Wednesday, January 26, 2011

சீனு டைம்ஸ்-6

காவலன் படம் இங்க கத்தாரில ஒரு வாரம் கழிச்சுத்தான் வந்துச்சி......கடைசியா வந்த விஜய் படம், சுறா பார்க்க தைரியம் இல்லாததால் பார்க்கவில்லை. ஆனால் காவலன் படம் வெளியிட, இந்த அளவிற்கு எல்லாம் நிதிகளும் பிரச்சினை செய்வதைப்பார்த்து எப்படி இருந்தாலும் காவலன் பார்த்தே தீருவது என முடிவு செய்து, போன சனிக்கிழமை பார்த்தாச்சு. படம் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. விஜய் அழகா இருக்கார்...மெலிஞ்சி இருக்கார். சில காட்சியில நல்லாவும் நடிச்சி இருக்கார். விஜய், அந்த பிரவுன் நிற விக் ரொம்ப காசு கொடுத்து வாங்கிட்டார் போல...எல்லா படத்திலயும் ஒரு பாட்டுக்கு அந்த விக்க வைச்சிக்கிட்டு வந்து கொல்றார்.(ஒருவேளை திருஷ்டிக்கோ?) அசின் சகிக்கலை, எனக்கு கொஞ்சம் கூட  பிடிக்கலை.  வடிவேலு நாட் தி பெஸ்ட்...பட் ஓகே! நீபா....எப்பா எப்பா எப்பப்பா.. கண்ணுக்கு நிறைஞ்சி  இருக்காங்க !!!. வித்யாசாகர் பாட்டுல ஒன்னு தவிர எதுவும் பிடிக்கலை. இசை  பெரிய சொதப்பல். வேற ஒன்னும் பெரிசா சொல்ற மாதிரி இல்லை. சராசரி படம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வர வர,  யாராவது சினிமாவில வள வளன்னு கைபேசில பேசிக்கிட்டே வர மாதிரி காட்சிகள் பார்த்தா வெறுப்பா இருக்கு..மன்மதன் அம்பு போதையே தெளியல.... மறுபடியும் இப்ப வந்த காவலன்லையும் எப்பபார்த்தாலும்  கைபேசில பேசிகிட்டே இருக்காங்க. இயக்குனர்களே...தயவு செய்து மாத்தி யோசிங்க ப்ளீஸ் !!! நிஜ வாழ்க்கைல கைபேசியின் பயன்பாடு மிக அதிகமாகி விட்ட இந்த காலத்தில், திரையிலும் தொடர்ந்து கைபேசி வருவதை பார்த்தால் ஒருவித அயர்ச்சி ஏற்படுகின்றது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நம்ம ஊரில் தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறுவதை கத்தார் நாட்டு அமைச்சரும் பார்த்துகிட்டே இருந்து இருப்பார் போல....இங்கயும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையேத்திட்டாங்க. என்ன வித்தியாசம் என்றால், நம்ம ஊர் மாதிரி எட்டு மாசத்தில் பத்து  தடவை விலை ஏற்றவில்லை.. இங்க கடைசியா விலை  ஏறியது நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் என ஞாபகம். கத்தார் நாட்டு காசு மதிப்பிற்கு, இப்பதான் லிட்டர்க்கு ஒரு ரியால் வந்து இருக்கு, இது நாள் வரை  ௦0.80 ௦ ரியால்  தான் இருந்தது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகும் அரபு நாடுகள்  மத்தியில்  ஓரளவிற்கு இந்த விலை குறைவே. இந்த ஊர்க்காரங்க இதையே பெரிய விலை ஏற்றம்னு  பேசிக்கிறாங்க.. என்ன கொடும கோவிந்தா?? இதற்கு எல்லாம் அடிநாதம்  இங்கே எண்ணெய் வளம் உண்டு.... நம்ம ஊர்லயும் எண்ணெய் வளம் வரட்டும்... அப்புறம் பாப்போம்.!!! நாமளும் மத்த நாட்டு ஆட்களுக்கு விசாவை நிறுத்தி கொடுப்போம்....(கனவு காணுங்கள் நண்பர்களே...அதுக்குதான் செலவு ஒண்ணும் இல்லையே)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தீபாவளி விடுமுறையப்ப வாத்தியார் சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்தகுமாரன் கதை என்ற சரித்திர நாவல் படித்தேன். ராஜ ராஜ சோழன், தஞ்சை பெரிய கோயில் கட்டும் நேரத்தில் கதை நடப்பதாக சித்தரித்துள்ளார்.  கதையின் பிரதான பாத்திரங்கள்  வசந்தகுமாரன்(வசந்த்), கணேச பட்டர்(கணேஷ்) மற்றும் அபிமதி. அரசனை  பற்றி கதை சொல்லாமல், வசந்தகுமாரன் என்னும் வாணிபம் செய்யும் இளைஞனை  வைத்து கதை சொல்வது அழகு.  நிறைய சோழர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்  வார்த்தைகளை சுஜாதா கையாண்டுள்ளார்.(நல்லவேளை எல்லாவற்றிற்கும் விளக்கமும்  கொடுத்துள்ளார்...இல்லையென்றால் "ங்கே" என முழிக்க வேண்டியது தான்). எப்பவும் போல, பல சரித்திர குறிப்புகளை ஆராய்ந்து...மற்றும் சோழர் காலத்து வரலாற்றை  சொல்லும் பல முக்கியமான புத்தகங்கள் படித்துத்தான் இந்த நாவலை நம்பும் நடையில் எழுதி உள்ளார். பொறாமை, சதி, போர், ஒற்று ஆய்தல், ராஜதந்திரம், காதல், காமம், மக்கள் கலகம்,  பெரிய கோயில் கட்டுவதில் சில மக்களுக்கு இருந்த அதிருப்தி, ராஜேந்திர சோழனின் ஆரம்ப வரலாறு என எல்லாத்தையும் கலந்துக்கட்டி மிக விறுவிறுப்பா எழுதி இருக்கார் வாத்தியார். கண்டிப்பா படிக்கலாம்.

காந்தளூர் வசந்தகுமாரன் கதை
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்.
விலை Rs.130
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Friday, January 21, 2011

ஆடுகளம் - துரோகத்தின் அழகியல் !!!

ஆடுகளம் - எல்லாரையும் முன்னணியில் ஆடுகளத்தில் ஆட விட்டு பின்னாடி இருந்து அடிச்சி ஆடி இருக்கார் இயக்குனர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா அவர்கள் தைரியமாக மார் தட்டி  சொல்லி கொள்ளலாம்... வெற்றிமாறன் தனது சிஷ்யன் என...!
எல்லா மனிதருக்குள்ளேயும் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான்... சமயதிற்க்கேற்ப இருவரில் ஒருவன் வெளிப்படுவான். ஆடுகளத்தின் ஒன் லைனர் இதுதான். சேவல் சண்டையில் முதன்மையான ஆளாக கொடி கட்டி பறக்கும் பேட்டைக்காரன், அவருடைய சிஷ்யன் கருப்பு ஒரு கட்டத்தில் அவரை விட பணத்தாலும் புகழாலும் வளருவதைக்கண்டு மனம் ஓம்பாமல், கருப்புக்கு எதிராக சதிச்செயல்கள் செய்ய...முடிவு என்னவாகிறது என்பதே படம். இதை கருப்பின் காதல், தாய்ப்பாசம், நட்பு,  பேட்டைகாரனின் துரோகம் ஊடே கதை சொல்லி இருக்கார் இயக்குனர் வெற்றிமாறன். ஈகோ / துரோக எண்ணங்கள் மனிதனை என்னவெல்லாம் செய்யும் என பிரமாதமாக காட்டி இருக்கார் இயக்குனர். இது மாதிரி கதைக்களன் மற்றும் திரைகதைக்காக இயக்குனருக்கு ஸ்பெஷல் பூங்கொத்து !
தனுஷ்க்கு இந்த கருப்பு பாத்திரம் ஒரு திருப்புமுனை தான். தனுஷை விட இந்த கருப்பு பாத்திரத்திற்கு யாரும்  நியாயம் செய்து விட முடியாது என அடித்து சொல்லலாம். யாத்தே யாத்தே பாடல் துவக்கத்தில் தனுஷ் ஆடத்துவங்கும் போது நமக்கு ஆடத்தோன்றும்...., I m Love you என்று தப்சியிடம் சொல்லும் போது நமக்கும் சொல்லத்தோணும். ஒத்த சொல்லாலா பாட்டு துவங்கும் போது ஒரு சிரிப்பு இருக்கும் பாருங்க... வாவ்...!!! கடைசியில் தனது குருதான் அனைத்துக்கும் காரணம் எனத்தெரிந்து அவரிடம் என்னை கொன்னுடுங்க என்று உருகும் இடத்தில அசத்தல். பேட்டைக்கரனாக நடித்திருக்கும் ஜெயபாலன் படம் முழுக்க வாழ்ந்து இருக்கார் என சொல்லலாம். அந்த வயதிற்கேற்ப தான் தான் குரு, தான் சொல்வது தான் அனைவரும் கேட்கணும் என நினைப்பதும், கருப்பு அதை மீறி ஜெய்க்கும் போது வரும் பொறாமையாகட்டும், இறுதிக்காட்சியில் கருப்புக்கு எல்லா உண்மையும் தெரிந்த பிறகு காட்டும் முகபாவனையகட்டும் மனிதர் அனாயசமாக செய்து இருக்கார். (சுவாதி கிரணம்(இயக்கம்-கே.விஸ்வநாத்) என்ற ஒரு தெலுங்கு படத்தில் மம்மூட்டி இதே மாதிரி தனது சிஷ்யன் தன்னை மீறி வளருவதை பிடிக்காது அந்த பொறாமை பிடித்த பாத்திரத்தை கச்சிதமாக செய்து இருப்பார்). ராதாரவியின் குரல் இந்த பாத்திரத்திற்கு மிக அருமையா பொருந்தி இருக்கு.    
துரையாக கிஷோர் ஓவர் அக்டிங், அண்டர் அக்டிங்லாம் இல்லாம என்ன சரியா தேவையோ, அதை மட்டும் செஞ்சி இருக்கார். பார் நடத்தும் பாத்திரத்திற்கு நூறு சதவிகிதம் பொருந்தி இருக்கார். பேட்டைக்காரனின் இளம் மனைவியாக வரும் மீனாள் பாவப்பட்ட கதாபாத்திரம்...அழகா நடிச்சி இருக்காங்க. தப்ஸி பண்ணு(BUN இல்லைங்கோ ...Pannu) ஆங்கிலோ இந்தியனா வராங்க. பரவா இல்லை...நல்லா நடிச்சு இருக்காங்க..முக்கியமா பேட்டைக்காரன் கருப்பு பத்தி தவறாக சொல்லும் போது, அப்புறம்,  உன்ன விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்னு கருப்பு பார்த்து சொல்லும் போது. காக் உட்டிங்க்னு(சேவல் விடறது) கருப்பு பாட்டிகிட்ட சொல்லும் போது தப்ஸி கிட்ட இருந்து  ஒரு முகபாவனை வரும் பாருங்க...சுபெர்ப். ஊளையாக வரும் கருப்பின் நண்பர் அழகு பாத்திரம். நிறைவா செஞ்சி இருக்கார். படத்தின் முக்கிய வெற்றி..எல்லா பாத்திரமும் ரொம்ப இயல்பாக வைத்து இருப்பதுதான். ரத்தினமாக வரும் அந்த போலீஸ் கதாபாத்திரம் பின்னி இருக்கார். ஒவ்வொரு முறை தோல்வியில் மருகும் போதும், அவங்க அம்மா பொலம்பும் போது ஆற்றாமையால் கோபம் கொள்வதும், மொட்டை போட்டுக்கொண்ட பிறகு பேசும் வசனமாகட்டும், அழகான நடிப்பு.
வேல்ராஜின் ஒளிப்பதிவு அழகு...முக்கியமா பாடல் காட்சிகளில்....க்ளோஸ் அப் காட்சிகளில். சண்டை காட்சிகள் கொஞ்சம் நம்பும்படி உள்ளது. GV.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்தான், படம் பார்த்த பிறகு இன்னும் பெரிய ஆளவில் பேசப்படுகிறது... பின்னணி இசையும் ரொம்ப நல்லா இருக்கு. கிராபிக்ஸ்ல செய்ய பட்டிருக்கும் சேவல் சண்டை, ரொம்ப நல்லா செஞ்சி இருக்காங்க.
 
வெற்றிமாறன்
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல....எல்லாப்பெருமையும் இயக்குனர் வெற்றிமாறனுக்கே...சின்ன சின்னதா விஷயமாக இருந்தாலும்..பார்த்து பார்த்து செஞ்சி இருக்கார். மனித உணர்வுகளை ரொம்ப துல்லியமாக படம் எடுத்து இருக்கார். இயக்குனரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. இவர் இன்னும் நிறைய, இது மாதிரி மனித உணர்வுகளைக்கொண்டு மிக அழகாக படம் எடுக்க வாழ்த்துக்கள்.
பொல்லாதவன்  - Commercial Class, ஆடுகளம் - ALL TIME CLASS
.

Monday, January 17, 2011

இந்தியாவும் ஆசியா கால்பந்து கோப்பை கனவும் !!!

ஆசிய கோப்பை கால்பந்து கத்தாரில்(ஜனவரி 7-29) நடந்து கொண்டு இருக்கிறது. AFC எனப்படுவது ஆசிய கால்பந்து குழுமம்.  ஆசியக்கோப்பையை  வெல்லும் அணியானது  உலகக்கோப்பை   கால்பந்துக்கு(FIFA) நேராக தகுதி பெறுகின்றது. 1956 இல்  இருந்து இந்த ஆசியக்கோப்பை கால்பந்து போட்டிகள் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடக்கின்றது. ஆசியாவை பொறுத்த வரை தென் கொரியா, ஈரான், ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா பலமிக்க அணிகள். உலகத்தர வரிசையில் 138 வது இடத்தில  இருக்கும் நமது நாடு இது வரை மூன்று முறை தான் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்று இருக்கிறது.(1964, 1984, 2011). இந்தியாவின் அதிக பட்ச இடம் 1964 இல் இரண்டாம்  இடத்தை பிடித்தது தான். 1984 மற்றும் 2011 இல் முதல்  சுற்றிலேயே வெளியேறி விட்டனர்.    
ஜனாதிபதியுடன் இந்திய அணி  

இந்த தடவை இந்திய அணி ஒரு வழியா ரொம்ப கஷ்டப்பட்டு ஆசியா கோப்பையில் விளையாட தகுதி பெற்றனர். கத்தாரில் நடப்பதால் நாமளும் போய் நம்ம அணிக்கு உற்சாகம் கொடுப்போம்னு இந்தியாவிற்கும் பஹ்ரைனுக்குமான போட்டிக்கு ஒரு  மூணு வாரம் முன்னாடியே பதிவு பண்ணி வச்சி ஆச்சு. போட்டிகளும் ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து தொடங்கியது. இந்தியாவிற்கு இது இரண்டாவது  போட்டி. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 4-0 என தோற்று இருந்தனர். நல்லவேளை, நம்ம கோல்கீப்பர் ரொம்ப நல்லா பந்தை பிடிச்சார்..இல்லன்னா ஒரு 8-0, 10-0 ன்னு தோத்து  இருப்போம்.
பதினான்காம் தேதி போட்டியன்று நண்பர்கள் குழுவோடு இந்தியக்கொடி எல்லாம் வாங்கிகிட்டு அமர்க்களமா உள்ள போய் சீட்ட தேடி  நம்ம சீட்ட பார்க் பண்ணியாச்சு. இந்தியாவின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திரம்  பைச்சிங்  பூடியா வேற காயம் காரணமா ஆடலைன்னு முதல்லையே  சொல்லிட்டாங்க. அன்னிக்கு விளையாட்டு அரங்கத்தில் மக்கள் எண்ணிக்கை 11,000(approx). இதில் இந்தியாவிற்க்கான ஆட்கள் மட்டும் ஒரு பத்தாயிரம் பேர் இருந்தனர். ஆட்டம் தொடங்கிய மிகக்குறைந்த நேரத்திலேய பஹ்ரைன் அணியினர் முதல் கோலை பெனால்டி வாய்ப்பு மூலம் அடித்தனர்.  அடுத்த கொஞ்ச நேரத்தில் இந்தியாவிற்கு  கிடைத்த  கார்னர் ஷாட்டை அற்புதமாக கோல் அடித்து சமன் செய்தனர். அந்த கோல் அடித்த வினாடியில் அரங்கில்  கிளம்பிய சத்தம் அடங்க  ஒரு மூன்று நிமிடம் ஆனது. அதற்க்கு அப்புறம் பஹ்ரைன் தொடர்ந்து கோல் மழை பொழிந்து கொண்டு இருந்தனர். ஒரு வழியாக முதல் பாதி முடியும் போது 4-1 என்று இருந்தது.
எங்களோடு போட்டி காண வந்த நண்பர் வேலூர் மாவட்ட கால்பந்து அணியின்  தலைவராக  இருந்தவர். நாம் மக்கள் ஆடும் அழகை பார்த்து கோவத்தின் உச்சியில்  இருந்தார். வாங்க சீனு, நம்ம அவங்க ஜெர்சி போட்டுக்கிட்டு களத்தில் இறங்குவோம் எனக்கேட்டு கொண்டே இருந்தார். நானும் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் கால்பந்து ஆடி இருக்கேன்.(கல்லூரிக்குள் நடந்த முக்கியமான போட்டிகளில் பெனால்டி ஷாட் கூட கோலாக்க முடியாமல் நண்பர்களிடம் மானம் கெட்டது  தனிக்கதை). நிற்க. இரண்டாம் பகுதி தொடங்கியது...நமது அணியினர் மிக  ஆக்ரோஷமாக ஒரு பத்து நிமிடம் விளையாடினர்.இதன் விளைவாக  இன்னொமொரு கோல்  அடித்தனர். அந்த கோலும் அடிப்பதற்குள் நாக்கு தள்ளி போய்ட்டாங்கான்னு தான் சொல்லணும்.(மூணாவது attempt la தான் அந்த பந்து உள்ளவே போய் தொலைச்சுச்சு) பஹ்ரைன் சும்மா இருப்பாங்களா என்னா, அவங்க பங்குக்கு  இன்னொமொரு  கோல் அடித்தனர். ஒரு வழியாக 5 - 2 என ஆட்டம் முடிந்தது.  எங்களுக்கு இந்தியா தோத்து போயிடுச்சேன்னு சின்ன வருத்தம் இருந்தாலும், கில்லி மாதிரி ரெண்டு கோல் அடிச்சதே பெரிய சந்தோஷம். (இந்தியா கோல் அடிக்கும்னு அது வரை யாரும்  நம்பவே இல்லை, ஏன்னா , ஆசியா கோப்பை போட்டிகளுக்கு முன் நடந்த நட்பு போட்டிகளில், நம்ம அணி ஒரு போட்டி கூட ஜெயிக்கவில்லை, முக்கியமா ஒரு கோலும் அடிக்கவும் இல்லை)
போஸ் குடுக்கற அவசரத்தில் கொடிய வேற தலை கீழாக பிடிச்சி இருக்கேன்
(பாரதத்தாயே மன்னிச்சிடும்மா !!)
இந்திய அணி ஏன் இப்படி கேவலமா தோக்கறாங்க...எதுக்கு இவங்க எல்லாம் விளையாட வர்றாங்க, எங்க அணியை பார் எப்படி    விளையாடறாங்க என என்னோட பாஸ்(கத்தாரி) கேட்டார்? இந்தியா அணி எப்படி விளையாடினாலும், நம்ம எப்படி இந்தியாவ விட்டு கொடுக்கறது? நான் அவருக்கு மற்றும் இதே மாதிரி கேள்வி கேக்கிற எல்லாருக்கும் சொல்ற, சொல்லிக்கிற  பதில் இது தான்...இந்திய கால்பந்து அணி ஒரு  வளரும் அணி...கொஞ்சம் கொஞ்சமாக  வளர்ந்து  வருகிறது. நாங்க தகுதி பெற்றதே பெரிய விஷயம் தான். அதுவும் ரெண்டு கோல் வேற போட்டு இருக்கும். எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை... உங்களுக்கு கால்பந்து வரும் என்றால் எங்களுக்கு கிரிக்கெட் வரும். இன்னும் சொல்ல  போனால் நாங்க கிரிக்கெட்டில்  நம்பர்  ஒன் அணி, நீங்க(கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி, ஈரான், ஈராக், சிரியா, ஜோர்டான்) கால்பந்தில் என்ன நம்பர்  ஒன் அணியா? நாங்க  கிரிக்கெட்ல  உலகக்கோப்பை ஜெய்ச்சி இருக்கோம்... நீங்க முதல்ல கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவதே கேள்வி!!! அப்புறம் எதுக்கு ஓவர் பேச்சு....போங்கப்பு...போய் பொழப்ப பாருங்க !!!
.

Wednesday, January 12, 2011

சீனு டைம்ஸ்-5

கத்தாரில் இந்த வருஷ துவக்கத்தில் தோகா ஓபன் டென்னிஸ் போட்டிகள் எப்பொழுதும் போல கலை கட்டியது. ATP தரவரிசையில் உள்ள முக்கியமான முதல் தர ஆட்டக்காரர்கள் பங்கு பெற, சிறப்பாக, போன சனியன்று முடிவடைந்தது. முன்பெல்லாம் இந்த போட்டிகளை காண அவ்வளவு கூட்டம் வந்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அரங்கம் நிரம்பி வழிகிறது.(அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில்) அரங்கத்தின் தரமும் ரொம்பவே முன்னேறி விட்டது. மிக அருமையாக நடத்துகின்றனர். இறுதி ஆட்டதுக்கு சென்ற அனைவருக்கும் குளிருக்கு அடக்கமாக, இலவசமாக ஜெர்கின் எல்லாம் கொடுத்து அசத்திட்டாங்க.
வருடா வருடம், நான் எதாவது ஒரு நாள் மட்டும் செல்வேன், இந்த வருடம் மூன்று நாள்(இரண்டாம் சுற்று, அரை இறுதி மற்றும் இறுதி)  சென்று கண்டுகளித்தேன்.
தோகா கலிபா டென்னிஸ் விளையாட்டு அரங்கம்
இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் வென்றதை கண்டது ஒரு அழகிய அனுபவம். தோகாவில் அவர் இதை வெல்வது மூன்றாவது முறை. இறுதி ஆட்டத்தில் பெடரர் ஒரு வாய்ப்பு கூட எதிரில் ஆடிய ரஷிய ஆட்டக்காரரான டேவிடோன்கோவிற்கு  கொடுக்கவில்லை. இது நாள் வரை பல இறுதி ஆட்டங்களை பெடரர் வெல்ல  தொலைக்காட்சியில்  பார்த்ததுண்டு, நேரில் பார்க்கும் அனுபவும் மிக அலாதியான ஒன்று தான். அதுவும் பெடரர் தனது முழு வீச்சில் ஆடுவதை காணும் போது...அது ஒரு மாய அனுபவம் தான். ஸ்டெபி க்ராப்க்கு அப்புறம் நான் இவர் ஜெயித்தாக  வேண்டும் என நினைப்பது பெடரற்கு மட்டுமே. பார்ப்போம் ஆஸ்திரேலியன் ஒபென்னில் வெல்வாரா என??
பெடரர்க்கு நடுவே நான் !!! (ஒரு விளமபரம் @#@$@$)
அரை இறுதி ஆட்டத்தை காண சென்ற போது எங்களுக்கு முன் வரிசையில் அழகிய  ஐரோப்பா  பெண்மணிகள் அபாரமான வளைவு நெளிவிகளோடு அம்சமா இருந்தாங்க...ஆட்டத்தை பார்க்க விடாமல் முடிந்த அளவிற்கு மூடினாங்க... சாரி....காட்னாங்க. இது மாதிரி காட்சிகள் பார்க்கவே கூட்டம் வருவது தனிக்கதை.
*******************************************************************************************************
புத்தகக்கண்காட்சி சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இங்கே மத்தியகிழக்கு நாடுகளில் வசிக்கும் எங்களைப்போன்ற ஆட்களுக்கு போக முடியவில்லையே என மனம் துடிக்குது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் விடுமுறை எடுக்க நினைக்கின்றேன்..எதாவது வந்து அதை கெடுத்து விடுகிறது. கடைசியாக 2008 புத்தகக்கண்காட்சிக்கு சென்றேன். அதற்க்கு முன் சென்றது  2003 என நினைவு(அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில்).
நமக்கு தேவையான, விருப்பமான புத்தகத்தை வாங்குவதோடு இல்லாமல் நிறைய எழுத்தாளர்கள், எழுத்தாள வலைப்பதிவு நண்பர்கள் மற்றும் இன்ன பிற  பிரபலங்களையும் சந்திக்கலாம்.  அது ஒரு அற்புதமான நிகழ்வு...என்ன செய்ய? .. இந்த வருடமும்  வடை போச்சே கதை தான்.
*******************************************************************************************************
மன்மதன் அம்பு படத்தில் கமல் அவர்கள் ஈழத்தமிழர்களை ரொம்ப கேவலப்படுத்தி  விட்டாராம். அதுதான் இப்ப செய்தியாக அவரவர் விளாசிக்கொண்டு இருக்கின்றனர். அது நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம்...அவ்வளவுதான். அதை விடுத்து அனைத்தையும்  நிகழ் காலத்தோடு ஒப்பிடுவது என்னை பொறுத்தளவில்  சரியல்ல. 
அப்படி பார்க்க போனால் தெனாலியில் கூட கமல் ஈழத்தமிழராகத்தான்   நடித்தார். அதுவும் ஒரு மாதிரி விசிறு பிடித்த கதாப்பாத்திரம் தான். அப்பொழுது ஏன்  யாரும் வாய் திறக்க வில்லை? குரல் கொடுக்க வில்லை?. இலட்சோப இலட்ச மக்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்க நாதியில்லை....இப்ப வந்து யாரோ படத்தில் ஏதோ வசனம் வைச்சிடாங்கன்னு இவங்களும்  வேட்டிய  வரிஞ்சிகிட்டு  கிளம்பிட்டாங்க.. என்ன கொடும சார் இது?? இப்படியே போனா..... வழுக்கைத்தலை கொண்டவரை கிண்டல் செய்றார் கமல்ன்னு, ரஜினி மற்றும் சத்தியராஜ்  அவர்கள் தலைமையில் எங்கள மாதிரி ஆட்கள்(அதாங்க தலை முடி கொட்டியவர்  சங்கம்)  கூட சேர்ந்து போராட்டம் பண்ணலாம்..அறிக்கை விடலாம்...கவிதை எழுதி கிழிக்கலாம்.
*******************************************************************************************************