Thursday, April 9, 2009

ஈராக் : சதாம் + சதாம் -


இந்த புத்தகத்தை பா.ராகவன் மிக அழகா, எளிமையான நடையில் எழுதி இருக்கார். ஈராக்கை பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். புத்தகம் படித்த பிறகு ஒரு வாரமா எனக்கு சதாம் பத்தின நினைப்பு தான் ஓடிகிட்டு இருக்கு. பா.ராகவன் சொல்றா மாதிரி அவரை ஹீரோவாகவும் பார்க்க முடியாது!!! வில்லனாகவும் பார்க்க முடியாது!!! சதாம் நிஜமாகவே ஒரு சகாப்தம் தான். அமெரிக்க என்ற நாசக்கார நாடால் வளர்க்கப்பட்டு, பின் அதே நாசக்கார நாடால் அழிக்கவும் பட்டவர் தான் சதாம்.

சதாமை மாதிரி ஒரு சர்வாதிகாரி பார்ப்பது மிக கடினம். அனால் ஈராக்குக்கு அவர் மாதிரி ஒரு தலைவர் கிடைப்பதும் மிக மிக கடினம். எத்தனை போர்கள், எத்தனை உயிர் படுகொலைகள்......நினைத்தாலே நெஞ்சு துடிக்கும். சதாமை எந்த எல்லைக்குள்ளும் வரையறுக்க முடியவே முடியாது !!! யாராலையும் புரிந்து கொள்ள முடியாத இரும்பு மனிதர் அவர். மொத்தத்தில் அவர், தலை சிறந்த அரசியல்வாதி, ராஜதந்திரி, நவீன ஈராக்கின் சிற்பி, also சர்வாதிகாரி மற்றும் கொலைகாரர்.

இந்த புத்தகத்தை படித்ததில் இருந்து, சதாம் நல்லவரா, கெட்டவரா (நாயகன் ஸ்டைலில்) என்ற எண்ணம் என் மனதில் ஓடி கொண்டே இருக்கிறது. Open mind கொண்டு படிக்கும் எவருக்கும் இந்த எண்ணம் வரலாம் என்றே நான் நினைக்கிறேன்.

வரலாற்றில் நாட்டம் இருப்பவர்கள் இந்த புத்தகத்தை மிகவும் விரும்புவர்கள். என்னனை போன்ற வளைகுடா வாசிகள் கண்டிப்பாக ரசித்து படிக்க முடியும். மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், என்னை போன்ற ஏற்கனவே அமெரிக்கா பிடிக்காதவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் இன்னும் அமெரிக்கா வெறுப்பு அதிகமாகும்.

நிறைய புத்தகங்கள், வலைத்தளங்கள் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்து இந்த புத்தகத்தை எழுதிய பா.ராகவன் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

2 comments:

கானகம் said...

சீனு, நல்ல ஆரம்பம். சதாம்ஹுசேன் மட்டுமல்ல, பல ராஜாக்கள் மற்றும் சுல்தான்களின் வாழ்க்க்கையும் இப்படி வளர்த்து விட்ட்டவர்களாலோ அல்லது உறவினர்களாலோசத்தமின்றி முடிந்துவிடுகிறது..ஆனால் சதாமின் வாழ்ழ்க்கை அவர் எதிர்பாராதபடிக்கு முடிந்துபோனது..

அவரது இறுதிக்காலத்தில் அவரது தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கொடுத்த பேட்டிகள் இங்கே...

http://www.welovetheiraqiinformationminister.com/#quotes

கத்தார் சீனு said...

மிக்க நன்றி ஜெயகுமார் அவர்களே !!!
நீங்கள் கொடுத்த சுட்டி மிகவும் அருமை !!!