Sunday, March 20, 2011

அரசியல் நொறுக்ஸ் !!!

ஒருவழியாக மனம் வெறுத்து அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறுகிறார் வைகோ. இவ்வளவு அவமானங்கள், அவமதிப்புகள் தேவையா?? வைகோ அவர்கள் மீது பொதுவாக மக்கள் வைத்து இருந்த இமேஜ் எனப்படும் நன்மதிப்புக்கு பெரிய வேட்டு வைத்து விட்டார் அம்மையார். வைகோ அவர்கள் ரொம்ம்மம்ம்ம்ப லேட்டு. இந்தியன் படத்தில கவுண்டர், "இங்க சந்த்ருனு ஒரு மானஸ்தன் இருந்தான், அவனை தேடுறன்னு" சொன்னா மாதிரி தமிழக மக்கள் வைகோவை தேட வைத்து விட்டனர் மஞ்சள் துண்டுக்காரரும், அம்மையாரும். இதே நிலைமை நாளை விஜயகாந்துக்கும் கண்டிப்பாக நேரும். இதை சொல்றதுக்கு ஒன்னும் ஜோசியம்லாம் தேவையில்லை, அம்மையாரின் ஆணவம் உலகறிந்த விஷயம்.... இன்னொரு பெருத்த சந்தேகம்...சீமான், வைகோ அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த ஒரு காரணத்துக்காகவும் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவுன்னு முடிவு எடுத்து இருப்பார். இப்ப அவர் என்ன செய்வார்??? இடியாப்ப சிக்கல விட பெரும் சிக்கலா இருக்கும் போல.....
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஸ்பெக்ட்ரம் புயலைத்தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள்.
  • சொல்லுங்கள் ராசாவே
  • ஒரு ஊரில் ஒரு ராசா
  • 2G மனிதன்
  • ராசாக்கனி
  • கனியிருப்ப ஊழல் கவர்ந்தற்று
  • சிறையில் சின்ன ராசா
  • ஆண்டிமுத்து ஆண்டியான கதை
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆளுங்கட்சியினர் தேர்தல் அறிக்கை ரொம்ப அமர்க்களமா பயங்கர ஆரவாரத்தோட வெளியிட்டார் தமிழக முதல்வர். ஏற்கனவே இலவசங்கள் கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கிய பெருமையை தக்க வைத்துக்கொண்டதோடு இல்லமால் இன்னும் மக்களை சோம்பேறி ஆக்குவேன் என்று அற்புதமா ஒரு தேர்தல் அறிக்கை அறிவித்து இருக்கிறார் மாண்புமிகு முதல்வர். மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் என இலவசங்கள் ஏராளம். எங்க இருந்து இந்தப்பணம் எல்லாம் வருது? மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே இலவசம் எனக்கொடுக்க எதற்கு அரசு? நலத்திட்டங்கள் எங்கே உள்ளன?? நலத்திட்டங்கள் எழுபது விழுக்காடு எனவும், இலவசத்திட்டங்கள் முப்பது விழுக்காடு என இருந்தால் கொஞ்சமாவது நாடு முன்னேற வாய்ப்புண்டு..அனால் இங்கே நடப்பது உல்டா...பின்ன எப்படி நாடு உருப்படும்?, எப்பவும் போலதான்..."Rich gets Richer....Poor gets Poorer" கதை தொடரும்.

இந்த தேர்தல் அறிக்கைல நிறைய வலியுறுத்துவோம்..பாடுபடுவோம்.. நடவடிக்கை எடுப்போம்..சொல்லி இருக்காங்க. அதாவது இந்த வலியுறுத்துவோம்,பாடுபடுவோம் சங்கதிகள் எல்லாம் கண்துடைப்பு வஸ்துக்கள். நாளைக்கு யாரும் ஒரு கேள்வி கேட்டிட கூடாதில்ல. என்னா ஒரு ராஜதந்திரம்(இந்த வார்த்தைய யாரவது தமிழ் அகராதியிலிருந்து தூக்கிட்டா புண்ணியமா போகும்). எனக்கு வாக்களித்தால் இதெல்லாம் இலவசமா தருவேன் எனசொல்வதும் ஓட்டுக்கு கொடுக்கும் லஞ்சம்தான்... என்ன, தேர்தல் முடிந்த பிறகு தரப்போறாங்க... இது இல்லாமல் தேர்தலுக்கு முன்னாடி வேற ஒவ்வொரு ஓட்டுக்கும் பணம். இந்த ஓட்டுக்கு பணமானது தொகுதியில் நிற்பவரின் நட்சித்திர அந்தஸ்தை பொறுத்து வேறுபடும். சில தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரெண்டாயிரம் தரப்போறாங்களாம்....

 
கூடிய சீக்கிரம் அடுத்தடுத்த தேர்தல்களில் கீழ்காணும் அறிக்கைகள் வரலாம்.....

  •  தொலைக்காட்சியை தொடர்ந்து DVD பிளேயர் இலவசம்...(இளைஞன், உளியின் ஓசை, பெண் சிங்கம் போன்ற டிவிடிக்கள் கூடதல் இலவசம்)
  • இலவசங்களை போற்றும் வகையில் தமிழ்நாடு எனும் பெயரை இலவசநாடு என மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை (அ) உதவித்தொகை வழங்கப்படும்(ஒருத்தனும் வேலைக்கு போக மாட்டான்)
  • மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமைகளில் வீட்டுக்கு ஒரு குவார்டர்ரோ அல்லது பீரோ மலிவான விலையில் தரப்படும்...சைடு டிஷ் இலவசம்.
  • டாஸ்மாக்கில் மப்படித்து மல்லாந்தால் ஒரு சொம்பு மோர் இலவசம்

 வாழ்க ஜனநாயகம் !!! வளர்க தமிழகம் !!!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



8 comments:

lLakshmi said...

மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமைகளில் வீட்டுக்கு ஒரு குவார்டர்ரோ அல்லது பீரோ மலிவான விலையில் தரப்படும்...சைடு டிஷ் இலவசம்.

ITHU ENAKKU ROMBA PIDICHIRUKU

கத்தார் சீனு said...

மிக்க நன்றி லக்ஷ்மி !!!!

bandhu said...

//இலவசங்களை போற்றும் வகையில் தமிழ்நாடு எனும் பெயரை இலவசநாடு என மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்//
மக்களை இலவசத்துக்கு அலையும் பிச்சை காரர்கலாக்கியதால் பிச்சைகார நாடு என்று மாற்றலாம்.

கத்தார் சீனு said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பந்து அவர்களே !!!

சுதாகர் said...

// இலவசங்களை போற்றும் வகையில் தமிழ்நாடு எனும் பெயரை இலவசநாடு என மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் //


"இலவசநாடு"

...romba nalla iruke...

கத்தார் சீனு said...

மிக்க நன்றி சுதா....
இலவசநாடு கூட பரவாயில்லை....
பிச்சைக்காரநாடா மாத்தாம இருந்தா சரி !!!!

கோவை நேரம் said...

நன்று

கத்தார் சீனு said...

மிக்க நன்றி கோவை நேரம் !!!