Friday, April 22, 2011

கோ - நல்லா இருக்குங்"கோ"

எனக்கு எப்பவுமே ஒரு படம் பார்ப்பது என்றால் துவக்கத்திலிருந்து  ஒரே ஒரு சின்ன காட்சிக்கூட தவற விடாம பார்த்தாத்தான் படம் பார்த்த பூரண திருப்தி கிடைக்கும். கோ படம் எந்த தொந்தரவும் இல்லாமல் முழுதாக ரசித்துப்பார்த்தேன். கோ படத்தில் பெயர்கள் போடுவது கூட மிக அழாகாக கையாளப்பட்டுள்ளது, பேர்த்தான போடுறாங்கன்னு தவற  விட்டுடாதிங்க. 
படத்தின் கதைக்களம் தினப்பத்திரிக்கையும் அரசியலும் தான். இந்த படத்தின் கதையை நான் சொல்ல விரும்பவில்லை, கதை தெரிந்தப்பின்  படம்  பார்க்கும் திருப்தி சத்தியமாக கிடைக்காது, முக்கியமாக இந்த படத்தை பொறுத்தவரையில். அஷ்வின்(ஜீவா), வசந்தன்(அஜ்மல்), ரேணுகா(கார்த்திகா), சரோ(பியா) ஆகிய இவங்கள சுத்தித்தான் கதை.  தினப்பத்திரிக்கையில் புகைப்படம் எடுப்பவராக வருகிறார் ஜீவா. பல வீர தீர செயல் செய்து படம் எடுப்பவராக வருகிறார். கொடுக்கப்பட்ட   பத்திரதிர்க்கேற்ப நடிப்பை வழங்கியிருக்கார். இளம் அரசியல்வாதியாக வரும் அஜ்மல் அசத்தலா நடிச்சி இருக்கார். கதாநாயகனுக்கு சமமான பாத்திரம்,
பாடல் காட்சிகள் தவிர்த்து.
ராதா மகள் கார்த்திகாவிற்கு தமிழில் நல்ல அறிமுகம். பொண்ணு  நல்லா
நெடுநெடுவென வளர்த்தியா இருக்கு. இந்த அம்மணியின் தெலுங்கு
அறிமுகமான ஜோஷில்  எனக்கு பிடிக்கவில்லை, ஆனால இந்த படத்தில் மிக அழகா இருக்காங்க,  நன்றாக நடிக்கவும் செஞ்சிருக்காங்க. சரோவாக
வரும் பியா செம துள்ளலான கலக்கல் பாத்திரம். சிறிது நேரங்களே
வந்தாலும் பிரகாஷ்ராஜ் மற்றும் கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ் ரெண்டு பேரும்
பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அனுபவம் என்றால் என்ன என்பதை இவங்க ரெண்டு பேர் நடிப்பை  பார்த்தால் நிச்சயம் புரியும். மற்றபடி, போஸ் வெங்கட், ஜெகன், சோனா, சிறகுகள்(அஜ்மல்லின் அரசியல் இயக்கம்) நண்பர்கள், தின அஞ்சல் பத்திரிக்கை  அலுவலர்கள் எல்லாரயும் மிக  நன்றாக நடிக்க வச்சி இருக்கார் இயக்குனர். நிறைய புதுமுகங்கள் சின்ன சின்ன வேடங்கள்  என்றாலும் மிக திறம்பட கையாண்டுள்ளார் இயக்குனர்.
ஹாரிஸின் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்தான்.
குவியமில்லா மற்றும் நெற்றிப்பொட்டில் இன்னும் மனதை விட்டு போக
மறுக்கிறது...எல்லா பாடல்களும் அருமை. படத்தை பாருங்கள், பாடல்கள் எடுத்த விதம் இன்னும் ஒரு படி மேல ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர்
ரிச்சர்ட் எம் நாதன், KV ஆனந்தின் கண்ணாக மிக நேர்த்தியாக உழைத்து
இருக்கார். இவர் ஏற்கனவே அங்காடி தெரு, பாணா காத்தாடி செஞ்சி இருந்தாலும் இந்த படத்தில் இவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சி உருவாக்கத்தில்  இறுதிக்காட்சியில் வரும் சண்டை மிக துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. கலை இயக்குனர் கிரண் நன்றாக செய்துள்ளார். சின்ன சின்ன காட்சிகளுக்கும் டீடைலிங்  அற்புதம்.  அன்டனி எப்பவும் போல அசத்தல், அக நக பாடல் மற்றும் கல கல பாடல்கள் அழகான எடிட்டிங், எவ்வளவு கட்டிங், எத்தனை பிரேம்ஸ்...
சுபெர்ப்.
கதை, திரைக்கதை KV ஆனந்த் மற்றும் சுபா. வசனங்கள் சுபா, நிறைய 
இடங்களில் பத்திரிக்கை உலகத்தின் நுண்ணரசியலை வசனங்களில் 
வெளிப்படுத்தி உள்ளனர். படத்தில் ஒரு இடத்தில், முதல்வராக வரும் 
பிரகாஷ்ராஜ், பத்திரிக்கை ஆளை பார்த்து பேசும் வசனம் இப்படி போகிறது. "நான் மட்டுமா இலவசம் குடுக்கிறேன், உன் வியாபாரம் ஓட  நீ சோப்பு, 
சீப்பு, ஷாம்பு குடுக்கலியா?". சமகால  அரசியல்,  ஓட்டுக்கு காசு, நடிகர்கள் 
பிரச்சாரம் எல்லாம் உண்டு படத்தில். சோனா ஒரு இடத்தில் பிரச்சார 
மேடையில் ஒட்டு கேட்க்கும் போது ஒரு வசனம் வரும் பாருங்க..  ரொம்ப  ரொம்ப 10  மச். நமிதா பேசும் மச்சான்ஸ் தமிழும்  படத்தில்  பகடி செய்யப்பட்டுள்ளது.  ஒரு பத்திரிக்கை அலுவலகம் எப்படி இயங்குகிறது என்பதை மிக அழாகாக காட்டப்பட்டுள்ளது, ஆனால்
நிகழ்கால பத்திரிக்கை உலகம், அதாவது கணினி, இன்டர்நெட், Facebook  கால யுகம்.
KV Ananth
ஒவ்வொரு காட்சியும் படத்தில் அவ்வளவு அழகு. இயக்குனர்
KV ஆனந்திற்கு சிறப்பு வாழ்த்துக்கள். நிறைய உழைத்து இருப்பார் போல...
ஒரு ஜனரஞ்சக  படத்தில் இத்தனை உழைப்பு அருமை. பாடல் காட்சியில் வரும் இடங்கள் எங்கும் பார்த்திராதது. அனால் இயக்குனரின் முந்தைய படமான அயன் கூட இதை ஒப்பிட கூடாது. அது வேறு களம். இது முற்றிலும் வேறு களம். படத்தில் குறைகளும் சில உண்டு...
வெண்பனியே பாடல் துவங்கும் இடம், இரண்டாம் பாதியில் வரும் தொய்வு, சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், அனால் இவை அனைத்தும் மிக சொற்பமான குறைகளே.
கோ - A visual treat and definitely one time watch on theater only.
.

6 comments:

Anonymous said...

//எனக்கு எப்பவுமே ஒரு படம் பார்ப்பது என்றால் துவக்கத்திலிருந்து ஒரே ஒரு சின்ன காட்சிக்கூட தவற விடாம பார்த்தாத்தான் படம் பார்த்த பூரண திருப்தி கிடைக்கும்//

நீங்க நம்ம கட்சி. நண்பர்களுடன் போகும்போது ஒவ்வொரு முறையும் யாரேனும் ஒருவர் லேட்டாக வந்து வெறுப்பேற்றுவார்.

Unknown said...

Movie is Nice.
Your review is as usual excellent
I think some other actor can do much better than ajmal particularly in climax scenes.
The one can character in siragugal group is always doing some different things. (The one who ignite the character after ajmal won in the election)Why?

கத்தார் சீனு said...

@ சிவகுமார்
நன்றி...நீங்க சொல்றது முற்றிலும் சரி...நிறைய நாள் அனாவசியமா டிக்கெட்ட வச்சிக்கிட்டு வெளியில காத்திருக்கணும், நண்பர்களின் வருகைக்காக...(படம் போட்டு இருப்பாங்களேன்னு டென்சன் வேற!!!)

@லக்ஷ்மி
சில இடங்களில் அஜ்மல் நல்லா நடிச்சி இருக்கலாம்,but improvistion scope is there for all.
நீ சொன்ன அதே மாதிரி நிறைய காட்சிகள் படத்தில் உண்டு...

கானகம் said...

நல்லா இருக்கு விமர்சனம். படத்த பாத்துறவேண்டியதுதான்.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விமர்சனம்.

கத்தார் சீனு said...

@ கானகம்
மிக்க நன்றி, படம் அங்க வந்திருக்கா?

@ அக்பர்
மிக்க நன்றி