Monday, August 19, 2013

தலைவா !!!

தலைவா படத்தின் தொடக்கத்தில், இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி என்று பெயர் போடும்போது சொல்கின்றனர். எதுக்கு மணிரத்தினத்திற்கு நன்றி சொல்றாங்கன்னு தொடக்கத்தில் புரியல. படம் முழுக்க பார்த்து பிறகுதான் ஏன் என்று தெரியுது. மணி அவர்கள்  'THE GODFATHER' பார்த்து ஈர்க்கப்பட்டு 'நாயகன்' எடுத்ததை போல, இயக்குனர் விஜய் அவர்கள் 'நாயகன்' மற்றும் இன்னும் சொச்ச தமிழ் படங்கள் பார்த்து ஈர்க்கப்பட்டு 'தலைவா' எடுத்திருப்பார் போல. இதுல பெருசா ஒன்னும் குறை சொல்ல ஏதும் இல்லை, ஏற்கனவே விஜய் அவர்கள் இதுவரை எடுத்த எல்லா படங்களுமே ரீமேக் அல்லது பிற மொழி திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு எடுத்தவை தான், தாண்டவம் தவிர. இதனால படம் பார்க்க போகும்முன் எனக்கு பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் பார்த்தேன். 
 படம் நல்லாத்தான் இருக்கு, என்ன கொஞ்சம் படத்தின் நீநீநீநீளத்தை குறைத்து crispஅ எடுத்திருந்த பெரும் வெற்றி பெற்றிருக்கும். தளபதி விஜய் அவர்கள், எப்பவும் போல அளந்து தொழில பார்த்திருக்கார். அமலா பால்லாம் காவல்துறை கெட்டப்பில் பாக்கறது செம காமடி. நகைச்சுவைக்கு சந்தானம் அங்கங்கே வந்து கிச்சுகிச்சு செய்கிறார். சத்யராஜ் விஜயின் அப்பாவாக நிறைவாகவே நடித்திருக்கார். அந்த வடநாட்டு பொண்ணு விஜயை லவ்வறது எல்லாம் படத்திற்கு தேவையே இல்லை. நடிப்பு & நடன புயல் சாம் அன்டர்சன் வேற வந்து நகைச்சுவை செய்றார். 

 நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு செமையா இருக்கு. GV பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்களைத்தவிர மத்தது எல்லாம் பெரிய சொதப்பல், பின்னணி இசை பரவாயில்லை, ஒரு சில இடங்களில் ரொம்ப நல்லாவே இருக்கு. ஒரு பாட்டுல விஜய் கூட ஆடவும் செய்றார் புதுமாப்பிள்ளை GV பிரகாஷ். இயக்குனர் விஜய் கொஞ்சம் இரண்டாம் பாதி திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படத்தின் கூட்டல் : விஜய், சந்தானம், சத்யராஜ், ஒளிப்பதிவு 
படத்தின் கழித்தல் : படத்தின் நீளம், திரைக்கதை, தேவையில்லாத நிறைய கதாபாத்திரங்கள், சில பாடல்கள். 

 மக்கள் எல்லாம் பரவலா பேசிகிட்ட அளவுக்கு படம் ஒன்னும் மொக்கை இல்லை. சுறா, குருவி, ஆதி, வில்லுகளுக்கு இந்தப்படம் எவ்வளவோ தேவலை, ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.
.