சின்ன வயதில் நான் வளர்ந்த காலத்தில் அதிகம் பார்த்த கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் அண்ணா அவர்கள் பேர் சொல்லியேதான் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல்
செய் - தார்கள், கின்றார்கள், வார்கள். தமிழக அரசியலில் அண்ணா அவர்கள் ஏற்படுத்திய மாற்றம் வியக்கத்தக்கது, 1967ல் அண்ணா அவர்களால் ஆட்சி இழந்த தேசிய கட்சியான காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை, அண்ணா அவர்கள் போட்ட அஸ்திவாரம் அப்படி. அண்ணாவின் மறைவிற்கு பிறகு, இன்று வரை அவர் தோற்றுவித்த தி.மு.க மற்றும் அவர் பெயரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. மட்டும்தான் தமிழகத்தில் ஆட்சி செய்கின்றனர்.
புத்தகம் அண்ணா மற்றும் பெரியார் இருவரிடையே ஏற்பட்ட முதல் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது, தொடர்ந்து அண்ணா அவர்களின் பிறப்பு, பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, அரசியல், பேச்சு மற்றும் எழுத்து பணி பிறகு அரசியல் களம் என விரிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த களத்தில் இருந்த அரசியல் கட்சிகள், பெரியாரிடம் அண்ணா கொண்ட ஈடுபாடு, ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்கள், பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து தனி கட்சி தொடங்கியது, பத்திரிக்கைகள் மற்றும் நாடகங்கள் நடத்தியது, தனி திராவிட நாடு கோரிக்கை, தி.மு.க தேர்தலை சந்தித்த விதம், காங்கிரசை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது என நிறைய பல நிகழ்வுகளின் கோர்வையாக உள்ளது.
பெரியாரிடம் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கடைசி வரை அண்ணா பெரியாரை எந்த சமயத்திலும் விட்டு கொடுத்ததே இல்லை, பெரியார் அண்ணாவை இகழ்ந்து பேசியும் கூட. புத்தகத்தில் அண்ணா அவர்களின் குறைகள் பற்றி எதுவும் பெரிசா இல்லை...சும்மா கண்துடைப்புக்கு கொஞ்சம் இருக்கு.
அண்ணா வாழ்க்கை பற்றிய இந்த புத்தகத்தில், இன்றைய முதல்வர் பெயர் ஒரு சில இடத்தில் வருகிறது...எங்கோ ஒரு ஓரத்தில் இருந்தவர், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல பேரை காலி செய்து விட்டு முதல்வர் ஆகி விட்டார், இன்று வரை யாரையும் அவரை மீறி வளர விடாம பார்த்துகிட்டு இருக்கார். எதற்கெடுத்தாலும் அண்ணா பேர் சொல்லும் திராவிட கட்சிகள் அண்ணா செய்த மற்றும் செய்ய நினைத்த நல்லாட்சியில் கொஞ்சம் கூட இது நாள் வரை செய்யவில்லை, அப்புறம் என்ன அண்ணா நாமம் வாழ்க, அண்ணா மூன்றெழுத்து, தி.மு.க மூன்றெழுத்துன்னு கதைய விட்டுகிட்டு...!
புத்தகம்
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 184
விலை : 90
வருடம் : 2007
https://www.nhm.in/shop/978-81-8368-006-6.html

கிழக்கு பதிப்பகத்தின் வலைத்தளத்தில் இந்த புத்தகத்தை பற்றி எழுதி இருப்பதை போல், கடல் போன்ற அண்ணாவின் வாழ்கை வரலாற்றை விழுங்கிய ஒரு குடம் தான் இந்த புத்தகம். இன்னும் நிறைய எழுதிருக்கலாமோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.எனக்கு புத்தகம் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. எனக்கு வாழ்கை வரலாறுகள் படிக்க ரொம்ப பிடிக்கும், பொதுவாக எல்லாருக்கும் அப்படித்தானே.(அடுத்தவங்க கதையென்றால் நம்மதான் வாய பொளந்து கேட்டுகிட்டு இருப்போமே !!!)
.