிரிப்புதான் நமக்கு வரவே மாட்டேங்குது. வில்லன் டேனி திடீர்னு பரிதபாமா செத்து போறார். கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கி இருப்பாங்க.

இந்திய சினிமா வரலாற்றில், தொழில்நுட்பத்தின் உச்சம் எந்திரன் தான். முதலில் ஷங்கருடைய உழைப்புக்கும், திட்டமிடுதலுக்கும் ஒரு பெரிய சபாஷ். இந்தியாவில், இந்த அளவிற்கு தொழில்நுட்பத்தை யாரும் பயன்படுத்த வாய்ப்பு மிக குறைவு. சுஜாதா அவர்களின் வசனங்கள் அருமை. நிறைய இடங்களில் வரும் one-liners superb. என்ன நக்கலா என்று காவல் அதிகாரி சிட்டியை கேட்க, இல்ல நிக்கல் என்று சொல்லும் வசனம் அற்புதம்...முதல் பாதி முழுக்க இந்த மாதிரி நிறைய வசனங்கள். படத்தில் முக்கியமாக சனாவுடன் சிட்டி செல்லும் அந்த இரண்டு நாட்கள்..அதகளம். முக்கியமாய் அந்த குப்பத்து காட்சி...படத்தின் அற்புதமான இடம் திரை அரங்கே அதிருகிறது.... . ராணுவ அதிகாரிகள் முன்பு சிட்டி சொல்லும் கவிதை அழகு...' கணிபொறியும் காதலிக்க வைக்கும் கன்னிபொறி' என்று ஆரம்பித்து அசத்தி இருக்கார் நா.முத்துக்குமார். நான் படம் பார்த்த திரை அரங்கு மிக கேவலமாக இருந்ததால் ரஹ்மானின் பின்னணி இசை பத்தி பெரிதாக கேட்க முடிய வில்லை. நம்ம ஊர்ல நல்ல திரை அரங்கில் பார்த்துட்டு சொல்றேன். ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் மிக பெரிய பலம். கிளிமஞ்சாரோ பாடலில் வரும் பின்னணி காட்சிகள் அற்புதம்.சாபு சிறிலின் பங்களிப்பு நிறைய....சில காட்சிகள் நடிக்கவும் செய்து இருக்கார்.

நிறைய இடத்தில ஷங்கரின் புத்திசாலித்தனம் ஒளிர் விடுகிறது....சின்ன சின்ன காட்சிகளுக்கும் அபாரமாக உழைத்து இருக்கிறார். படத்தில் மைனசே இல்லையே என்றால்..கண்டிப்பாக இருக்கிறது....எப்பவும் போல ஷங்கரின் படங்களில் மீறப்படும் லாஜிக் அபத்தங்கள் இதிலும் உண்டு....ஜென்டில்மேன், பாய்ஸ், அந்நியன் போல இந்த படத்திலும் இறுதி காட்சியில் நீதிமன்றம் வந்து விடுகிறது...இரண்டாம் பகுதியில் நிறைய இடங்களில் தொய்வு தெரிகின்றது..அதுவும் காவலர்கள் துரத்தும் அந்த காட்சியும், இறுதியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் ரொம்ப நீளம்...அஆவ் .. இறுதிக்காட்சிகளில் வரும் கிராபிக்ஸ் பார்க்கும் பொது ஜெடிக்ஸ் பாக்கிற மாதிரியே இருக்கு....இராம நாராயணன் படங்களில் வரும் கிராபிக்ஸ் குறைந்த தரம் ..அவ்வளவே....வித்தியாசம்... அந்த காட்சிகள் அவ்வளவு நீளம் தேவை இல்லை என்பதே எனது எண்ணம்....

மத்தபடி...கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான் 'எந்திரன்....'
.

Monday, September 20, 2010

கோபுர தரிசனம் !!! கோடி நன்மை தரும் !!! - 2

நான் "கிளிக்"கியவை

ஸ்ரீபெரும்புதூர்


ஸ்ரீபெரும்புதூர்

பாபநாசம்

குற்றாலம்

தென்காசி 

திருச்செந்தூர்

வேலூர்

காளஹஸ்தி  

Friday, August 13, 2010

சீனு டைம்ஸ்-1

GROWN UPS(இங்கிலீஷ்) & DARLING (தெலுங்கு)

மேல சொன்ன ரெண்டு படமும் சமீபத்தில் பார்த்தேன். ரெண்டு படமும் பிடிச்சு இருந்தது. ரெண்டு படங்களிலும் ஒரு லைட் ஒற்றுமை இருக்கு. ஐந்து நண்பர்கள் படிக்கும் போது ஒன்னா இருந்து, கொஞ்ச நாள் கழிச்சு வளர்ந்து மறுபடியும் சந்திக்கும் போது நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.

GROWN UPS நல்லா சிரிச்சு மகிழ்ந்து பார்த்தேன். Adam Sandler, Salma Hayek, Chris Rock, David Spade முதலிய நடிகர்கள் நடித்த ஜாலி காமெடி படம். American pie, Hang over போன்ற படங்கள் மாதிரி நல்லா ஒரு டைம்-பாஸ் படம். ஒண்ணரை மணி நேரம் போவதே தெரியல.

டார்லிங் தெலுங்கு படமும் மேற்சொன்ன storyline தான். கொஞ்சம் பாட்டு, சண்டை காட்சிகள்,
சென்டிமென்ட், க்யூட் காஜல் சேர்த்து ஒரு இரண்டரை மணி நேரம் படம் பார்க்க முடியுது. இப்ப வர தெலுங்கு படங்கள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஒளிப்பதிவு. நல்லா brigh lightingல அழகா எடுக்கறாங்க. இசை GV பிரகாஷ். ஒரு பாட்டு கலக்கலா இருக்கு, "நீவே நீவே" என்று தொடங்கும், அவரே பாடி இருக்கார். அழகா எடுத்து இருப்பாங்க. படம் தெலுங்குல செம ஹிட்டு...பரவா இல்லை, கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். பட இயக்குனர் நம்ம ஊர் கருணாகரன். நல்லா பண்ணி இருக்கார். இவர் படங்கள்ல கதை, திரைக்கதை நல்லா இருக்கும், அப்புறம் நாயகிக்கும் கதைல சமத்துவம் கொடுத்து இருப்பார். தொலி பிரேமா, ஹாப்பி, உல்லாசங்க உத்சாகங்கா போன்ற ஹிட் படங்கள் கொடுத்தவர். கடைசியாக அந்த வரிசையில் டார்லிங்கும்.
*****************************************************************************************************************************
 ரவி தேஜா Vs ஜெயம் ரவி

தில்லாலங்கடி படம் பார்த்தேன்...ஏதோ சன் பிக்சர்ஸ் புண்ணியத்தில படம் தமிழ்நாட்ல ஓடரத கேள்விபட்டேன். ஜெயம் ரவி சொதப்பி இருப்பார். யாராவது சொல்லுங்களேன் ரவிக்கு...தயவு செய்து எதாவது வாய்ஸ் therapy போக சொல்லுங்க....முடியலை. ரவி தேஜா இந்த ரோலை தெலுங்கில் கலக்கி இருப்பார், போட்டு தாக்கி இருப்பார். அனாயசமா நடிச்சி இருப்பார். தம்பி ஜெயம் ரவிய காண சகிக்கவில்லை. அதுவும் KICK படத்தில் ஒரு காட்சியில ரவி தேஜா தமிழ்ல ஒரு ரெண்டு வரி பேசி இருப்பார். அந்த காட்சி ரொம்ப அழகா வந்து இருக்கும். அதே காட்சி தில்லாலங்கடி படத்தில் ஜெயம் ரவி மலையாளத்தில் பேச கேக்கும் போது ரொம்ப நாராசமா இருந்துச்சி........

ஒருவேளை நம்ம எதாவது தப்பா சொல்லிட போறம்னு தில்லாலங்கடி படம் பார்த்ததுக்கு அப்புறம் தெலுங்கு பதிப்பான KICK படத்தை மறுபடியும் பார்த்தேன். ரவி தேஜா & இலியானா கிட்ட கூட ஜெயம் ரவி & தமன்னா வரலை. இந்த படத்தை இளைய தளபதி டாக்டர் விஜய் பண்ணி இருந்தால் நல்லா இருந்து இருக்கும். ஜெயம் ராஜா இந்த படத்த விட்டுட்டு ஏதோ பழைய நாகர்ஜுனா படத்தை வேலாயுதம் என்ற பெயரில் இளைய தளபதி டாக்டர் விஜயை வைத்து எடுக்கறத கேள்வி பட்டேன். So Sad. என்னை பொறுத்த வரையில் இளைய தளபதி டாக்டர் விஜய் நல்ல scope உள்ள ரீமேக்கை கோட்டை விட்டுட்டார்
*****************************************************************************************************************************
சமீபத்திய சந்தோஷம்
அம்மணி சோனம்கபூர்தான் "MAXIM INDIA" பத்திரிக்கையின் படி இந்த வருஷத்தின் ரொம்ப சூடான பிகர். அதாங்க "Hottest girl". பொண்ணு பொழைக்க தெரிஞ்ச பொண்ணு. தொடர்ந்து ரெண்டு படமும் சுமாரான ஹிட் மற்றும் சோனம்க்கு ரொம்ப நல்ல பேர் வேற. இங்க இருக்கவங்களுக்கு என்ன கோபம்னு தெரியல, கத்தார்ல மட்டும் சோனம் நடித்த சமீபத்திய படமான ஆயிஷா ரிலீஸ் இது வரை பண்ணவே இல்லை. அடுத்து சோனம் அக்க்ஷய் குமார் மற்றும் சாஹித் கபூர் கூட ரெண்டு படம் நடிக்கறாங்க. Let us see how she fares in future !!!
*****************************************************************************************************************************

Wednesday, August 4, 2010

எந்திரன் !!!

எந்திரன் - இசை

அந்தா..இந்தா.. என்று ஒரு வழியாக எந்திரனின் பாடல்கள் வெளி வந்துவிட்டது. மலேசியா போய் கோலாகாலமா பாடல் வெளியீட்டு விழா நடத்திட்டாங்க சன் பிக்சர்ஸ். இந்த மாதிரி ஒரு பாடல் தொகுப்பிற்கு கண்டிப்பாக இவ்வளவு செலவு செய்வதில் எந்த தப்பும் இல்லை. பின்னி பெடல் எடுத்து இருக்கார் AR. எப்பவும் போல தீவிர ரஜினி ரசிகர்கள்.."ஒன்னும் பாட்டு சரி இல்லையே" என்று மண்டையை தடவுவது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஒரு பத்து நாள் கழிச்சு "பாட்டு எல்லாம் கலக்கல்னு" அவங்களே சொல்லுவாங்க! AR இசையில் இது மாதிரி நடப்பது ஒன்றும் புதிது அல்ல.

"என்ன மாதிரி பசங்க எல்லாம் பாக்க பாக்கத்தான் பிடிக்கும்னு" தனுஷ் சொல்றா மாதிரி, AR இசையில் "பாடல்கள் எல்லாம் கேக்க கேக்கத்தான் பிடிக்கும்". ரெண்டு நாளா எந்திரன் பாட்டு கேட்டு ரசித்த பிறகுதான் இந்த பதிவை எழுதறேன். சமீப காலங்களில் AR இசையில் வரும் பாடல்கள் எல்லாம் அந்த அந்த படத்தின் கருவை ஒத்தே அமைக்கபடுகின்றது.(உதாரணம் - இராவணன், வி.தா.வ). எந்திரன் இசை முழுவதும் ரோபோஸ், கம்ப்யூட்டர், டெக்னோ இதுதான் முக்கிய பின்னணி. கேட்ட உடனே மூன்று பாடல்கள் பிடித்து விட்டது, ஒரு ஐந்து தடவை நல்ல சவுண்ட் சிஸ்டம்ல( என்னோடு கார் செட்....ரொம்ப அருமையான செட் ஆக்கும்) கேட்டதும் எல்லா பாட்டுமே பிடித்து விட்டது.

எனக்கு பிடித்த வரிசையில் பாடல்கள்

1. இரும்பிலே ஒரு இருதயம் - AR கலக்கலா பாடி இருக்கார்

2. காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ் & ஸ்ரேயா கோசல் ரெண்டு பேருமே superb....

3. கிளிமஞ்சாரோ - பெரிய ஹிட் ஆகும் இந்த பாட்டு ......"ஒரு தெய்வம் தந்த பூவே" பாடுன சின்மயியா இது?? Unbeleivable variety.

4. புதிய மனிதா - SPB பாட, கேக்கும் போது எல்லா மயிர்க்கால்கள் அப்படியே நட்டுகுது..... AR பொண்ணு கதிஜாவிற்கு நல்ல துவக்கம்.

5. அரிமா அரிமா - இது மாதிரி ஒரு துவக்க இசை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு....ஹரிஹரன் பத்தி சொல்லவே தேவை இல்லை hi pitchல பின்னி இருக்கார்.

6. பூம் பூம் ரோபோடா - கொஞ்சம் கேட்ட பாடல் மாதிரி இருந்தாலும் நல்லா தான் இருக்கு.

7. சிட்டி டான்ஸ் - நல்ல இசை MIX

எந்திரன் - பாட்டு வரிகள்
வைரமுத்து - வைரம் வைரம் தான்.....ரொம்ப மெனக்கெட்டு நிறைய technical விஷயங்கள் எல்லாம் சேர்த்து கலக்கலா எழுதி இருக்கார். வைரமுத்து மகன் கார்க்கி ரொம்ப நல்ல எழுதி இருக்கார். படத்துக்கு என்ன தேவையோ அதை ரொம்ப அழகா கொடுத்து இருக்கார், maybe ஷங்கர் வாங்கி இருக்கார். வாலி வைரமுத்து சேர்த்து எழுதினால் எப்படி இருக்குமோ அந்த பாணியில் தான் கார்க்கி எழுதி இருக்கார்...பார்ப்போம் ...Miles to go.

எனக்கு பிடித்த வரிகள்

"கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு"

"காதல்காரி, உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரம் கூட இளைத்து விட்டதே"

"வயரூட்டி, உயிரூட்டி"

" கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை"

எந்திரன் - பின்னனி இசை
இராவணன் படத்தின் பின்னணி இசை கேட்டு நான் மிரண்டே விட்டேன், மெய் சிலிர்த்து விட்டேன். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் ARன் அசத்தலான உழைப்பு தெரியும். ஒரு சில இடங்களை தவிர்த்து விண்ணை தாண்டி வருவாயா பின்னணி இசையும் அற்புதம். என்னை பொறுத்த வரையில் பின்னணி இசையில் AR இப்பலாம் ரொம்பவே உழைக்கிறார். எந்திரன் பின்னணி இசையை ரொம்பவே எதிர் பார்க்கிறேன்.

எந்திரன் - படம்
தசாவதாரம், சிவாஜி படங்கள் எல்லாம் நம்ம ஊர்ல ரிலீஸ் ஆகறதுக்கு ஒரு நாள் முன்னாடி, இங்க கத்தார்ல FDFS பார்த்தாச்சு. இந்த தடவை ஊரில் விடுமுறையில் இருப்பேன் என்பதால், FDFS எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரிய வில்லை. வாத்தியார் சுஜாதாவின் பங்களிப்பு வேறு இந்த படத்திற்கு இருப்பதால் ரொம்ப ரொம்ப எதிர் பார்க்கிறேன்.

Let us wait and Watch !!!

Thursday, July 22, 2010

சீனு டைம்ஸ்....

நேத்து, எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை எல்லாருக்கும் அனுப்பி வச்சேன். அதோடு தலைப்பு, "வாழுகிறேன் கணிப்பொறியோடு". கொஞ்ச நேரத்தில ரெண்டு நண்பர்கள்ட்ட இருந்து தொலைபேசி அழைப்பு.... இருவரும் கேட்ட கேள்வி ஒன்னுதான். "யாருடா அது கனிமொழி", அவ கூட எப்பத்திலிருந்து வாழுற??. ங்கொய்யால, ஒழுங்கா படிங்கடா, அது கணிப்பொறி. என்ன பார்த்தா மட்டும் தான் இப்படியா, இல்ல..., என்ன கொடுமை சீனு இது???

*****************************************************************************************

Knight and Day படம் ஒரு மூணு வாரம் முன்னாடி, இங்க ரிலீஸ் ஆனப்ப போய்ப்பார்த்தேன். JAMES BOND படங்களின் சாயல் இருந்தது....Tom Cruise பறந்துகிட்டே இருக்கார்.....எல்லாரயும் பொளந்துகிட்டே இருக்கார் படம் முழுக்க...இந்த மாதிரி ஹாலிவுட் ஆக்க்ஷன் படங்கள்லாம் (Transporter, Terminator, MI Series..etc) நம்ம கைதட்டி பாக்கிறோம்...ஆஹா..ஓஹோனு பாராட்டி தள்ளுவோம், லாஜிக்லாம் பார்க்கவே மாட்டோம். ஆனா இதையே, இளையதளபதி டாக்டர் விஜய்யோ, தல அஜித்தோ பண்ணும் போது மட்டும், உலக கேள்விகள் கேப்போம், பதிவெழுதி கிழி கிழின்னு கிழிப்போம். என்னங்க நியாயம் இது??? TOM CRUISE கார்ல பறந்து பறந்து ஓட்டினா OK, ஆனா இளையதளபதி டாக்டர் விஜய் மட்டும் accelerator வயர வாய்லயே இழுத்துகிட்டு கார் ஓட்டினா, நம்ம எல்லாம் சேர்ந்து அவர ஓட்றது... என்னங்க நியாயம் இது??? எல்லாரயும் சமமா பாருங்க.....(இது சத்தியமா பகடி இல்ல, உயர்வு நவிற்சி இல்ல, வஞ்ச புகழ்ச்சியும் இல்லீங்கோ...)
*****************************************************************************************
சில படங்கள் பார்ர்கும்போது, ஒரு சிலர் கேக்கிற கேள்விக்கு விடைகளே தெரிவதில்லை.... நீங்களாவது முயற்சி பண்ணுங்களேன்.

1. உன்னை போல் ஒருவன் - ராணிபேட்டை ராஜேஸ்வரி தியேட்டர்ல, படம் இடைவேளைல ஒருத்தர் என் பின்னாடி இருந்து இப்படி வருத்தப்பட்டார், "அதுக்குள்ள இடைவேளையா, என்னாங்கடா, ஒரு டூயட் கூட போடல??" (மோகன்லால் - லக்ஷ்மி, கமல்-அனுஜா, பரத் ரெட்டி- பூனம்...யாருக்குடா இந்த கதையில டூயட் வைக்கறது... ...முடியல..)

2. Delhi-6 -"கடைசி வரைக்கும், அந்த குரங்கை காட்டவே இல்லையேப்பா"?

3. ஹேராம் படம் முடிச்சிட்டு வெளில வரும்போது, ஆற்காடு ஜோதி தியேட்டர் வாசல்ல ஒருத்தன் கேட்டான், "ஏன் படத்துல, காந்தி ரெண்டு முறை செத்து போறாரு ??"
*****************************************************************************************

என் கிளைகளை
நறுக்கும் தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில் நழுவும் என்
வேர்களை என்ன செய்வாய்?”

இதை யார் எழுதியது என்று தெரியவில்லை....
எனக்கு படிச்சவுடனே பிடிச்சது !!....
***************************************************************************************** நேத்து, எனக்கு பிடிச்ச ரெண்டு ஹிந்தி படம் UTV சேனல்ல தொடர்ந்து போட்டாங்க. Delhi-6 & Dil Chahtha Hai. Delhi-6 படத்தில, "தில் மேரா" னு ஒரு பாட்டு ரொம்ப அழகா எடுத்திருப்பாங்க. அந்த பாட்டு எடுத்த விதம், வாத்தியார் சுஜாதா கதை எழுதும் நடை மாதிரியே இருந்தது. Nostalgic Memories of the great Sujatha...சுஜாதா இன்னும் கொஞ்ச நாள் (atleast ஒரு இருபது வருஷம்) இருந்து இருக்கலாம். We miss you, வாத்தியாரே.
*****************************************************************************************

Thursday, July 15, 2010

நகைச்சுவை !!!