Sunday, April 24, 2011

கைபேசியும் கவனமும் !!!

தொலைதொடர்பின் விஞ்ஞான உச்சத்தில், நாம் இருக்கும் இந்த காலக்கட்டத்தில், கைபேசி இல்லாது இருத்தல் என்பது மிகக்கடினமான 
ஒன்றுதான். ஆனால் நாம் வாகனம் ஓட்டும் பொழுது கைபேசி
பேசுவது  சரியா?  என்று யோசித்து பார்க்க வேண்டும். கீழே இருக்கும் காணொளியை பாருங்கள்....
 

என்ன காணொளியை பார்த்தாகி விட்டதா??? கண நேர கவனச்சிதறல் தான், ஆனால் அந்த சிறிது நேரத்தால் விளையும் விளைவுகள் 
அதி பயங்கரமானவை. வாகனத்தை ஓட்டிக்கொண்டே அந்த பெண் யாருக்கோ SMS  செய்கிறாள். அந்த சிறிய நேர இடைவெளியில் ஏற்படும் விபத்தினால் அந்தப்பெண் உடன் வரும் அனைவரும் இறக்கின்றனர், அவளுக்கும் மிக பலத்த காயம். இதாவது பரவாயில்லை, கூட வந்தவர்கள் இந்த பெண்ணின் அஜாக்கிரதையால் விபத்துக்குள்ளாகின்றனர்,
ஆனால் எந்த தவறும் செய்யாது அவர் பாதையில் செல்லும் எதிர் 
வண்டிக்காரர் இதனால்  மரணமடைகிறார், தன் இரு பிஞ்சி குழந்தைகளை அனாதையை விடுத்து. இது எந்த விதத்திலும் நியாயமாகாது. கொடுமையின் உச்சம்.

நாம் செய்யும் தவறு நம்மை, நம் கூட வருபவர்கள் மட்டுமில்லாது, எதிரே வருபவர்கள், மற்றும் அவ்வழியே அவசரமாக பரீட்சைக்கு, வேலைக்கு, என இன்னபிற முக்கிய காரணமாக செல்பவர்கள்  என அனைத்து தரப்பினரையும் கண்டிப்பாக பாதிக்கின்றது. இதுவும் ஒரு வகையில் பட்டர்பிளை எபக்ட் தான். யாரோ எங்கோ வாகனம் ஓட்டிக்கொண்டே கைபேசியில் பேசுவதால்  ஏற்படும் கவனசிதறலினால் 
உண்டாகும் விபத்தானது  உருவாக்கும் தாக்கங்கள் மிக கொடியவையாக இருக்கும் பட்சத்தில், நாம் அவ்வளவு முக்கியமாக கைபேசியில் பேசித்தான் அல்லது SMS  அனுப்பித்தான் ஆகணுமா??  அவ்வளவு முக்கியம் / அவசரம் / அவசியம் என இருக்கும் பட்சத்தில் வண்டியை ஓரங்கட்டிவிட்டு கதையுங்கள் காது கிழியும் வரை, யாரும் தடுக்கப்போவதில்லை.
ஆகையால் நண்பர்களே, தயவு செய்து வாகனம் ஓட்டும் பொழுது கைபேசி பயன்படுத்தாதீர் !!! இதனால் ஏற்படும் விளைவுகளை ஒரு கணம் யோசியுங்கள் அல்லது மேலே கண்ட காணொளியில்  வரும் பிஞ்சு முகத்தை ஒரு கணம் நினைத்து பாருங்கள், நீங்களும் கைபேசியை வாகனம் ஓட்டும்பொழுது பயன்படுத்த மாட்டீர் !!! நாம் எதிர்பார்க்கும் மாற்றம் என்பது நம்மில் முதலில் நிகழ வேண்டும் என் நம்புபவன் நான், ஆகையால் தான் இந்த பழக்கத்தை நான் முதலில் நிறுத்தி விட்டேன். நீங்களும் வாகனம் ஓட்டும் பொழுது கைபேசி பயன்பாட்டை 
நிறுத்துவீர்களா?
.

6 comments:

Anonymous said...

காதில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு ரயில்வே கிராசிங்கில் உயிரை விடுபவர்களும் அதிகம்.

Ahamed irshad said...

க‌ண்டிப்பா.. தேவையான‌ ப‌திவு.. ஆனாலும் திருந்துவாய்ங்க‌..ம்ஹீம்..

Thani said...

முக்கியமான பதிவு.. எல்லோரும் கண்டிப்பா செய்யவேண்டியது.. எங்க..இவனுக எல்லாம் நடந்ததுக்கு அப்புறம் திருந்துற ஜாதி மச்சி..
நான் செய்யறேன்.. எல்லாரும் செஞ்சா நல்லாத்தான் இருக்கும்..

கத்தார் சீனு said...

@ ! சிவகுமார் !
மிக்க நன்றி !!!

@ அஹமது இர்ஷாத்
மிக்க நன்றி !!!

@ தணி
மாற்றம் என்பது நம்மில் தொடங்கி எல்லாரோடும் பரவட்டும் !!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தற்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை...

தற்போதைக்கு தேவையான பதிவு..
வாழ்த்துக்கள்..

சுதாகர் said...

சீனு, விமர்சனம் நல்ல இருக்கு...