Wednesday, March 9, 2011

ஐந்து புள்ளி யாரோ !!! (5 Point someone)

3 Idiots படம் பார்த்தப்பவே, இவ்வளவு அருமையான படம், கதை வடிவில் எப்படி இருக்கும் எனப் படிக்க ஆவலாக இருந்தேன். அப்புறம் எப்பவும் போல அதை மறந்தாச்சு. அப்புறம், போன விடுமுறையில் ஊருக்கு போனப்ப 2 States - The Story of My Marriage படித்ததிலிருந்து நானும் சேத்தன் பகத் அவர்களின் விசிறியாகி விட்டேன். அவர் எழுதிய மத்த மூன்று புத்தகங்களையும் வாங்கிட்டு வந்துட்டேன். இப்பத்தான் 5 Point someone - What not to do at IIT என்ற சேத்தன் பகத் எழுதிய முதல் புத்தகத்தை
படித்து முடித்தேன். மிக அருமையான அனுபவம். நாமளே ஐ.ஐ.டி. ல  நாலு வருஷம் படிச்சு முடிசாப்பல இருக்கு.  
ஹரி, ரியான், அலோக் என்ற மூவரும் ஐ.ஐ.டி. ல படிக்க சேர்வதில் தொடங்கி, எவ்வாறு நண்பர்கள் ஆனார்கள், எப்படி படித்து முடித்தார்கள், பின் வேலைக்கு சேர்ந்து வாழ்கையில் அடுத்து கட்டத்திற்கு செல்வதோடு கதை முடிகிறது. இதன் ஊடே நம் நாட்டில் உள்ள 
படிப்பு முறை, காதல்,  பெற்றோர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழலால்  விரும்பும் கலையை  செய்ய முடியாது போதல், மாணவர்கள் மனநிலை 
எனக்கதை பல்வேறு தளங்களை தன்னுள் அடக்கியுள்ளது. கதையின் 
மத்தியில் ஆங்காங்கே முக்கியமான பாத்திரங்கள் தாங்கள் 
பேசுவதைப்போல் அத்தியாயங்கள்  வைத்திருப்பது அருமையான விஷயம். சேத்தன் பகத் அவர்களின் எழுத்து நடை அமர்க்களமாக, மிக எளிமையா இருக்கு. இந்த புத்தகம் முழுக்க இளமை கொப்பளிக்கிறது.... கல்லூரி களம் வேற...புகுந்து விளையாடி இருக்கார் சேத்தன். இந்த தலைப்பை விட வேற பொருத்தமான தலைப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை.
இன்னொரு அம்சமான விஷயம் என்னவென்றால், புத்தகத்தின் அட்டை வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் மிக அழகா இருக்கு. சின்ன சின்ன  டீடைலிங், அந்த சின்ன அட்டையில வியக்க வைக்குது. முன்னுரைல  சேத்தன் எல்லாருக்கும் நன்றி சொல்லி இருக்கார்...அதுல பாருங்க..  மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், பில் கேட்ஸ்க்கும் அவர்களின்  கண்டுபிடிப்பான MS - Word க்கும் நன்றி சொல்லி இருக்கார். எத்தனை பேர்க்கு இந்த எண்ணம் வரும். இந்த புத்தகம் சேத்தன் எழுதிய முதல் புத்தகமாம்...சொன்னாத்தான் தெரியுது. புத்தகத்தின் அட்டையில் எழுதியிருக்கும் வாசகம் முற்றிலும் உண்மை. "A Perfect  ten - This is 270 pages of pure fun."

Title: Five Point Someone – What not to do at IIT!
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: January  05, 2004
Price: Rs .95

இந்த புத்தகத்தை பத்தி சொல்கையில் இன்னொரு விஷயமும் சொல்ல விழைகிறேன், த்ரீ இடியட்ஸ் படம் எழுபது சதவிகிதம் இந்தக்கதைதான். ஆனாலும் இதை திரைக்கதை செய்த விதத்தில் தான் எத்தனை
வித்தியாசம். இந்தக்கதையும் எந்த விதத்திலும் குறைந்ததில்லை...
த்ரீ இடியட்ஸ் படமும்  (திரைக்கதை -அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி, 
விது வினோத் சோப்ரா) எந்த விதத்திலும் குறைந்ததில்லை... இரு சாராருமே தங்களின் பணியில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் இன்னொரு சோகமும் மனது நினைக்கின்றது...
வாத்தியார் சுஜாதா அவர்களின் கதையை இதுவரை யாருமே சரியாக திரைக்கதை அமைக்காமல் படத்தை பப்படமாக்கிய சோகம் தான்...
வேற என்ன சொல்ல !!!
.

6 comments:

டக்கால்டி said...

நீங்க சொல்லும் சுஜாதா எழுதிய புத்தகம் "பிரிவோம் சிந்திப்போம்" தானே?
அது ஆனந்த தாண்டவம் என்ற படமாக வெளி வந்தது. எனக்கு அந்த படம் ஓரளவுக்குப் பிடித்து இருந்தது சார்...

சமுத்ரா said...

உண்மை தான்..நன்றி

கத்தார் சீனு said...

@ டக்கால்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
பிரிவோம் சந்திப்போம் மட்டும் இல்லை...இன்னும் நிறைய படங்கள்.(கரையெல்லாம் செண்பகப்பூ,பிரியா, காயத்ரி)

கத்தார் சீனு said...

@ சமுத்ரா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சுதாகர் said...

chethan bhagat ezhudiya enoru kadhai, "one at call center"... idhai hindila "Hello" apadinu padam eduthaanga.

Indha kadhai kooda cinema vadivil eduthadhu sariyilla...

elam director kita dhaan iruku....

கத்தார் சீனு said...

@ Sudha - கதையை படமாக்கும் போது திரைக்கதை மிக முக்கியம்...
அதை கோட்டை விட்டால் எல்லாமே பணால் தான்.