Sunday, April 8, 2012

உன் எண்ணத்தீண்டாமை !!!

நண்பனே,

குருதியைப்போலத்தான்....
உனது எண்ணங்கள்
என்னுள் பாய்கின்றது....
மூச்சின் கடைசி சுவாசம்
எனைவிட்டு பிரிந்தாலும்
உனது நினைவுகள்
எனைவிட்டு பிரியாது...

உயிரின் கடைசி
நொடி வரை உன்
நினைவுகள் என்றும்
எந்தன் உள்ளத்தின்
உள்ளுக்குள் ஓர்
அழியாச்சுடர் விளக்கே...
அழிக்க உனக்கோ
எனக்கோ யாதும்
துர் நிகழ்வில்லை...

சிறுசிறு இன்பங்கள்
எதிர்பார்க்கும் இப்பூவலகில்
உன் சிரிப்பைத்தவிர
நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை...
உன் மகிழ்ச்சியில்
பல பொழுதுகளை
தொலைத்தவன் நான்...

இன்று
எனக்கும் அறியாது
என்மேல் உனக்கு ஏன்
இத்தனை வன்மம்...
நான் உனக்கு
நினைத்தது யாவும்
நன்மையன்றே தவிரே
யாதும் தீதில்லை....

உன் கோபங்களை
எனக்கும் விளக்காது...
ஊருக்கும் சொல்லாது...
இன்று எனை மட்டும்
தனியாய் விடுத்து
சென்றது ஏனோ ???

உன்னுள் இருக்கும்
எண்ணங்கள் எனை
தீண்டாமல் செல்வது
நியாயமோ???
தீண்டாமை ஒரு பாவச்செயல்
என உனக்கு தெரியாதா???
உன் எண்ணத்தீண்டாமை
எனைக்கொல்லுதடா....

வேற்றுருவில் வந்தாலும்
வேறு பல சென்மம் எடுத்தாலும்
எனக்கு ஒரு பதில்
கூறி செல்லடா !!!
நான் செய்த பிழை
என்னதான் என எனக்கு
விளக்கிச்செல்லடா !!!
.

3 comments:

Anonymous said...

Oodal Kathali azhagu
Purithal natpil azhagu
Nanba, sogathilum melliya pungai unai ninaithal …
Searching reason is not a way to solve problem

Anyway nice lines……..

கத்தார் சீனு said...

வணக்கம் Anonymous

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ....

நான் கவிதை எழுதுவதெல்லாம் என் வாழ்வில் நடப்பவை மட்டும் அல்ல...

நான் பார்ப்பது, படிப்பது, கேள்விப்படுவது எல்லாம் சேர்ந்தது தான் ...

By the By, உங்கள் பெயரில் கருத்து சொன்னால் தான் என்ன???

கத்தார் சீனு said...

@ Anonymous

ஊடல் காதலில் அழகு...
புரிதல் நட்பில் அழகு....


அருமையான வரிகள்......