Wednesday, August 4, 2010

எந்திரன் !!!

எந்திரன் - இசை

அந்தா..இந்தா.. என்று ஒரு வழியாக எந்திரனின் பாடல்கள் வெளி வந்துவிட்டது. மலேசியா போய் கோலாகாலமா பாடல் வெளியீட்டு விழா நடத்திட்டாங்க சன் பிக்சர்ஸ். இந்த மாதிரி ஒரு பாடல் தொகுப்பிற்கு கண்டிப்பாக இவ்வளவு செலவு செய்வதில் எந்த தப்பும் இல்லை. பின்னி பெடல் எடுத்து இருக்கார் AR. எப்பவும் போல தீவிர ரஜினி ரசிகர்கள்.."ஒன்னும் பாட்டு சரி இல்லையே" என்று மண்டையை தடவுவது எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. ஒரு பத்து நாள் கழிச்சு "பாட்டு எல்லாம் கலக்கல்னு" அவங்களே சொல்லுவாங்க! AR இசையில் இது மாதிரி நடப்பது ஒன்றும் புதிது அல்ல.

"என்ன மாதிரி பசங்க எல்லாம் பாக்க பாக்கத்தான் பிடிக்கும்னு" தனுஷ் சொல்றா மாதிரி, AR இசையில் "பாடல்கள் எல்லாம் கேக்க கேக்கத்தான் பிடிக்கும்". ரெண்டு நாளா எந்திரன் பாட்டு கேட்டு ரசித்த பிறகுதான் இந்த பதிவை எழுதறேன். சமீப காலங்களில் AR இசையில் வரும் பாடல்கள் எல்லாம் அந்த அந்த படத்தின் கருவை ஒத்தே அமைக்கபடுகின்றது.(உதாரணம் - இராவணன், வி.தா.வ). எந்திரன் இசை முழுவதும் ரோபோஸ், கம்ப்யூட்டர், டெக்னோ இதுதான் முக்கிய பின்னணி. கேட்ட உடனே மூன்று பாடல்கள் பிடித்து விட்டது, ஒரு ஐந்து தடவை நல்ல சவுண்ட் சிஸ்டம்ல( என்னோடு கார் செட்....ரொம்ப அருமையான செட் ஆக்கும்) கேட்டதும் எல்லா பாட்டுமே பிடித்து விட்டது.

எனக்கு பிடித்த வரிசையில் பாடல்கள்

1. இரும்பிலே ஒரு இருதயம் - AR கலக்கலா பாடி இருக்கார்

2. காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ் & ஸ்ரேயா கோசல் ரெண்டு பேருமே superb....

3. கிளிமஞ்சாரோ - பெரிய ஹிட் ஆகும் இந்த பாட்டு ......"ஒரு தெய்வம் தந்த பூவே" பாடுன சின்மயியா இது?? Unbeleivable variety.

4. புதிய மனிதா - SPB பாட, கேக்கும் போது எல்லா மயிர்க்கால்கள் அப்படியே நட்டுகுது..... AR பொண்ணு கதிஜாவிற்கு நல்ல துவக்கம்.

5. அரிமா அரிமா - இது மாதிரி ஒரு துவக்க இசை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு....ஹரிஹரன் பத்தி சொல்லவே தேவை இல்லை hi pitchல பின்னி இருக்கார்.

6. பூம் பூம் ரோபோடா - கொஞ்சம் கேட்ட பாடல் மாதிரி இருந்தாலும் நல்லா தான் இருக்கு.

7. சிட்டி டான்ஸ் - நல்ல இசை MIX

எந்திரன் - பாட்டு வரிகள்
வைரமுத்து - வைரம் வைரம் தான்.....ரொம்ப மெனக்கெட்டு நிறைய technical விஷயங்கள் எல்லாம் சேர்த்து கலக்கலா எழுதி இருக்கார். வைரமுத்து மகன் கார்க்கி ரொம்ப நல்ல எழுதி இருக்கார். படத்துக்கு என்ன தேவையோ அதை ரொம்ப அழகா கொடுத்து இருக்கார், maybe ஷங்கர் வாங்கி இருக்கார். வாலி வைரமுத்து சேர்த்து எழுதினால் எப்படி இருக்குமோ அந்த பாணியில் தான் கார்க்கி எழுதி இருக்கார்...பார்ப்போம் ...Miles to go.

எனக்கு பிடித்த வரிகள்

"கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு"

"காதல்காரி, உந்தன் இடையைப் போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரம் கூட இளைத்து விட்டதே"

"வயரூட்டி, உயிரூட்டி"

" கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை"

எந்திரன் - பின்னனி இசை
இராவணன் படத்தின் பின்னணி இசை கேட்டு நான் மிரண்டே விட்டேன், மெய் சிலிர்த்து விட்டேன். அந்த அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் ARன் அசத்தலான உழைப்பு தெரியும். ஒரு சில இடங்களை தவிர்த்து விண்ணை தாண்டி வருவாயா பின்னணி இசையும் அற்புதம். என்னை பொறுத்த வரையில் பின்னணி இசையில் AR இப்பலாம் ரொம்பவே உழைக்கிறார். எந்திரன் பின்னணி இசையை ரொம்பவே எதிர் பார்க்கிறேன்.

எந்திரன் - படம்
தசாவதாரம், சிவாஜி படங்கள் எல்லாம் நம்ம ஊர்ல ரிலீஸ் ஆகறதுக்கு ஒரு நாள் முன்னாடி, இங்க கத்தார்ல FDFS பார்த்தாச்சு. இந்த தடவை ஊரில் விடுமுறையில் இருப்பேன் என்பதால், FDFS எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரிய வில்லை. வாத்தியார் சுஜாதாவின் பங்களிப்பு வேறு இந்த படத்திற்கு இருப்பதால் ரொம்ப ரொம்ப எதிர் பார்க்கிறேன்.

Let us wait and Watch !!!

10 comments:

Mohamed Faaique said...

GUD ARTICLE...
IRUMBILE ORU ITHYA... THT GIRL VOICE..SUPERB ARR TOOO

கத்தார் சீனு said...

@ Mohamed Faaique
நன்றி !!!

Thani said...

article romba nalla irukku da.. as said last 2 movies music is so good from AR..hope this join that..then..when are coming to india..

Keep posting..

எழில் said...

எந்திரன் இசை மிக அருமை! ஏ.ஆர். ஒரு Trend setter!
நம்ம ஏ.ஆர். இசையை துல்லியமா கேட்கற அளவுக்கு நல்ல திரை அரங்குகள் இன்னும் நம்ம ஊர்ல இல்லை (ஒரு சில திரை அரங்குகளை தவிர்த்து).
இந்த படத்துல ஒலி கலவைகளும் பிரமாத இருக்கும் நினைக்கிறன். ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு மக்களை சென்றடையும்னு தெரியில...

கத்தார் சீனு said...

சரியாய் சொன்ன எழில்....
நல்ல Theatre/Player/Music systemல கேட்டாதான் AR இசை சரியாக சென்றடையும்....
நம்ம இராவணன் & ராவண் பார்த்தப்போ வித்தியாசம் நல்ல தெரிஞ்சுது இல்ல??

கத்தார் சீனு said...

@ தணிகை
நன்றி மச்சி...
செப்டம்பர்ல ஊருக்கு வரேன்....

கானகம் said...

கமல் ரசிகரிடமிருந்து ரஜினி படப்பாடல் விமர்சனமா?

:-)

நல்லாத்தான் இருக்கு.. எங்க கிண்டல் செய்திருப்பீங்களோன்னு நெனச்சிகிட்டே வந்தேன்

கத்தார் சீனு said...

நன்றி ஜெயக்குமார் ....
நமக்கு மனசுல பட்டத, உண்மையா எழுதணும்.
எல்லாம் உங்கள மாதிரி ஆட்களின் பதிவுகளை படித்து கற்று கொள்வது தான்....

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

கத்தார் சீனு said...

நன்றி Tech Shankar....