மன்மதன் அம்பு !!! தலைவர் அடுத்த பட அறிவிப்பு வந்தாச்சு !!!
ரொம்ப ரொம்ப மகிழ்சிச்சியா இருக்கு !!! எப்பவும் போலவே, தலைவர் படம்னாலே பல தகவல்கள்...உண்மைகள் சில...பொய்கள் பல...."யாவரும் கேளிர்"னு சொன்னங்க....அப்புறம் "காருண்யம்"னு சொன்னங்க !!! இசை - ஸ்ருதி, உதயநிதி நடிக்கறார்...எத்தனை தகவல்கள் இது மாதிரி ??
அதுதான் கமல்ஹாசர் !!! இனியும் பதிவுலக மற்றும் எழுத்துலக (தனித்தனியா சொல்லிட்டேனோ??) நண்பர்கள் மிக விறுவிறுப்பா எழுதி தள்ளுவாங்க(நானெல்லாம் ஒரு பதிவு போடுறேன் இல்ல...இப்படித்தான்..வேற எப்பூடீ?).
அதுதான் கமல்ஹாசர் !!! இனியும் பதிவுலக மற்றும் எழுத்துலக (தனித்தனியா சொல்லிட்டேனோ??) நண்பர்கள் மிக விறுவிறுப்பா எழுதி தள்ளுவாங்க(நானெல்லாம் ஒரு பதிவு போடுறேன் இல்ல...இப்படித்தான்..வேற எப்பூடீ?).
விஷயங்களா இல்லை எழுதுவதற்கு?
- தலைப்பு ஒரு மாதிரியா இருக்கு.
- இவருக்கு எதுக்கு திரிஷா ஜோடி??
- தமிழன் எப்படி இந்தியாவை விடுத்து வெளி நாடுகளில் படம் பிடிக்கலாம்?
- மாதவன் கதாபாத்திரம் சிறியதாக இருக்கும்....
- திரிஷாவின் திரை உலக வாழ்க்கை இனி முற்று பெரும்.
இந்த மாதிரி பல விஷயங்கள் படம் வெளி வரும் முன்பே விவாதிக்கபடும். படம் வெளி வந்த பிறகு, சொல்லவே தேவை இல்லை, அது இதை விட மிக பெரிய சுற்று வரும். இது மாதிரி விமர்சனங்கள், விவாதங்கள், பகடிகள், எள்ளி நகை ஆடுதல் எதுவுமே கமல்ஹாசர்க்கு புதியதே அல்ல. எப்பவும் போல மிக சிறந்த வண்ணங்களோடு வெளிப்படுவார் என அடித்து சொல்லலாம்.
உ.போ.ஒ, வந்த பிறகு, எப்பவும் போல தலைவர் எதுவும் சொல்லாம, அவர் வேலைய மட்டும் பார்த்துகிட்டே இருந்தார். என்ன தான் இவ்வளவு நாள் செய்து கொண்டு இருந்தார்??? "ஆயிரத்தில் ஒருவன்" trailer வெளியீட்டு விழாவின் பொது தலைவர் சொன்னார், "கதை, திரைக்கதை, Locations, நடிகர்கள், இன்ன பிற பெரிய மற்றும் சின்ன சின்ன இத்யாதி விஷயங்கள் எல்லாம் தயார் செய்து கொண்டு, அப்புறம் படம் எடுக்க போவதே சால சிறந்தது" என்றார். இதை தான் இவ்வளவு நாளா ம.அ படக்குழுவினர் செய்து கொண்டு இருந்தார்கள். கூடுதலா ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஒத்திகை("rehearsal" ) பார்த்து இருக்காங்க. இது தமிழ் சினிமாவுக்கு புதுசுன்னு கூட சொல்றாங்க. எனக்கு என்னவவோ அப்படி தோணலை, குழுவாக இல்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் தனியாக நிறைய நடிகர்கள் ஒத்திகை பார்ப்பார்கள் என்றே நான் நம்புகின்றேன்.(திரை உலக நண்பர்கள் விளங்கி சொன்னால் தான் தெரியும்)
நிற்க...விஷயத்திற்கு வருவோம் !!!
இயக்கம் - K.S.ரவிக்குமார், வெற்றி கூட்டணி தொடரும் என நம்பலாம். கமல்ஹாசர் கிட்ட இருந்து என்ன வாங்கணும் என இயக்குனருக்கு மிக நன்றாகவே தெரியும்.
ஒளிப்பதிவு - மனுஷ் நந்தன், ரவிச்சந்திரனிடம் பாடம் பயின்றவர். நிறைய எதிர்பார்க்கலாம்.
இசை - தேவி ஸ்ரீ பிரசாத், பெரிய களம் இருக்கும் பட்சத்தில் நிறைவாகவே செய்வார் என நம்பலாம்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் - கமல்ஹாசர் - எதுவுமே சொல்வதற்கு இல்லை. கமல்ஹாசர் கண்டிப்பாக அவருடைய ஆஸ்தான குழுவோடு விவாதம் முடித்த பிறகே எல்லாம் finalise ஆகி இருக்கும்.
திரிஷா ஜோடியாக தாரளமாக நடிக்கலாம். வி.தா.வ. யில் அம்மணிக்கு முகத்தில் அத்தனை முதிர்ச்சி தெரிந்தது. நம்புவோம், நடிப்பிலும் முதிர்ச்சி பெறுவார் என! அன்பே சிவம் போல மாதவனும் தனது மிக சிறந்த நடிப்பை வெளிப்படுதத்துவார் என நம்பலாம்.
தீபாவளி திருநாளன்று படம் வெளி வரலாம் என கூறப்படுகிறது, இந்த குழுவின் ஒத்திகை, திட்டமிடுதல் வெற்றி பெற்று, படம் மிக விரைவில் வரும் என எதிர்பார்ப்போம்.
டிஸ்கி : மிஷ்கின் கூட என்ன தான் நடந்தது??? நல்ல இயக்குனர். ஏன் என்றே புரியவில்லை? கமல்ஹாசர் கூட இது மாதிரி நிகழ்வுகள் தொன்று தொட்டே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த டிஸ்கிய விளக்கி யாராவது மூத்த பதிவர்கள் நல்ல பதிவா போட்டா நல்லாத்தான் இருக்கும்.
4 comments:
மன்மதன் அம்பு
ரொம்ப ரொம்ப மகிழ்சிச்சியா இருக்கு
@ Anonymous
நன்றி
//இயக்கம் - K.S.ரவிக்குமார், வெற்றி கூட்டணி தொடரும் என நம்பலாம். கமல்ஹாசர் கிட்ட இருந்து என்ன வாங்கணும் என இயக்குனருக்கு மிக நன்றாகவே தெரியும்.//
காதலிக்க நேரமில்லை பாலையா மாதிரி இருக்கீங்களே அய்யா.. கமலஹாசராம்ல..
:-)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம் இருக்குறதுனால தப்பிச்சிருவார்னு வைங்க..ஆளவந்தான் மாதிரி இவரோட ஐடியா இருந்தா படம் ஊத்திக்கிரும்
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜெயகுமார்...
ஆனால் கமல் அவர்கள் ஆளவந்தான் படம் மட்டும் ஐடியா குடுக்க இல்லை....
தேவர் மகன், மகாநதி, தசாவதாரம், விருமாண்டி, அன்பே சிவம் என ஏராளமான படங்களுக்கு ஐடியா குடுத்து இருக்கார் !!!
Post a Comment