நந்தலாலா ???
எதேச்சையாய் இன்று வேலைக்கு செல்லும் நேரம், ரொம்ப நாள் கழித்து மீண்டும் நந்தலாலா படப் பாடல் கேட்டேன் !!! (நந்தலாலா பாடல் வெளியானப்ப கேட்டது!!!) எல்லா பாடல்களும் எப்போதும் போல ராஜாவின் ராஜாங்கமாக இருந்தது. "தாலாட்டு கேட்க நானும்" என்ற பாடலை மட்டும் பல முறை கேட்டேன். எத்தனை முறை கேட்டாலும் மனதை விட்டு நீங்கவே இல்லை. இந்த பாடல் ராஜாவின் குரலில் கேட்கையில், பழைய பல நினைவுகள் மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்து விட்டது.
"நானாக நானில்லை தாயே", "பொண்ண போல ஆத்தா" , போன்ற ராஜாவின் பல மிக சிறந்த பாடல்கள் போல இதுவும் மிக சிறப்பாய் இருக்கிறது. ராஜாவின் குரலில் தான் எத்தனை வசீகரம்? இந்த மாதிரி ராஜாவின் ராஜா கீதங்கள் கேட்கையில் ஒன்று மட்டும் மிக மிக தெளிவாய் தெரிகிறது ....
"Men May come and Men may go.
But i go on ...forever"
மேற்கண்ட Tennyson எழுதிய மிக சிறந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது !!! எத்தனை பேர் வந்தாலும், எத்தனை காலம் ஆனாலும், " ராஜா ராஜா தான் ".
நிற்க....ராகதேவனை பத்தி பேச ஆரம்பித்தால் பேசிகிட்டே இருக்கலாம்..நாம் நந்தலாலாவிற்கு வருவோம்.நானும் ஏன் இந்த படம் இன்னும் வரவில்லை என்று யோசிக்காத நாளே இல்லை எனலாம். என்னதான் ஆச்சுங்க இந்த படத்துக்கு??? மிஷ்கின், அவருடைய ஆகச்சிறந்த படைப்பாய் இந்த படத்தை தான் பல முறை சொல்லி இருக்கார். என்ன தான் நடக்குதுன்னே புரியல???? சாரு வேற இந்த படத்தை பத்தி ரொம்பவே சிலாகித்து எழுதி இருந்தார். அதுவும் ராஜா முதல் முறையாக படத்திற்கு தேவையான நல்ல இசை கொடுத்து இருப்பதாகவே வேற அவர் சொன்னார் !!! (இது சாரு அவர்களின் பார்வையில்). நமக்கெல்லாம் அன்னகிளியில் இருந்தே அவர் தேவுடு(Dhevudu - God) தான் !!!!
யோசித்து பர்ர்க்கையில் ஒன்றுமே புலப்பட வில்லை....அப்படி என்ன தாங்க இந்த படம் வெளியுடுவதில் பிரச்சினை?? மிஷ்கின், சாரு மாதிரி ஆட்களுக்கு படத்த போட்டு காட்டுவதை விட நல்ல விநியோகஸ்தர் அல்லது சினிமா மீது காதல் உள்ள வியாபாரி யாருக்காவது போட்டு காட்டி படம் வெளி வரும் வழியை பார்க்கலாம். படத்தின் விளம்பரங்களில் எல்லாம் ராஜாவின் பெயர் தான் முதலில்...அதுவும் படத்தின் trailer பார்க்கையில், இளையராஜாவுடன் ஒரு பயணம் என்று படா buid-up வேறு !!! ஐயங்கரன். "வில்லு, ஏகன்" மாதிரி படங்கள் வெளி இடுகையில் இந்த படம் ஏன் வெளியிட மாட்டேன்றங்க?? For sure content wise, அந்த படங்கள் விட நந்தலாலா நல்லாவே இருக்கும். சமீபத்தில் ஐயங்கரன் வெளியிட்ட அங்காடி தெரு வெற்றி படம் தான். பின் ஏன் நந்தலாலா விஷயத்தில் இத்தனை மெத்தனம். ராஜா அவர்கள் எப்பவும் போல மௌனமாவே இருக்கார், மிஷ்கின், அவர் ஒரு பக்கம் சேரனை வைத்து "யுத்தம் செய்" என்ற படம் எடுக்க போய்ட்டார்??
அப்புறம், யார்தான் தேரை இழுத்து தெருவுக்கு விடுவாங்க???
No comments:
Post a Comment