Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - அன்பின் எய் மாற்றம் !!!

தலைவர் படம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதே தனி கிக் தான். என்ன கொஞ்சம் நல்ல திரை அரங்காக இருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோசபட்டிருப்பேன்.

மன்-மதன்-அம்பு = மேஜர் ராஜ் மன்னர்(கமல்ஹாசர்), மதன கோபால்(மாதவன்), அம்புஜாக்ஷி(த்ரிஷா), தீபா(சங்கீதா) ஆகிய நால்வர்தான்  பிரதான பாத்திரங்கள், இவர்களை வைத்துதான் கதை. நடிகை நிஷா என்கிற அம்புவிற்கும்  மதனுக்கும்  இடையே உள்ள  காதல், கல்யாணத்திற்கு முன்பு மதனின் சந்தேக புத்தியால் தற்காலிகமாக பிரிகிறது. இதனால் பாரிசில் விடுமுறைக்கு தோழி தீபாவுடன் செல்கிறார் அம்பு. மதனோ, அம்புவை சந்தேகித்து மேஜரை வேவு பார்க்கும் அதிகாரியாக அனுப்புகிறார். மேஜர் சில நாள் அம்புவை கண்காணித்த பிறகு அவள் நல்லவள் என சான்றிதழ் கொடுக்கிறார். எதுவும் கெட்டது அம்புவிடம் இல்லை என்று  சொல்வதற்கு நான் எதற்கு உனக்கு காசு கொடுக்க வேண்டும் என மதன் மேஜரிடம் சொல்ல, காசுக்காக(மேஜரின் நண்பன் கேன்சர் நோயாளியின்  வைதியச்செல்வுகாக) மேஜர் மதனிடம் தகிடு தத்தோம் செய்ய ஆரம்பிக்கிறார். அதாவது அம்புவிற்க்கும் இன்னொரு ஆளுக்கும் தொடர்பு இருப்பதாக பொய் சொல்ல ஆரம்பிக்கிறார். தொடர்ந்து பொய் மேல் பொய், அம்பு மற்றும் தீபாவுடன் நெருங்கி பழகுதல் என படம் செல்ல, இறுதியில் மதன் அம்புவை அடைந்தாரா, மேஜர் அம்புவை அடைந்தாரா என்பதை இரண்டாம் பாதியில் நகைச்சுவையோடு சொல்லி முடித்து இருக்கின்றனர்.

மேஜராக கமல் அந்த பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவோடு செய்து இருக்கிறார்.அம்புவாக த்ரிஷா எப்பொழுதும் நடிகைகளுக்கே உள்ள மென்சோகத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். மதனாக மாதவன் பின்னி இருக்கிறார், அதுவும் குடித்து விட்டு பேசும் இடங்களில் அருமையாக நடித்து இருக்கிறார்.(ஆனாலும் கொஞ்சம் படம் முழுக்க ஓவராக குடிச்சிகிட்டே இருக்கார்). தீபாவாக சங்கீதா கலக்கி இருக்காங்கா....நிறைய இடங்களில் எல்லாரயும் ஓரங்கட்டி அசத்தி இருக்காங்கா. எல்லாரும் சொந்த  குரலில்  பேசியது  அருமை.  படத்தில் கமலின் நண்பனாக ரமேஷ் அரவிந்த் மற்றும் நண்பரின் மனைவியாக ஊர்வசி நடித்து இருக்கின்றனர். கேன்சர் நோயாளியாக ரமேஷ் அரவிந்த் ரொம்ப நல்லா நடித்து இருக்கின்றார். ரமேஷ் அரவிந்தின் கதாப்பாத்திரப்பெயர் ராஜன். (அபூர்வ ராகங்கள்  காலங்களில் கமலுக்கு உண்மையிலயே  ராஜன் என்ற கேன்சரால்  பாதிக்கப்பட்ட நண்பர் இருந்தார் என்பது வரலாறு). தீபாவின் பிள்ளைகளாக  நடித்த குட்டி பையனும் பொண்ணும் செம க்யூட். மற்றபடி சூர்யா ஒரு பாட்டுக்கு வர்றார், ஓவியா, உஷா உதூப், மலையாள தம்பதிகள் குஞ்சன் மற்றும் மஞ்சு, ஸ்ரீமன், ஆகாஷ்(அதாங்க வனிதா விஜயகுமரோட முதல் புருஷன்) என நிறைய பேர் இருகின்றனர்.

படத்தின் பெரிய விளக்குகள் (அதாங்க Highlights)
  • வசனங்கள் எல்லாம் செம கூர்மை...நிறைய  ஒன் லைனர்ஸ் அருமை. சின்ன சின்னதாக அருமையா படம் முழுக்க வசனங்கள் வந்துகிட்டே இருக்கு.
  • ஒட்டுமொத்தமாக படத்தின் மேகிங் ரொம்ப ரிச்சாக அழகாக உள்ளது.
  • கதாபாத்திரங்கள் தேர்வு.(குறிப்பா சங்கீதா, உஷா உதூப், மாதவன், குட்டி பசங்க)
  • நீல வானம் பாடல் மூலம் சொல்லப்படும் திருப்பு காட்சிகள் (உண்மையிலயே திருப்பு காட்சிகள் தான்...படத்தில் பாருங்க..புரியும்) மிக மிக அழகு. தமிழ் சினிமாவில் அல்லது இந்திய சினிமாவில் நான் பார்த்தது இது தான் முதல் முறை.
  • பாடல்கள் எல்லாம் அருமை(பாடல்கள் வரும் இடம் எல்லாம் அழகு), இன்னும் பின்னணி இசை கொஞ்சம் நல்லா இருந்து இருக்கலாம்.
  • மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு ரொம்ப நல்லா செஞ்சி இருக்கார். அந்த கப்பலை எடுத்த டாப் அங்கிள் சாட்ஸ், வெளிநாட்டு காட்சிகள், நீல வானம் பாடல் என படம் முழுக்க மிக நேர்த்தியாக செய்து இருக்கார்.
  • உடைகள் ரொம்ப அழகாக இருக்கு படம் முழுக்க..உபயம்-கௌதமி.
  • வசனத்திற்கு ஏற்ப வரும் குறிப்பு காட்சிகள் செம கிளாஸ்.
  • தகிடு ததோம் பாடல் ஆரம்பிக்கும் இடம், ஒரு சின்ன சண்டை காட்சி.
ஒரு நடிகையை எப்படியெல்லாம் சந்தேகப்பட முடியும் என போகிற போக்கில் அழகாக காட்டி இருக்காங்க. கமல் அவர்களை கேன்சர் நோய் எந்தளவிற்கு பாதித்து உள்ளது(ராஜன், கௌதமி, ஸ்ரீவித்யா, மகேஷ் என கமலின் வட்டார நண்பர்களில் பாதிப்பாக கூட இருக்கலாம்) அவரின்  கதை வசனங்களில் தெளிவாக தெரிகிறது. திரைக்கதையை எப்பொழுதும் விட்டு கொடுக்காத கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம்  மற்றும் இந்த படத்தில் கமலிடமே விட்டு விட்டார். சர்ச்சைக்குரிய கவிதை இங்கு கத்தாரில் முழுவதுமாக வருகிறது...நம்ம ஊரில் எப்படி என தெரிய வில்லை, இந்த கவிதைக்கு எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்  என எனக்கு சத்தியமாக புரியவில்லை.

படத்தில் இத்தனை இருந்தும் அங்காங்கே தொய்வு விழுந்து கொண்டேதான் இருக்கிறது. இது எடிட்டிங்கில் உள்ள பிரச்சினையா அல்லது திரைக்கதையா  என சொல்ல  தெரிய வில்லை. படத்தின் ஒரே மற்றும் பெரிய மைனசாக எனக்கு தெரிவது இது மட்டுமே. கமல் மற்றும் த்ரிஷாவிற்கு வரும் காதல் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் (முத்தம் இல்லைங்க.... காட்சிகள்) கொடுத்து இருக்கலாம்.மற்றபடி படம்  எனக்கு   மிகவும் பிடித்து இருந்தது...ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.
.

6 comments:

shortfilmindia.com said...

nalla vimarsanam
cablesankar

கானகம் said...

//ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.//

கமல் ரசிகராய் இருந்தும் உண்மையைச் சொல்லும் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. நானும் நேஎற்றுதான் பார்த்தேன். நிறைய இடத்தில் காட்சிகள் தொய்கிறது. குறிப்பாய் முதல் பாகத்தின் பெரும்பான்மையான இடங்கள்.

கத்தார் சீனு said...

நன்றி கேபிள்ஜி......
U Made my day !!!

கத்தார் சீனு said...

நன்றி ஜெயக்குமார் ......
இந்த தோஹா சினிமாக்கு விமோசனமே கிடைக்காதா???

vicki said...

good review...honest one

கத்தார் சீனு said...

Thanks Vicki !!!