Friday, October 8, 2010

சீனு டைம்ஸ்-2

போன வாரம் இங்க ஒரு ஷாப்பிங் மால் போயிருந்தேன்.... நல்ல கூட்டம்.... வண்டி நிறுத்திட்டு உள்ள போகவே ஒரு கால் மணி நேரம் ஆகி விட்டது. நண்பனோட சும்மா துணைக்கு போனதால் நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு  அவர் கூட சுத்திகிட்டு இருந்தேன். பிங்க் நிற உடையில் ஒரு அழகான குழந்தை பார்த்தேன்...ஒரு இரண்டு வயசு இருக்கும். ரொம்ப அழகா சிரிச்சிகிட்டு இருந்துச்சி...சில வினாடிகள் அந்த குழந்தை கூட சிரிச்சி வேடிக்கை காட்டிவிட்டு தள்ளி போயிட்டேன். மறுபடியும் வாங்கிய  பொருள்களுக்கு விலை போடும் நேரத்தில் அதே பாப்பா சிரிச்சிகிட்டே தனியே வெளியே நடந்து போச்சு. அப்படியே அந்த மால் கார்ரிடர் தாண்டி வெளியே கார்கள் நிறுத்தம் வரை சென்று விட்டது. எல்லாரும் பார்த்துகிட்டே இருக்காங்க..ஒருத்தரும் குழந்தையை தூக்கவில்லை. அடுத்து பிரதான சாலையில் செல்ல அந்த பாப்பா எத்தனிக்கையில், இதுவரை அந்த குழந்தை பின்னாடியே சென்ற  நான் இதற்கு மேல் வேலைக்காகாது என நான் அந்த குழந்தையை தூக்கினேன். அம்சமா சிரிச்சிகிட்டே என்கிட்டே வந்துட்டாங்க. நேராக கஸ்டமர் கேரில் சென்று பதட்டத்தோட, "குழந்தை யாருடையது என்று தெரியவில்லை,  தனியாக சுத்திகிட்டு இருக்குனு, கொஞ்சம் மைக்ல அறவிப்பு கொடுங்கன்னு சொன்னேன்".  அங்க இருந்த பெண்மணி கொஞ்சம் கூட அச்சமோ/பதட்டமோ இல்லாம அந்த குழந்தைய கொஞ்ச ஆரம்பிசிட்டாங்க. அவங்க கூப்பிட்டும் என்னிடம் இருந்து போக மறுத்து விட்டது அந்த பாப்பா. ஒரு வழியா மைக்ல அறிவிப்பு செஞ்சாங்க. கொஞ்ச நேரம் கழித்து, ஒரு சலனமோ/பதட்டமோ இல்லாம ரொம்ப ஜில்லுனு(cool a) என்னை நோக்கி ஒருத்தர் வந்தார், குழந்தையை அழைப்பது போல் கைகளை நீட்டினார். "இது  உங்க குழந்தையா" என்ற எனது கேள்விக்கு, வாயை  திறந்து  ஆமாம்னு கூட சொல்லலை..., நான் கேட்ட கேள்விக்கு அமோதிப்பது போல தலையை மட்டும்  ஆட்டிட்டு குழந்தையை தூக்கிகிட்டு போய்கிட்டே  இருந்தார், அந்த கஸ்டமர் கேர் பெண்மணி அவங்க திரும்பி அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டாங்க....நான் மட்டும் "ங்கே"  னு முழிச்சபடி  பார்த்துகிட்டே  இருந்தேன். நான் ரொம்ப பெரிய  செண்டிமெண்ட் சீன் எதிர்பார்த்தா, இப்படி ஆயிடுச்சுன்னே  பார்கையில், அப்புறம் தான் விளங்கிச்சு....இந்த மாதிரி பெரிய மால்களில்  இதெல்லாம் தினசரிகள் போல என.....! ஆனா அந்த குழந்தையோட அப்பா ஒரு சின்ன நன்றி சொல்லி இருக்கலாமோ என என் சின்ன மனசு  நினைச்சிச்சு..... (ஏன்னா நானும் சராசரி மனிதன் தானே(வேணும்னா என் profile பார்த்துக்குங்க)..... என்ன உலகம்டா சாமி !!!)
****************************************************************************************************
சமீபத்தில் நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ. ஏற்கனவே ஒரு பிரபல பதிவர் இந்த வீடியோவை ரொம்ப நாள் முந்தி அவர் பதிவில் வெளியிட்டு  இருந்தாலும், என்னோட வட்ட்டதில் உள்ள நண்பர்களுக்காக ....இதோ அந்த காட்சி....        
கடைசியா, ரஜினி அவர்கள் பேசி முடிக்கும் போது, "Thank you very much Aishwaryaji" னு சொல்லும் போது...எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.... Simplicity, Thy name is Rajinikanth.
****************************************************************************************************
எங்க கம்பெனில, போன மாதம் ஒரு ISO Refresher கோர்ஸ் போயிருந்தேன். கோர்ஸ் எடுத்தவர் ரொம்ப அழகா, தெளிவா எல்லாரையும் ஈடுபடுத்தி நடத்தி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், தவறுகள் பத்தி பேசுகையில் என்னை பார்த்து கேட்டார், நீ எவ்வளவு சதவிகிதம் உன் வேலைல தப்பு செய்வே என்று கேட்டார்?. நான் கொஞ்சம் உணர்ச்சி பெருக்கில் ஒரு 2 சதவிகிதம்னு சொன்னேன். இது உங்க கம்பெனிக்கு அதிகம்னு சொன்னார். நான் 2 சதவிகிதம்தானே என்றேன். அவர் உடனே, உங்க கம்பெனில இருக்குற 2000 பேரும் 2 சதவிகிதம் தப்பு பண்ணா?? தப்பா என்றார். இவரு எப்படா அந்நியன் படம் பார்த்தார்னு நினைச்சேன். சொல்ல வரது என்னன்னா, அவர் இந்த மாதிரி கேட்ட உடனே வாத்தியார் சுஜாதா ஞாபகம் வந்துடுச்சி. அந்நியன் படத்தோட மொத்த கருத்துமே இந்த கீழ்கண்ட வரிகளில் அடங்கி விடுகின்றது. அதுதாங்க சுஜாதா.

அந்நியன் : "5 பைசா திருடினா தப்பா ?"

சொக்கன் : "தப்பா தெரியலை சார் !"

அந்நியன் : "5 கோடி பேர் 5 பைசா திருடினா தப்பா ??"

சொக்கன் : "தப்பு மாதிரி தெரியுது சார் !!"

அந்நியன் : "5 கோடி பேர் 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா ???"

சொக்கன் : "பெரிய தப்பு சார் !!!"

இப்ப சமீபத்தில் கூட ஒரே ஒரு துரோகம் என்ற வாத்தியார் எழுதுன புத்தகம் படித்தேன். கதை முழுக்க இருவரின் பார்வையில் மாறி மாறி அத்தியாயங்கள் எழுதப்பட்டு இருக்கும். (விருமாண்டி திரைக்கதை பாணி, இந்த கதை எப்பவோ எண்பதுகளில் எழுதப்பட்டது). காலத்தில் எவ்வளவு முந்தி இருந்தார் வாத்தியார் சுஜாதா?? ஆகையால் தான் இறப்பிலும் முந்தி விட்டார் போல!!! வாத்தியார் இன்னும் நம்மோட இருந்திருந்தால் எந்திரன் இரண்டாம்  பாகம் கண்டிப்பா இப்ப இருக்கறத விட நல்லாவே வந்து இருக்கும். கடவுள் யார் என்று எந்திரன் படத்தில் ரோபோவை பார்த்து கேட்கப்படும் கேள்விக்கு வரும் பதில் அட்டகாசம். எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்வேன், எல்லா பதிவிலும் எழுதுவேன்... "We Miss U வாத்தியாரே...!!!
****************************************************************************************************

5 comments:

கானகம் said...

//"இது உங்க குழந்தையா" என்ற எனது கேள்விக்கு, வாயை திறந்து ஆமாம்னு கூட சொல்லலை..., நான் கேட்ட கேள்விக்கு அமோதிப்பது போல தலையை மட்டும் ஆட்டிட்டு குழந்தையை தூக்கிகிட்டு போய்கிட்டே இருந்தார், அந்த கஸ்டமர் கேர் பெண்மணி அவங்க திரும்பி அவங்க வேலைய செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.///

முதலில் பணத்திமிர்..

இரண்டாவது ஆயாக்களிடமே குழந்தைகள் வளர்வதால் பெற்றோருக்கு குழந்தைகள் பற்றி கவலையின்மை..அதனால் அது என்ன ஆனாலும் வேலைக்காரிமேல் பழிபோடலாம்.

இதுபோன்ற மால்களில் செக்யூரிட்டிக்கு மிக முக்கிய பங்குண்டு. ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் செக்யூரிட்டியின்மீது பழி விழும். கோர்ட்டில் செக்யூரிட்டியின் கவனக்குறைவால்தான் அசம்பாவிதம் நடந்தது என நிருபிப்பார்கள்.

இதுதவிர உங்களுக்கு ஒரு குழந்தையை காப்பாற்றிய மனநிறைவு இருக்கிறதே, அதை அந்த குழந்தையின் அப்பா என்ற வெண்ண வெட்டி சிப்பாயின் தேங்க்ஸ் தருமா?

நானும் இதுபோன்ற நிகழ்வுகளை லுலுவின் கண்டிருக்கிறேன்.

குழந்தையை பாசத்துடன் பார்த்துக்கொள்ள இந்தியத் தாய்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. நேற்று நானும் எனது நணப்ரின் குடும்பத்துடன் மிருகக்காட்சி சாலை சென்றிருந்தோம். குழந்தைக்கு தேவையான பொருட்கள் என ஒரு பேக் முழுக்க தண்ணீர், நாப்கின், பாட்டில், சுடுதண்ணீர், குழந்தைக்கு சாப்பிட என ஒரு 7 கிலோ எடையை அங்கே இருந்த 2 மணி நேரமாய் கையிலேயே வைத்திருந்தார்.. இதெல்லாம் நம்மூர் அம்மாக்கள் மட்டுமே காட்டும் அன்பு.

கானகம் said...

சீனு டைம்ஸ் நன்றாக இருக்கிறது.. தொடர வாழ்த்துக்களும்...

கத்தார் சீனு said...

நன்றி ஜெயக்குமார்...உங்கள் வரிகள் எனக்கு உற்சாக பானம்....
நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள்.... நம்மூர் அம்மாக்கள் வளர்ப்பே தனி தான்...இது நடந்ததும் லுலூவில் தான்(கேபிளார் சொல்ற லூலு இல்லை)..

சுதாகர் said...

// எந்திரன் இரண்டாம் பாகம் கண்டிப்பா இப்ப இருக்கறத விட நல்லாவே வந்து இருக்கும். கடவுள் யார் என்று எந்திரன் படத்தில் ரோபோவை பார்த்து கேட்கப்படும் கேள்விக்கு வரும் பதில் அட்டகாசம். எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்வேன், எல்லா பதிவிலும் எழுதுவேன்... "We Miss U வாத்தியாரே...!!!
//

கடவுள் பற்றி வரும் அந்த வசனம் ரொம்ப அருமை. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. சுஜாதா அவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும். அவரை தவிர இந்த மாதிரி யாரும் யோசிக்க முடியாது. படம் முழுவதும் அவர் வசனம் எழுதி இருந்த ரொம்ப நல்லா இருந்து இருக்கும் !!!

கத்தார் சீனு said...

நன்றி சுதாகர் அவர்களே !!!