Wednesday, January 12, 2011

சீனு டைம்ஸ்-5

கத்தாரில் இந்த வருஷ துவக்கத்தில் தோகா ஓபன் டென்னிஸ் போட்டிகள் எப்பொழுதும் போல கலை கட்டியது. ATP தரவரிசையில் உள்ள முக்கியமான முதல் தர ஆட்டக்காரர்கள் பங்கு பெற, சிறப்பாக, போன சனியன்று முடிவடைந்தது. முன்பெல்லாம் இந்த போட்டிகளை காண அவ்வளவு கூட்டம் வந்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாக அரங்கம் நிரம்பி வழிகிறது.(அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில்) அரங்கத்தின் தரமும் ரொம்பவே முன்னேறி விட்டது. மிக அருமையாக நடத்துகின்றனர். இறுதி ஆட்டதுக்கு சென்ற அனைவருக்கும் குளிருக்கு அடக்கமாக, இலவசமாக ஜெர்கின் எல்லாம் கொடுத்து அசத்திட்டாங்க.
வருடா வருடம், நான் எதாவது ஒரு நாள் மட்டும் செல்வேன், இந்த வருடம் மூன்று நாள்(இரண்டாம் சுற்று, அரை இறுதி மற்றும் இறுதி)  சென்று கண்டுகளித்தேன்.
தோகா கலிபா டென்னிஸ் விளையாட்டு அரங்கம்
இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் வென்றதை கண்டது ஒரு அழகிய அனுபவம். தோகாவில் அவர் இதை வெல்வது மூன்றாவது முறை. இறுதி ஆட்டத்தில் பெடரர் ஒரு வாய்ப்பு கூட எதிரில் ஆடிய ரஷிய ஆட்டக்காரரான டேவிடோன்கோவிற்கு  கொடுக்கவில்லை. இது நாள் வரை பல இறுதி ஆட்டங்களை பெடரர் வெல்ல  தொலைக்காட்சியில்  பார்த்ததுண்டு, நேரில் பார்க்கும் அனுபவும் மிக அலாதியான ஒன்று தான். அதுவும் பெடரர் தனது முழு வீச்சில் ஆடுவதை காணும் போது...அது ஒரு மாய அனுபவம் தான். ஸ்டெபி க்ராப்க்கு அப்புறம் நான் இவர் ஜெயித்தாக  வேண்டும் என நினைப்பது பெடரற்கு மட்டுமே. பார்ப்போம் ஆஸ்திரேலியன் ஒபென்னில் வெல்வாரா என??
பெடரர்க்கு நடுவே நான் !!! (ஒரு விளமபரம் @#@$@$)
அரை இறுதி ஆட்டத்தை காண சென்ற போது எங்களுக்கு முன் வரிசையில் அழகிய  ஐரோப்பா  பெண்மணிகள் அபாரமான வளைவு நெளிவிகளோடு அம்சமா இருந்தாங்க...ஆட்டத்தை பார்க்க விடாமல் முடிந்த அளவிற்கு மூடினாங்க... சாரி....காட்னாங்க. இது மாதிரி காட்சிகள் பார்க்கவே கூட்டம் வருவது தனிக்கதை.
*******************************************************************************************************
புத்தகக்கண்காட்சி சென்னையில் நடந்து கொண்டு இருக்கின்றது. இங்கே மத்தியகிழக்கு நாடுகளில் வசிக்கும் எங்களைப்போன்ற ஆட்களுக்கு போக முடியவில்லையே என மனம் துடிக்குது. ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் விடுமுறை எடுக்க நினைக்கின்றேன்..எதாவது வந்து அதை கெடுத்து விடுகிறது. கடைசியாக 2008 புத்தகக்கண்காட்சிக்கு சென்றேன். அதற்க்கு முன் சென்றது  2003 என நினைவு(அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில்).
நமக்கு தேவையான, விருப்பமான புத்தகத்தை வாங்குவதோடு இல்லாமல் நிறைய எழுத்தாளர்கள், எழுத்தாள வலைப்பதிவு நண்பர்கள் மற்றும் இன்ன பிற  பிரபலங்களையும் சந்திக்கலாம்.  அது ஒரு அற்புதமான நிகழ்வு...என்ன செய்ய? .. இந்த வருடமும்  வடை போச்சே கதை தான்.
*******************************************************************************************************
மன்மதன் அம்பு படத்தில் கமல் அவர்கள் ஈழத்தமிழர்களை ரொம்ப கேவலப்படுத்தி  விட்டாராம். அதுதான் இப்ப செய்தியாக அவரவர் விளாசிக்கொண்டு இருக்கின்றனர். அது நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரம்...அவ்வளவுதான். அதை விடுத்து அனைத்தையும்  நிகழ் காலத்தோடு ஒப்பிடுவது என்னை பொறுத்தளவில்  சரியல்ல. 
அப்படி பார்க்க போனால் தெனாலியில் கூட கமல் ஈழத்தமிழராகத்தான்   நடித்தார். அதுவும் ஒரு மாதிரி விசிறு பிடித்த கதாப்பாத்திரம் தான். அப்பொழுது ஏன்  யாரும் வாய் திறக்க வில்லை? குரல் கொடுக்க வில்லை?. இலட்சோப இலட்ச மக்கள் செத்து மடியும் போது குரல் கொடுக்க நாதியில்லை....இப்ப வந்து யாரோ படத்தில் ஏதோ வசனம் வைச்சிடாங்கன்னு இவங்களும்  வேட்டிய  வரிஞ்சிகிட்டு  கிளம்பிட்டாங்க.. என்ன கொடும சார் இது?? இப்படியே போனா..... வழுக்கைத்தலை கொண்டவரை கிண்டல் செய்றார் கமல்ன்னு, ரஜினி மற்றும் சத்தியராஜ்  அவர்கள் தலைமையில் எங்கள மாதிரி ஆட்கள்(அதாங்க தலை முடி கொட்டியவர்  சங்கம்)  கூட சேர்ந்து போராட்டம் பண்ணலாம்..அறிக்கை விடலாம்...கவிதை எழுதி கிழிக்கலாம்.
*******************************************************************************************************

No comments: