உன்னை போல் ஒருவன் - இது தாங்க தலைவர் கமலோட அடுத்த பட தலைப்பு. கமல் படம் என்ற உடன் எத்தனை தகவல்கள், செய்திகள், (90% தவறான செய்திகள் தான்). ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் இது A Wednesday என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்று. கடந்த 4-5 மாதங்களில் UTV vs கமல் கதை உரிமை தொடர்பாக தகராறு, அஜித் நடிக்கிறார், தலைவன் இருக்கின்றான், இளையராஜா இசை, AR ரஹ்மான் இசை அது இது என்ற ஏகப்பட்ட பொய்யான தகவல்கள். தலைவர் படத்தை பொறுத்த வரை, தலைவரே சொல்றது தான் உண்மை எப்போதும்.
நான் ஏற்கனவே A Wednesday படத்தை ஹிந்தியில் பார்த்தேன். எனக்கு அந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. குறிப்பாக நசீருதின் ஷா நடிப்பு மிகவும் அருமை. ரொம்ப casual ஆன ஒரு கதாபாத்திரம். வசனங்கள் மிகவும் கூர்மையாக இருந்தது, குறிப்பாக கடைசி கட்சிகளில். அனுபம் கெர் கதாபாத்திரமும் மிகவும் அழகான ஒன்று. இந்த கதை மும்பை நகரத்திற்கு 100% பொருந்த கூடிய ஒன்று. இதை தலைவர் எப்படி சென்னைக்கு மற்றும் ஹைதராபாத்துக்கு பொறுத்த போகிறார் என்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.
என்னை போன்ற கமல் பக்தர்களுக்கு already heart beat got increased. இசை அறிமுகம் ஸ்ருதி ஹாசன், teaser trailer இசை கொஞ்சம் மாறுபட்டதாக, கேட்பதற்கு புதிதாக இருந்தது. படத்தில் பாடல்கள் இல்லை...பட விளம்பரத்திற்காக ஒரு பாடல் இடம் பெற கூடும், மற்றும் பின்னணி இசை சேர்ப்பு தான் ஸ்ருதியின் முக்கிய பணி. தலைவரை போல் தான் சார்ந்த துறையில் கலக்குவார் என்று எதிர் பார்ப்போம்.
அனுபம் கெர் கதாபத்திரத்தில், தமிழில் மோகன்லால், தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கின்றனர். சந்தகமே வேண்டாம், மோகன்லால் மிகவும் திறமையாக நடிப்பார், அனால் வெங்கடேஷ் எந்த அளவிற்கு நடிப்பார் என்று தெரியவில்லை. இந்த படத்தின் இயக்குனர் எப்போதும் போல் கமல் படங்களில் பேருக்கு ஒரு ஆள். இந்த தடவை தசாவதாரத்தில் வந்த ஷிட் ராம்.....மன்னிக்கவும்...சாய் ராம்.(சக்ரி). இவர் ஏற்கனவே சலங்கை ஒலி படத்தில் சின்ன பையனாக தோன்றியவர். ஓட்டை கேமரா வைத்து கொண்டு சலங்கை ஒலியில் தலைவரை போட்டோ எடுப்பவராக நடித்து இருப்பார்.
தலைவர் கமல் வயதிற்கு மிகவும் பொருந்த கூடிய கதாபாத்திரம். வசனங்கள் கமலே எழுதினால் நன்றாக இருக்கும். "உன்னை போல் ஒருவன்" போன்ற படங்கள் மக்களிடம் கண்டிப்பாக சேர வேண்டிய படம் மற்றும் கருத்துள்ள படம். Let us hope the movie comes ASAP and win people's hearts. தலைவருக்கு இந்த கதையை தேர்வு செய்ததிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

4 comments:
கமல்ஹாசர் கை வச்சா...அது ராங்கா போனதில்லை....
அட நீங்களும் நம்ம ஆளா..?
//கமல்ஹாசர் //
காதலிக்க நேரமில்லையில் பாலையா முத்துராமனிடம் ”உங்க மகர்” என சொல்வதுபோல இருக்கிறது.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்...
:-)
படம் பார்த்து விட்டேன். அருமை. படத்தில் பாடல்கள் இல்லை.
வசனங்கள் அருமையிலும் அருமை. அனைவரும் பார்க்கலாம்..
Post a Comment