Thursday, April 9, 2009

இந்திய அணியின் நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்










நடந்து முடிந்த நியூஸிலாந்து சுற்றுபயணத்தில் நம்ம இந்திய அணி வீரர்கள் அசத்திட்டாங்க !!! போன தடவை வந்த அணிக்கும் இந்த அணிக்கும் எவ்வளவு வித்தியாசம்னு நியூஸிலாந்து பார்வையாளர்கள் திகைத்து விட்டனர்.

41 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த டெஸ்ட் தொடர் வெற்றி...இந்திய அணிக்கு மிகுந்த சவால்களை கொடுக்கும் நியூஸிலாந்து மைதானங்களில் கிடைத்த வெற்றி....கண்டிப்பாக இந்திய அணி கலக்குகிறது தான். (Indians on a Roll)

டெஸ்ட் தொடரில் மொத்தம் 15 நாட்களில் நியூஸிலாந்து ஆதிக்கம் இரண்டு நாட்கள் தான். 1-0 என்பதை விட 2-0 என்பதுதான் சரியான முடிவு. என்ன செய்ய?? நம்ம ஜெய்க்கும் போதும் தான் மழை வந்து தொலைக்குது.

இந்த மாதிரி இந்தியா ஜெய்க்கும் நேரத்தில் ஒரு சில session la , சில தவறுகள் செய்யும் சமயத்தில், இந்த அருண்லால் மாதிரி மொக்க பசங்க உலக பேச்சு பேசறாங்க....அத கேட்கும் போது காதில மட்டும் புகை வரல......எல்லா இடமும் எரியுது !!! இந்த மாதிரி வெண்ணைங்க என்னத்த கிழிச்சிட்டு இந்த பேச்சு பேசறான்னு தெரியலை. சோனி டிவி மாதிரி ஆளுங்களுக்கு வேற நல்ல ஆளே கிடைக்கலையா?? நாரயணா இந்த கொசுவெல்லாம் மருந்து அடிச்சி கொன்னா தான் என்ன ??

தோணி நல்ல அணி தலைவர் தான்....நல்லா வழி நடத்துறார். அனால் டெஸ்ட் வெற்றி சீனியர்ச்க்கு தரும் நல்ல பரிசாக இருக்கணும்னு சொன்னது கொஞ்சம் ஓவர் தான். நான் ஏன் இத சொல்ல வரேன்னா, இந்த தொடரில் கம்பீற்கு அடுத்ததா அதிக ரன் குவித்தவர்கள் சச்சின், டிராவிட் மற்றும் லக்ஷ்மன் மூணு பேர் தான். அப்புறம் என்ன சீனியார்ச்கு பரிசு அது இதுனு ஓவர் சீன் போடறது !!! என்னவோ சீனியர்ஸ் யாரும் ஆடாத மாதிரி, ஜுனியர்ஸ் மட்டும் தான் ஆடுற மாதிரி. இப்படி எதாவது லூசுதனமா பேசாம நம்ம அணி தொடர்ந்து வெற்றி பெற்றா நல்லது தான். ஏற்கனவே எல்லா பய புள்ளய்களும் டாப் - 3 ல ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா கூட நம்மளையும் சேர்த்து சந்தோஷம் தான்.

இந்த தினேஷ் கார்த்திக் மூதி யா என்ன தான் பண்ணருதுனே தெரியலை. போன போகுது... நம்ம பையன் ரஞ்சி ல நல்லா விளையடுதேனு, ஸ்ரீகாந்த் அண்ணன் நியூஸிலாந்து அனுப்பி வச்சா, கிடைச்ச ஒரு வாய்ப்பையும் விட்டுட்டான். ரொம்ப கஷ்டம் டா நாராயணா!!!

No comments: