Saturday, July 3, 2010

I Hate Luv Storys


 
போன தடவை கரண் ஜோகர் தயாரிப்பில் "Wake Up Sid" படம் பார்த்தேன். படம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு இந்த மாதிரி "Feel Good" & "Soft Movies" ரொம்பவே பிடிக்கும். மறுபடியும் KJ தயாரிப்பு தான் "I Hate Luv Storys", அதுவும் இல்லாம சோனம் கபூர் சமீப காலங்களில் என்னை கவர்ந்த நடிகை மற்றும் அழகு பிசாசு. படத்தின் promos நல்லா இருந்ததால இந்த வாரக்கடைசியில படம் பார்த்தாச்சு. 
 பக்கம் பக்கமா படத்த பத்தி சொல்றத விட சுருக்கமா சொல்லிடறேன்.

  •  சோனம் கபூர்க்காகவே கண்டிப்பா படத்தை பார்க்கலாம். அம்மணி அம்புட்டு அழகு. சில பேர் இந்த பொண்ணு கிட்ட ஏதோ missingனு சொல்றாங்க. எனக்கு அப்படி எதுவுமே தெரியல. ஓவ்வொரு காலகட்டத்தில நமக்கு சில பெண்களை ரொம்ப பிடிக்கும். இப்போதைக்கு சோனம் செம HOT மச்சி !!! படத்தில அவ்ளோ அழகா இருக்குது....நல்லாவும் நடிக்குது அம்மணி. 

  • இம்ரான்கான் "ஜானே து" படத்திற்கு அப்புறம் ஒரு சூப்பரான ரோல். ரொம்ப நிறைவா நடிச்சி இருக்கார். சில இடங்களில் அவர் காட்டும் சின்ன சின்ன முகபாவனைகள் cute. ரன்பீர் கபூற்கு அப்புறம் ஒரு நல்ல யூத் ஹீரோ ரெடி.

  • ஒளிப்பதிவாளர் அசத்தி இருக்கார். நல்ல bright lightல படத்தை அனுபவச்சி எடுத்து இருக்கார்.

  •  வசனங்கள் நல்லா இருக்கு. சின்ன சின்ன one-liners சூபர்ப்.

  •  சின்ன சின்ன கதாபாத்திரங்கள் எல்லாம் அருமை. அந்த இயக்குனர், ஹீரோ, இம்ரான் நண்பன்(sprite ad la வர குண்டு ஆளு), அந்த ஹாட் பிரேசில் model, இம்ரான் அம்மா, சோனம் அம்மா எல்லாரும் அவங்க பாத்திரத்தை நிறைவா செஞ்சி இருக்காங்க.

  • இசை ok. Not Good, Not Bad.

  •  திரைக்கதை தான் பெரிய சொதப்பல், முக்கியமா இரண்டாம் பகுதியில் தொய்வு நல்லாவே தெரியுது.

  • சோனம் childhood friend மற்றும் fiance யா வரும் அந்த ஆள் கதாபாத்திரம் சொதப்பல்...ரொம்ப பரிதாபமா இருக்கு....
 இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் படம் படா ஹிட் ஆகி இருக்கும். ஆனாலும் சோனம் & இம்ரானுக்காக கண்டிப்பா படம் பார்க்கலாம். They just light up the screen by thier presence.

5 comments:

எழில் said...

இது நம்ம ஏரியா !!!

சீனு...
இன்னைக்கு தான் முதல் தடவையா உன்னுடைய பிளாக் ஸ்பாட்டை படிச்சேன்......
உன்னுடைய எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.......
சீனு இது ரொம்ப நல்ல முயற்சி!
தொடர்ந்து இன்னும் நிறைய எழுதணும்.....

என்னுடைய வாழ்த்துக்கள்......

எழில்.

கத்தார் சீனு said...

@ எழில்
மிக்க நன்றி எழில்....
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

விமர்சனம் அருமை

Prasanna said...

Titbits is nice :)

கத்தார் சீனு said...

@ உலவு
@ பிரசன்னா
நன்றிகள்.....