Friday, June 3, 2011

எங்கே செல்கிறோம்???

சமீபத்தில், இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள  காணொளியை   கண்டதிலிருந்து ஏனோ நிரம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்த  கேள்விக்கு விடை கிடைத்த மாதிரி, உள்ளுக்குள் ஒரு உணர்வு. நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.
இந்த செந்தமிழ் என்னும் மனிதர் எவ்வளவு அழகாக உண்மையை பேசுகிறார், முக்கியமாக உண்மையாய் வாழ்கிறார். அவரைப்பார்த்தால்  எனக்கு பொறாமையாய்  இருக்கிறது. நாமெல்லாம் எங்கே தான் செல்கிறோம் என எனக்கு விளங்கவே இல்லை. நாற்பது வயது வரை பணத்தை தேடி ஓடுகிறோம், நல்ல உடல்நிலையை இழக்கிறோம்.  அதன் பிறகு சம்பாதித்த பணத்தை வைத்து தொலைத்த நல்  உடல்நிலையை, மகிழ்ச்சியை மீட்க முயல்கிறோம். உலகமயமாக்களினால் நிறைய நல்லது பெற்றிருக்கிறோம், இருப்பினும் நாம் இழந்தது தான் நிறைய என எனக்குப்படுகிறது....

எனக்கு இந்த நகர வாழ்க்கை எப்போதும் அந்தளவிற்கு இனித்ததில்லை. இங்கு எல்லா சிற்றின்பங்களும் கிடைக்கிறது தான், ஆனாலும் ஏதோ ஒரு 
வெறுமை எப்பொழுதும் கூடவே இருக்கிறது. இன்றளவில் எங்கள் கிராமத்தை விட்டு நான் மிகவும் ஒதுங்கியே இருக்கிறேன் கடந்த இருபது வருடங்களாய்.!! பிடித்தது எது என தெரிந்தும் அதை செய்ய முடியாமல் இருப்பது தான் மிகக்கொடுமை. இன்றளவில் உள்ள மத்திம வயதினர் நிறைய பேர் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுவும் தான்.

சேத்தன் பகத் சமீபத்தில் மிக அழகாய் பேசினார், அதன் இணைப்பு கீழே.
பெரிதாய் படிக்க, படத்தை கிளிக்கவும்
நாம் செய்வது எதுவாய் இருப்பினும் அதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும், கடுமையாய் முயற்சிக்காமல் அனுபவித்து முயற்சிக்க வேண்டும். நாமெல்லாம் வாழப்பிறந்த மக்கள், இயந்திரங்கள் அல்ல, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். காசு சேர்த்து கடைசியில்
அனுபிவிக்காம எதற்கு   செத்து போகணும், கேட்டால் என் மகன், பேரன்  நல்லா இருப்பாங்க, அப்படின்னு நிறைய பேர் சொல்வாங்க.
உண்மை என்னன்னு நிறைய நேரங்களில் பார்த்தால், அந்த மகனும்
பேரனும் கூட இதே வசனத்தை பேசிட்டு செத்து  போய்டுவாங்க. !!!!

குடும்பம், நண்பர்கள், வேலை, கேளிக்கை, உடல்நலம் என அனைத்திற்கும் சமமான நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவிக்க
வேண்டும். இதெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும், செய்து பாக்கறது எவ்வளவு கடினம்னு நீங்க சொல்றது கேக்குது....என்ன செய்ய... இங்க கூட சேம் ப்ளட் தான். ஆனாலும் முயற்சி செய்து பாருங்க....நானும் முயற்சி செய்கிறேன்....!!!
.

1 comment:

Siva Ranjan said...

உண்மை தான் அண்ணா.. :) மனதுக்கு பிடித்த அமைதியான விடயங்கள் எவ்வள்வோ இருக்கு செய்ய.. ஆனால் நாம்மால் அப்படியிருக்க முடிவதில்லை.. ஓடிக்கிட்டே இருக்கோம்.. திடீர்னு திரும்பி பார்த்தா ரொம்ப வயசாகிடுச்சோ ஆசைப்பட்டதுலாம் என்ன ஆச்சு.. அதை எப்படி விட்டோம்னு யோசிக்க வைக்குது.. வருத்தப்பட வைக்குது.. இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடாதுனு உறுதியா இருக்கேன்.. :)