****************************************************************************************************
சமீபத்தில் நான் ரொம்ப ரசித்து பார்த்த வீடியோ. ஏற்கனவே ஒரு பிரபல பதிவர் இந்த வீடியோவை ரொம்ப நாள் முந்தி அவர் பதிவில் வெளியிட்டு இருந்தாலும், என்னோட வட்ட்டதில் உள்ள நண்பர்களுக்காக ....இதோ அந்த காட்சி....
கடைசியா, ரஜினி அவர்கள் பேசி முடிக்கும் போது, "Thank you very much Aishwaryaji" னு சொல்லும் போது...எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது.... Simplicity, Thy name is Rajinikanth.
****************************************************************************************************
எங்க கம்பெனில, போன மாதம் ஒரு ISO Refresher கோர்ஸ் போயிருந்தேன். கோர்ஸ் எடுத்தவர் ரொம்ப அழகா, தெளிவா எல்லாரையும் ஈடுபடுத்தி நடத்தி கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில், தவறுகள் பத்தி பேசுகையில் என்னை பார்த்து கேட்டார், நீ எவ்வளவு சதவிகிதம் உன் வேலைல தப்பு செய்வே என்று கேட்டார்?. நான் கொஞ்சம் உணர்ச்சி பெருக்கில் ஒரு 2 சதவிகிதம்னு சொன்னேன். இது உங்க கம்பெனிக்கு அதிகம்னு சொன்னார். நான் 2 சதவிகிதம்தானே என்றேன். அவர் உடனே, உங்க கம்பெனில இருக்குற 2000 பேரும் 2 சதவிகிதம் தப்பு பண்ணா?? தப்பா என்றார். இவரு எப்படா அந்நியன் படம் பார்த்தார்னு நினைச்சேன். சொல்ல வரது என்னன்னா, அவர் இந்த மாதிரி கேட்ட உடனே வாத்தியார் சுஜாதா ஞாபகம் வந்துடுச்சி. அந்நியன் படத்தோட மொத்த கருத்துமே இந்த கீழ்கண்ட வரிகளில் அடங்கி விடுகின்றது. அதுதாங்க சுஜாதா.
அந்நியன் : "5 பைசா திருடினா தப்பா ?"
சொக்கன் : "தப்பா தெரியலை சார் !"
அந்நியன் : "5 கோடி பேர் 5 பைசா திருடினா தப்பா ??"
சொக்கன் : "தப்பு மாதிரி தெரியுது சார் !!"
அந்நியன் : "5 கோடி பேர் 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா ???"
சொக்கன் : "பெரிய தப்பு சார் !!!"
இப்ப சமீபத்தில் கூட ஒரே ஒரு துரோகம் என்ற வாத்தியார் எழுதுன புத்தகம் படித்தேன். கதை முழுக்க இருவரின் பார்வையில் மாறி மாறி அத்தியாயங்கள் எழுதப்பட்டு இருக்கும். (விருமாண்டி திரைக்கதை பாணி, இந்த கதை எப்பவோ எண்பதுகளில் எழுதப்பட்டது). காலத்தில் எவ்வளவு முந்தி இருந்தார் வாத்தியார் சுஜாதா?? ஆகையால் தான் இறப்பிலும் முந்தி விட்டார் போல!!! வாத்தியார் இன்னும் நம்மோட இருந்திருந்தால் எந்திரன் இரண்டாம் பாகம் கண்டிப்பா இப்ப இருக்கறத விட நல்லாவே வந்து இருக்கும். கடவுள் யார் என்று எந்திரன் படத்தில் ரோபோவை பார்த்து கேட்கப்படும் கேள்விக்கு வரும் பதில் அட்டகாசம். எத்தனை முறை வேண்டும் என்றாலும் சொல்வேன், எல்லா பதிவிலும் எழுதுவேன்... "We Miss U வாத்தியாரே...!!!